Published:Updated:

புதுப்பட்டினம் மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை கடற்படை மீ்ண்டும் அட்டூழியம்

புதுப்பட்டினம் மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை கடற்படை மீ்ண்டும் அட்டூழியம்
புதுப்பட்டினம் மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை கடற்படை மீ்ண்டும் அட்டூழியம்
புதுப்பட்டினம் மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை கடற்படை மீ்ண்டும் அட்டூழியம்

சென்னை: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர் தாக்குதலை நடத்தி வரும் நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் புதுப்பட்டினம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் இன்று தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளி்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கடற்படையினரால் தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் மீனவர்கள் 16 பேரை சிறைபிடித்திருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்கள் 53 பேரை இலங்கை கடற்படை பிடித்துச் சென்றது.

இதில், 34 மீனவர்கள் அண்மையில் விடுவிக்கப்பட்ட நிலையில் மேலும் 19 பேரை சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை விடுவிக்கும் வரையில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சோகம் நீடித்து வரும் நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் புதுப்பட்டினம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய எல்லையான 12ஆம் பாகம் அருகே புதுப்பட்டினம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை சுற்றி வளைத்தனர்.

இதில், ராமன் என்பவரின் பைபர் படகில் இருந்த பூமி உள்பட மூன்று பேரை இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். பலத்த காயம் அடைந்த மீனவர் பூமி மமேல்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தி வரும் தொடர் தாக்குதல் தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.