Published:Updated:

இலங்கையை கண்டித்து மறியல் 38 பள்ளி மாணவர்கள் கைது

இலங்கையை கண்டித்து மறியல் 38 பள்ளி மாணவர்கள் கைது

கோவை: இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரி கோவையில் சாலை மறியல் செய்த பள்ளி மாணவர்கள் 38 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை, ஒண்டிபுதூரில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சுமார் 50 பேர் வகுப்புகளை புறக்கணித்து, பள்ளிக்கு வெளியே இருக்கும் கோவை - திருச்சி நெடுஞ்சாலையில் இன்று நண்பகல் 12 மணிக்கு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.


##~~##
அப்போது, இலங்கை மீது சர்வதேச, சுதந்திரமான, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் தலையீடு இல்லாத விசாரணை நடத்த வேண்டும்; தனி ஈழத்துக்காக அங்குள்ள தமிழ் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மாணவர்கள் கோஷம் எழுப்பினர்.
போலீஸார் வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் மாணவர்கள் கலைந்து செல்லாததால், 38 மாணவர்களை போலீஸார் கைது செய்தனர்.
அடுத்த கட்டுரைக்கு