Published:Updated:

“அரசு வழக்கறிஞர்களை நியமிப்பது ஓடி ஒளிவதற்கு அல்ல!”

“அரசு வழக்கறிஞர்களை நியமிப்பது ஓடி ஒளிவதற்கு அல்ல!”
பிரீமியம் ஸ்டோரி
News
“அரசு வழக்கறிஞர்களை நியமிப்பது ஓடி ஒளிவதற்கு அல்ல!”

நீதிமன்றத்திடம் குட்டு வாங்கிய புதுச்சேரி

ரசு வழக்கறிஞர்களின் செயல்படா தன்மையால் சென்னை உயர் நீதிமன்றத்திடம் குட்டுப்பட்டு நிற்கிறது, புதுச்சேரி அரசு.

“அரசு வழக்கறிஞர்களை நியமிப்பது ஓடி ஒளிவதற்கு அல்ல!”

புதுச்சேரி அரசுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்படும் சிவில், குற்றவியல் மற்றும் ரிட் வழக்குகளைக் கையாள்வதற்காக 10 வழக்கறிஞர்களை புதுச்சேரி அரசு அமர்த்தி உள்ளது. இவர்களுக்கான அலுவலகங்கள், சம்பளம் என மாதம்தோறும் பல லட்சங்களை புதுச்சேரி அரசு செலவு செய்கிறது. இந்நிலையில், இந்த வழக்கறிஞர்களின் செயல்பாடுகள் குறித்து உயர் நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.

 தனக்கு சாதிச் சான்றிதழ் அளிக்க வட்டாட்சியர் அலுவலகம் மறுப்பதாகப் புதுச்சேரியைச் சேர்ந்த பட்டியல் இனத்தவர் ஒருவர் ரிட் மனு ஒன்றை, 2016-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த வழக்கு, கடந்த பிப்ரவரி 28-ம் தேதி காலையில் நீதிபதிகள் கே.கே.சசிதரன் மற்றும் வி.பார்த்திபன் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதில், புதுச்சேரி அரசின் கூடுதல் துணை வழக்கறிஞர்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“அரசு வழக்கறிஞர்களை நியமிப்பது ஓடி ஒளிவதற்கு அல்ல!”

சி.டி.ரமேஷ் ஆஜராகியிருக்க வேண்டும். ஆனால், அவர் ஆஜராகவில்லை.  எனவே, விசாரணையை மதியம் 12 மணிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 12 மணிக்கும் அவர் ஆஜராகவில்லை. அதனால், நீதிபதிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து உத்தரவிட்டனர். அதில், “இந்த வழக்கில், புதுச்சேரி அரசு சார்பாக வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை. இங்கு ஆஜராகியிருக்க வேண்டிய கூடுதல் துணை வழக்கறிஞர் ரமேஷ், ஒரு இளம் வழக்கறிஞரை அனுப்பியிருக்கிறார். அந்த இளம் வழக்கறிஞரும், கூடுதல் துணை வழக்கறிஞருக்குத்தான் உதவியாக செயல்பட வேண்டுமே தவிர, இங்கு ஆஜராக முடியாது.  எனவே, அனைத்து விவரங்களுடன் தாசில்தார், மாவட்ட ஆட்சியர், சட்டத்துறைச் செயலர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்” என்று கோபத்துடன் உத்தரவிட்டனர்.

 மேலும் அந்த உத்தரவில், “புகார்தாரருக்கு ஏன் சாதிச் சான்றிதழ் அளிக்கப்படவில்லை என்ற கேள்விக்கு ஏற்புடைய பதிலைத்தர யாருக்கும் தெரிய வில்லை. அரசுக்கெதிரான வழக்குகள் விசாரணைக்கு வரும்போதெல்லாம் ஆஜராகாமல் இருக்கும் இவர்களின் மனநிலை எங்களுக்குத் தெளிவாகப் புரிகிறது. அரசுக்காக வழக்காடத்தான் நீங்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறீர்களே தவிர ஓடி ஒளிவதற்கு இல்லை” என்றனர்.

 இப்படிப்பட்டவர்களை அரசு வழக்கறிஞர்களாக நீடிக்க எப்படி அனுமதிக்கிறார், சட்டம் படித்த முதல்வர் நாராயணசாமி?

- ஜெ.முருகன்
படம்: அ.குரூஸ்தனம்