Published:Updated:

நாற்காலியில் சுப்பிரமணியன் சுவாமி... தரையில் பொன்.ராதாகிருஷ்ணன்

நாற்காலியில் சுப்பிரமணியன் சுவாமி... தரையில் பொன்.ராதாகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
News
நாற்காலியில் சுப்பிரமணியன் சுவாமி... தரையில் பொன்.ராதாகிருஷ்ணன்

- இதைக் கேட்டால் குறை சொல்வதா?திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்

‘திராவிட ஆட்சி 50 ஆண்டுகள்’ என்ற தலைப்பில் பல்வேறு ஆளுமைகளின் கட்டுரைகளை கடந்த 12.3.17 இதழில் வெளியிட்டிருந்தோம். இதுபற்றி திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அனுப்பிய கட்டுரையின் சென்ற இதழ் தொடர்ச்சி  இது.

நாற்காலியில் சுப்பிரமணியன் சுவாமி... தரையில் பொன்.ராதாகிருஷ்ணன்

‘ஈ.வெ.ரா தன் வாழ்நாளில் எப்போதாவது தமிழ்நாட்டுத் தாழ்த்தப்பட்டோருக்காகப் போராடியிருக்கிறாரா?’ என்று பத்திரிகையாளர் சுப்பு தன் கட்டுரையில் கேட்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நாற்காலியில் சுப்பிரமணியன் சுவாமி... தரையில் பொன்.ராதாகிருஷ்ணன்

‘பறையன் பட்டம் ஒழியாமல், சூத்திரப் பட்டம்  ஒழியாது’ என்றவர் - ஆதிதிராவிடர்களின் உரிமைகளுக்கென்றே நூற்றுக்கணக்கான மாநாடுகள் நடத்தியவர் - ஈரோடு, மயிலாடுதுறை, திருச்சி உச்சிப் பிள்ளையார் கோயில் போன்ற கோயில்களில் தாழ்த்தப்பட்டவர்களை உள்ளே நுழையச் செய்தவர் - நீடாமங்கலம் காங்கிரஸ் மாநாட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் அமர்ந்து சாப்பிட்டார்கள் என்பதற்காக அவர்களை மொட்டை அடித்து சித்ரவதை செய்ததை எதிர்த்து, அதே ஊரில் சுயமரியாதை இயக்க மாநாடு நடத்தி, தாழ்த்தப்பட்டவர்களை பங்கேற்கச் செய்தவர் தந்தை பெரியார் அல்லவா?

‘சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏன் இதுவரை ஒரு தாழ்த்தப் பட்டவரை நீதிபதியாக நியமிக்கவில்லை’ என்று பெரியார் குரல் கொடுத்த நிலையில், அதனை ஏற்று, ஏ.வரத ராசன் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட முழுக் காரணமாக இருந்தவர் முதல் அமைச்சர் கலைஞர். உச்ச நீதிமன்றம் சென்ற முதல் தாழ்த்தப்பட்ட சமுதாய நீதிபதியும் அவர்தான் என்ற வரலாற்றை மறைக்கலாமா? ‘தாழ்த்தப்பட்டவர் உட்பட அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை தேவை’ என்ற இறுதிப் போராட்டத்தை நடத்தியவர் தந்தை பெரியார்தான். அதற்கான சட்ட வடிவம் கொடுத்ததும் தி.மு.க ஆட்சியில் கலைஞர்தானே! அந்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றவர்கள் உயர்ஜாதிப் பார்ப்பனர்கள் என்பதை வசதியாக மறைப்பது ஏன்?

வைக்கம் வரை சென்று தீண்டாமையை எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்றதன் காரணமாக ‘வைக்கம் வீரர்’ என்று திரு.வி.க அவர்கள் ‘நவசக்தி’யில் பாராட்டவில்லையா தந்தை பெரியாரை?

நாற்காலியில் சுப்பிரமணியன் சுவாமி... தரையில் பொன்.ராதாகிருஷ்ணன்

காஞ்சி மடத்துக்கு முன் பெரியார் சிலை வைக்கப்பட்டது பற்றியும் குறை கூறப்பட்டுள்ளது. ‘தீண்டாமை க்ஷேமகரமானது’ என்று சொல்லுகிற - விதவைப் பெண்களைத் தரிசு நிலத்துக்கு ஒப்பிட்டுக் கூறுகிற மதத் தலைவரின் மடத்துக்கு முன் சாதி ஒழிப்புக் கொள்கைக்காகவும், பெண்ணுரிமைக்காகவும் தம் வாழ்நாள் முழுவதும் உழைத்த தலைவருக்கு சிலை வைப்பது எப்படிக் குற்றமாகும்? சுப்பிரமணியன் சுவாமி சென்றால் சங்கர மடத்தில் சங்கராச்சாரியார் பக்கத்தில் சமமாக நாற்காலி போட்டு அமர முடியும். ஆனால், மத்திய அமைச்சராக இருந்தாலும் பொன்.ராதாகிருஷ்ணன் சங்கராச்சாரியார்முன் தரையில் அமர்வது ஏன்? இதை நாங்கள் கேட்டால், ‘இந்து மதத்தைக் குறை சொல்கிறார்கள்’ என்று சொல்வதில் பொருள் இருக்கிறதா?

