Published:Updated:

நியூஸ் ரூம்!

நியூஸ் ரூம்!
பிரீமியம் ஸ்டோரி
News
நியூஸ் ரூம்!

நியூஸ் ரூம்!

நியூஸ் ரூம்!

குளத்தை ஆக்கிரமித்துக் கட்சி ஆபீஸ்?

நியூஸ் ரூம்!


திருவண்ணாமலை அ.தி.மு.க தெற்கு மாவட்டச் செயலாளர் பெருமாள் நகர் ராஜன். ‘10 கோடி ரூபாய் மதிப்பிலான சுடுகாட்டுப் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து இவர் கட்சி அலுவலகம் கட்டியுள்ளதாகவும், அந்த இடத்தை தமிழக அரசு மீட்க வேண்டும்’ எனவும் அண்ணாமலையார் பேரவை என்ற பெயரில் நகரம் முழுக்க போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் நம்மிடம், ‘‘ராஜன் மாவட்டச் செயலாளராகப் பொறுப்பேற்றதும், வேலூர் ரோட்டில் புதியதாக மாவட்டக் கட்சி அலுவலகம் கட்டினார். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, அதற்குப் பக்கத்திலேயே முள் புதராக இருந்த இடத்தை நிரவி, தகரக் கொட்டகை அமைத்து, அதை வேட்பாளர் அலுவலகமாகப் பயன்படுத்தினார். பிறகு, செங்கல் சுவரை எழுப்பி மூன்று ரூம்களாக விரிவாக்கம் செய்துவிட்டார்’’ என்றார் அவர்.

ராஜனிடம் பேசியபோது, ‘‘இது புறம்போக்கு இடம் இல்லை. இந்த இடத்துக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் வாடகை கட்டி வருகிறேன். என்னைப் பழிவாங்கும் நோக்கில் யாரோ இதைச் செய்கிறார்கள். போஸ்டர் ஒட்டியவர்களைக் கண்டுபிடிக்க, எஸ்.பி.யிடம் புகார் கொடுத்துள்ளேன்’’ என்றார்.

நியூஸ் ரூம்!

அமெரிக்காவிலும் விரட்டிய ஹைட்ரோ கார்பன்!

‘ஹைட்ரோ கார்பன் திட்டத்தை வாபஸ் வாங்கு!’ என்ற நெடுவாசல் மக்களின் போராட்டக்குரல் அமெரிக்காவிலும் ஒலித்ததைக் கேட்டு மிரண்டுபோனார், இந்திய பெட்ரோலியத் துறை அமைச்சரான தர்மேந்திர பிரதான். அவர், கடந்த வாரம் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரம் சென்றிருந்தார். அதை அறிந்த அங்குள்ள தமிழர்கள் பெருமாள், பாலாஜி, நீல் ஆம்ஸ்ட்ராங், சுனில், சத்யா, ராஜா ஆகியோர் கையில் ஒரு ஃபைலுடன் சென்றனர். அந்த ஃபைலை அமைச்சரிடம் கொடுத்தனர். ஃபைலை வாங்கிப் புரட்டினார் அமைச்சர். ‘ஸ்டாப் ஹைட்ரோ கார்பன்’ என்பதைப் பார்த்ததும் அமைச்சரின் முகம் மாறியது. அதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. “அமெரிக்காவின் பெட்ரோலியத் தலைநகரில் வேலைபார்க்கும் நீங்களே இந்தக் கோரிக்கையை முன்வைப்பது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. உங்கள் மாநிலமும் இந்தியாவும் வளம்பெற வேண்டாமா?’’ என்று அவர்களிடம் அமைச்சர் கேட்டுள்ளார். “பெட்ரோலிய நிறுவனங்களில் வேலை செய்யும் அனுபவத்தால் தான், இந்தத் திட்டம் தமிழ்நாட்டுக்குக் கேடு என்பதை உறுதியாகச் சொல்கிறோம். இந்தத் திட்டத்தை தமிழ்நாட்டில் இருந்து வாபஸ் பெறுங்கள்” என்று சொல்லியிருக்கிறார்கள் அவர்கள். தர்மேந்திர பிரதான் திகைத்து விட்டாராம்.