Published:Updated:

`முதல்வர் எங்கள் கண்ணீரைத்தான் சம்பாதித்திருக்கிறார்!’ - சேலம் கிராம மக்கள் வேதனை

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்களின் அன்பை சம்பாதிப்பதற்குப் பதிலாகக் கண்ணீரைத்தான் சம்பாதித்துள்ளதாக சேலம் கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சேலம் டு சென்னை 8 வழி பசுமைச் சாலையால் பாதிக்கப்பட்ட கிராமமான சேலம் ராமலிங்கபுரத்தில் மாரியம்மன் கோயிலில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார்கள். 8 வழிச்சாலை திட்டத்தைத் தடுத்து நிறுத்தக் கோரி மாரியம்மன் சிலையின் காலடியில் புகார் மனுவை வைத்து பொதுமக்கள் வேண்டினர். இதில் சில பெண்களுக்கு சாமி வந்து, ``ஊரையும் கோவிலையும் அழிக்க நினைப்பவர்களை அழித்துவிடுவேன். இங்கு ரோடு போடுபவர்கள் நல்லா இருக்க முடியாது'' என்று வாக்கு கூறினார்கள்.

இதுபற்றி ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த தனம் கூறுகையில், ''எங்க வீடு, காலி நெலம் எல்லாமே இந்த 8 வழிச் சாலைகாக எடுக்கப் போவதாக முட்டுக்கல் நட்டுட்டு போயிட்டாங்க. நாங்க. எங்க வீட்டையும் காலி நிலத்தையும் ரோடு போடுவதாகச் சொல்லி பிடுங்கிகிட்டுப் போயிட்டா, நாங்க எங்க போவோம். அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வோம்?

நாங்க கூலி வேலை செய்து அதில் கிடைக்கிற வருமானத்தில் வாழ்ந்துட்டு இருக்கிறோம். ஏற்கெனவே 4 ரோடு போடுவதாகச் சொல்லி பாதி நெலத்தைப் பிடுங்கிக் கொண்டார்கள். மீதி இருப்பதையும் பிடுங்கிக்கொண்டால், நாங்க எப்படி வாழ முடியும்? இந்த 8 வழிச் சாலையால் ராமலிங்கபுரம் என்ற கிராமமே இல்லாமல் போகிறது. ஓர் ஆண்டுக்கு முன்னாடிதான் ஒரு கோடி போட்டு மாரியம்மன் கோயில் கட்டினோம். அந்தக் கோயிலையும் இடிக்கப் போறாங்க. கோயிலுக்குப் பக்கத்தில் இருக்கிற அரசு நடுநிலைப்பள்ளியை இடிக்கப் போகிறார்கள்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களின் அன்பை சம்பாதிக்கவில்லை. மக்களின் கண்ணீரைத்தான் சம்பாதிக்கிறார். இந்த 8 வழிச் சாலையால் நிறைய ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதனால் இந்த 8 வழிச்சாலை வேண்டாம். எவ்வளவு பெரிய மந்திரியாக இருந்தாலும் கோயிலை இடித்தால் சாமி பாவம் சும்மாவிடாது'' என்றார்.