நாற்காலியில் சுப்பிரமணியன் சுவாமி... தரையில் பொன்.ராதாகிருஷ்ணன்

கீழ்வெண்மணியில் தலித் வீடுகள் எரிக்கப் பட்டபோது ஈ.வெ.ரா. தலித்துகளுக்கு எதிராகப் பேசினாராம். இப்படி எல்லாம் அபாண்டமாகப் பழி சுமத்தலாமா? அந்த நிகழ்ச்சிக்காகக் கடுமையாகக் கண்டனம் தெரிவித்தவர் பெரியார். ‘இதுபோன்ற அராஜகங் களைத் தடுக்க இந்த ஆட்சிகளால் முடிய வில்லை. இதுபோன்றவை நடக்காமல் தடுக்கப்பட அந்நியர் ஆண்டாலும் பரவாயில்லை’ என்று எழுதியவர் ஆயிற்றே பெரியார்.

நாற்காலியில் சுப்பிரமணியன் சுவாமி... தரையில் பொன்.ராதாகிருஷ்ணன்
நாற்காலியில் சுப்பிரமணியன் சுவாமி... தரையில் பொன்.ராதாகிருஷ்ணன்

‘தி.மு.க ஆட்சியில் ஏதும் சிறப்பாக நடக்க வில்லை’ என்று கூறுவது உண்மைக்கு மாறானது. சுயமரியாதைத் திருமணச் சட்டம், பெரியார் நினைவு சமத்துவபுரம், மனிதனை மனிதன் வைத்து இழுக்கும் கை ரிக்‌ஷாவை ஒழித்து சைக்கிள் ரிக்‌ஷா வழங்கியது, பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம், நடைபாதைகளில் குடியிருந்த அவலத்தைப் போக்கும் குடிசை மாற்று வாரியத் திட்டம், ஆதிதிராவிடர்களுக்கென்று இந்தியாவிலேயே முன்மாதிரியான இலவச வீடுகள் வழங்கும் திட்டம், உடல் ஊனமுற்றவர்களை மாற்றுத் திறனாளிகள் என்று பெயர் கொடுத்து மதித்து அவர்களுக்கான உதவி வழங்கும் திட்டம் என்று பொருளாதார வளர்ச்சித் திட்டங்களில்கூட சமூகநீதிப் பார்வை என்பது தி.மு.க ஆட்சிக்கே உரித்தானதல்லவா?

அன்னை நாகம்மையார், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், அன்னை தெரசா போன்ற பெருமக்களின் பெயரில் திருமண நிதி உதவித் திட்டம், விதவைத் தாய்மார்களுக்கு திருமண நிதி உதவித் திட்டம், ஏழைப் பெண்கள் உயர்கல்வி பெறும் திட்டம், ஏழைக் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்துத் திட்டம் என்பதெல்லாம் உயர்நிலையில் வைத்துப் போற்றிப் பாராட்டப்பட வேண்டியவை. ‘பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கப்பட வேண்டும்’ என சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டிலும் (1928), செங்கற்பட்டில் நடைபெற்ற முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டிலும் (1929) நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் கலைஞர் 1989-ல் அந்தச் சட்டத்தை நிறைவேற்றினார்.

‘இந்த அமைச்சரவையே தந்தை பெரியாருக்குக் காணிக்கையாக்கப் பட்டது தானே’ என்று அண்ணாவும், ‘இது சூத்திரர்களுக்காக சூத்திரர் களால் ஆளப்படும் அரசு’ என்று கலைஞரும் சட்டப் பேரவையில் அறிவித்த பிரகடனங்கள், குறிப்பிட்டவர்களை நிதானம் இழக்கச் செய்திருக்கலாமோ? திராவிட இயக்கம் என்றால் காழ்ப்பு உணர்ச்சி என்ற கறைபடிந்த கண்ணாடியைக் கழற்றிவிட்டுப் பார்க்கக் கற்றுக்கொள்ளட்டும்.

பச்சைப் பொய்!

த்திரிகையாளர் சுப்பு, ‘கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, திண்ணியம் என்ற ஊரில், பஞ்சாயத்துத் தலைவரின் ஊழலைப் பற்றிக் கேள்வி கேட்டதற்காக, ஏழை தலித் ஒருவர், மனித மலத்தை உண்ணும்படி தண்டிக்கப்பட்டார்’ என்று எழுதியுள்ளார். தி.மு.க மீது பழி போடவேண்டும் என்று காத்திருக்கும் சுப்பு போன்றவர்கள், அந்த நோக்கில் உண்மைக்கு மாறான எந்த ஒன்றையும் சொல்லத் தயங்க மாட்டார்கள் என்பதைத்தான் இந்த வரிகள் காட்டுகின்றன. திருச்சிக்கு அருகில் உள்ள திண்ணியத்தில் அந்தக் கொடுமை நடைபெற்றது 2002-ம் ஆண்டு மே மாதம். அப்போது கலைஞரா முதலமைச்சராக இருந்தார்? ஜெயலலிதா என்பது அவருக்குத் தெரியாதா? இப்படி அப்பட்டமாகத் திரித்துப் பேசும் இவர், ‘மூத்த பத்திரிகையாளராம்’. கொடுமை!

- சுப.வீரபாண்டியன்
(திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை)