Published:Updated:

என்ன செய்தார் எம்.எல்.ஏ.?: என்.கே.கே.பி.ராஜா

என்ன செய்தார் எம்.எல்.ஏ.?: என்.கே.கே.பி.ராஜா

என்ன செய்தார் எம்.எல்.ஏ.?: என்.கே.கே.பி.ராஜா

என்ன செய்தார் எம்.எல்.ஏ.?: என்.கே.கே.பி.ராஜா

Published:Updated:
##~##
இளம் வயதில் தி.மு.க. மாவட்டச் செயலாளர், எம்.எல்.ஏ., அமைச்சர் என்று பல்வேறு பொறுப்புகளைப் பெற்றவர் ஈரோட்டு தடதட தலையான என்.கே.கே.பி.ராஜா. கடந்த தேர்தலில் ஜெயித்து அமைச்சரான ராஜா தொகுதிக்குள் வந்ததுமே சொன்னது என்ன தெரியுமா? ''என்னை சந்திக்க வருபவர்கள் சால்வை, மாலை அணிவிக்கக் கூடாது. அதற்கு பதில் நோட்டு புத்தகங்கள் கொடுத்தால், அதை ஏழை மாணவர்களுக்குக் கொடுப்பேன்!'' என்பதுதான்! தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அதனை எழுதியும் வைத்தார். ஆனால், சால்வை அறிவிப்பில் வாங்கிய நல்ல பெயர், சவுக்கடி விவகாரத்தில் வெளுத்துப்போனது. நிலத் தகராறு ஒன்றில் ராஜா தன்னைத் தாக்கியதாக, இவருடைய உறவினர் சிவபாலன் உடம்பு முழுக்க ரத்தத் தழும்புகளோடு மீடியாக்கள் முன்னால் நிற்க... ராஜா தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே தூக்கப்பட்டார். 
என்ன செய்தார் எம்.எல்.ஏ.?: என்.கே.கே.பி.ராஜா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிடுகிடு ஏற்றம்... 'கிர்ர்’ சரிவு... என அரசியலின் ஏற்ற இறக்கங்களை இளம் வயதிலேயே அனுபவித்து இப்போது மீண்டும் மாவட்டச் செயலாளராக மாறி இருக்கும் ராஜா, தனது ஈரோடு தொகுதியை எப்படி வைத்து இருக்கிறார்?

ஈரோடு மாநகராட்சி, அதைச் சுற்றி உள்ள சூரம் பட்டி, காசிபாளையம், பெரியசேமூர், வீரப்பன்சத்திரம் நகராட்சிப் பகுதிகள் உள்ளடக்கியது ஈரோடு சட்டமன்றத் தொகுதி. தற்போது இது கிழக்கு, மேற்கு ஈரோடு என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.

''சிவபாலன் விவகாரத்தில் என்.கே.கே.பி.ராஜா நடந்துகொண்டதை மக்கள் இன்றளவும் மறக்கவில்லை. ராஜாவைத் தடாலடியான ஆளாக அந்த சம்பவம் அடையாளப்படுத்தியதை அவ்வளவு சீக்கிரத்தில் மாற்றவும் முடியாது. இந்தப் பகுதி நெசவாளர்கள் நிறைந்த பகுதி. அந்தத் துறை அமைச்ச ராகவே ராஜா இருந்தார். ஆனாலும், நெசவாளர்களுக்காக அவர் எதையும் செய்யவில்லை. ஒருங்கிணைந்த மஞ்சள் விற்பனை வளாகம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. ஆனால், வெறும் மஞ்சள் வணிக வளாகத்தை அமைத் தது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தைத்தான் கொடுத்தது. ஈரோடு நகரத்தின் மிகப் பெரிய பிரச்னை போக்கு வரத்து நெரிசல்... இதைத் தீர்க்க பாலம் கட்டுவேன் என்று வாக்குறுதி கொடுத்தார் ராஜா. இதற்காக, தன்னுடைய அலுவலகத்தில் ஒரு மாதிரியை வைத்து ஷோ காட்டினார். ஆனால், எல்லாவற்றையும் விட்டுவிட்டு புதிய வடிவில் பாலத்தைக் கட்டத் தொடங்கினார். திடீரென்று அதுவும் நிறுத்தப்பட்டது. தற்போது அந்தத் திட்டத்தைக் கைவிடும்படி மாநில அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளார் கலெக்டர். பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்திய பிறகுதான் சாலை அமைப்போம் என்று கூறி, கடந்த ஐந்து ஆண்டுகளாக சாலை அமைக்கும் பணியும் நடக்கவில்லை.  அதனால் பிரதான சாலைகள் தவிர்த்து மற்ற சாலைகள் மிக மோசமாக உள்ளன. அமைச்சராக இருந்த காலத்தில் தன்னுடைய ஸ்கார்பியோ காரில் தனக்கு ஃபோகஸ் லைட் போட்டுக்கொண்டு நகர் வலம் வருவார். பதவி பறிபோன பிறகு, யாரையும் சந்திப்பதில்லை. எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு வருவதையும் நிறுத்திக்கொண்டார். அவரை வீட்டுக்குப் போய் பார்க்கலாம் என்றால், எந்த வீட்டில் இருக்கிறார் என்பதும் தெரியாது. அதனால் அவரை சந்திப்பதே பெரிய சாதனைதான். இப்போ மறுபடியும் மாவட்டச் செயலாளர் ஆனதால்,  தலை காட்டுறார்!'' என்கிறார்கள் தொகுதிக்குள் நுழைந்த உடனேயே எதிர்ப்பட்ட சிலர்.

கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிலர், ''காவிரி ஆறு ஓடும் ஈரோடு நகரத்தில் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. நகரப் பகுதிகளிலாவது ஒரு நாள்விட்டு ஒரு நாள் தண்ணீர்விடுகிறார்கள். சுற்றுப் பகுதி களில் ஒரு வாரத்துக்கு ஒரு முறை அல்லது 10 நாளைக்கு ஒரு முறைதான் தண்ணீர் விடுகிறார்கள். காசிபாளையம் நகராட்சி மின் கட்டணம் செலுத்தவில்லை என்று மின் இணைப்பையே துண்டிச்சுட்டாங்க. இனி எப்போ தண்ணீர் வரும்னு தெரியலை. இதைக்கூட மக்கள் பிரதிநிதியா இருந்து அவர் கவனிக்கலை.

கழிவு நீர் கலப்பதால் காவிரியில் கால் வைக்கவே கூச்சமா இருக்கு. இந்தப் பகுதியில் கால்நடைகள் கருத்தரிப்பதும் பெரிதாக பாதிக்கப்பட்டு உள்ளது. கேன்சர் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதற்குக் காரண மான சாயப் பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளைச் சுத்திகரித்து அதை கடலில் கலக்கும் ஒருங்கிணைந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஏற்படுத்தி இருக்கலாம். எம்.எல்.ஏ. ராஜா மக்கள் நலத் திட்டங்கள் எதிலும் கவனம் செலுத்துவது இல்லை. ஈரோடு நகரத்தில் உள்ளவங்களுக்கு இது வரை இலவச கலர் டி.வி. கொடுக்கலை. அமைச்சர் ஆனதும் அவர் செய்த ஒரே விஷயம், கேபிள் டி.வி., டிரான்ஸ்போர்ட், மினரல் வாட்டர் என்று 10-15 தொழில்களைத் தொடங்கியதுதான். பார்க்கும் இடங்களை எல்லாம் வாங்கிப் போட்டு ரியல் எஸ்டேட் தொழிலிலும் கொடி கட்டிப் பறக்கிறார் ராஜா. அவர் எம்.எல்.ஏ-வாகி எங்களுக்காக செஞ்ச சாதனைகள் இதுதான் சாமி...' என்கிறார்கள் ஆதங்கத்தோடு.

பொது நல ஆர்வலர்கள் சிலர், ''மக்கள் அளிக்கும் மனுக்களை வாங்கி, துறைரீதியா சந்தித்து தீர்வு பெற்றுத் தருகிறேன் என்று ஒவ்வொரு துறை அதிகாரிகளை சந்திக்கிறதுக்காக தன்னுடைய கையாட்களை நியமிச்சார். இதை வெச்சுக்கிட்டு அவங்க பண்ற கூத்து தாங்கலை. ஆளாளுக்கு புத்தம் புது ஸ்கார்ப்பியோ காரை எடுத்துக்கிட்டு, சுத்திச் சுத்தி வராங்க. ஈரோட்டை மாநகராட்சியா அறிவிக்கணும்னு யாருமே கேட்கலை. பெரியார் 1917-ல் நிறைவேற்றிய தீர்மானத்தை யாரோ முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பி இருக்காங்க. அதைப் பார்த்துத்தான் ஈரோட்டை மாநகராட்சி ஆக்கினார் கருணாநிதி. ஆனால், அப்படி மாநகராட்சியாக மாறியதில் யாருக்குமே நல்லது இல்லை. மாநகராட்சியான அடுத்த நாளே வரி கிட்டத்தட்ட 300 சதவிகிதம் அதிகமாகிடுச்சு. வீட்டு வாடகை

என்ன செய்தார் எம்.எல்.ஏ.?: என்.கே.கே.பி.ராஜா

300 முதல் 1000 வரை ஏத்திட்டாங்க!'' என்றார்கள் ஆதங்கமாக.

''ஈரோட்டில் எல்லா சமுதாய மக்களும் பயன்பெறும் வகையில் பெரியார் காலத்தில் ஒரு கல்லூரி உருவாக்கப்பட்டது. தற்போது சிக்கையன் நாயக்கர் கல்லூரி என்ற பெயரில் செயல்படும் இந்தக் கல்லூரியை அரசுக் கல்லூரியாக்க வேண்டும் என்று பலரும் போராடுகிறார்கள். ஆனால், அதற்கு ராஜா

என்ன செய்தார் எம்.எல்.ஏ.?: என்.கே.கே.பி.ராஜா

முட்டுக்கட்டை போட்டு வருகிறார். வ.உ.சி. பூங்காவில் 400 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்து அடக்கம் செய்யப்பட்ட முஸ்லிம் பெரியவர் அஜ்ரத் பசல்ஷா காதிரி தர்கா உள்ளது. இது ஈரோட்டில் மேடான பகுதி. அதனால் இங்கு தண்ணீர் தொட்டி கட்டினால், ஈரோடு நகர் முழுவதற்கும் தண்ணீர் சப்ளை செய்யலாம் என்பதால், பெரியார் 1917-ல் அந்த நிலத்தை வாங்கினார். தற்போது அந்த இடத்தில் பல கோடி செலவில் ஒரு ஆஞ்சநேயர் கோயிலை எழுப்பி உள்ளனர். அதன் பிறகு பிரச்னை கிளம்பவே, இரண்டு வழிபாட்டுத் தலங்களுக்கும் மின்சாரத்தை நிறுத்திவிட்டனர். கோயிலுக்கு மின் இணைப்பைக் கொடுத்த அதிகாரிகள், தர்காவுக்குத் தர மறுக்கிறார்கள். 80 அடி சாலை விவகாரத்தில் சாலையோரக் கோயிலைக் காப்பாற்றுவதற்காக கிறிஸ்துவ பள்ளிக்கூடத்தை இடிக்க முயல... கிறிஸ்துவர்களும் ராஜா மேல் கோபத்தில் உள்ளனர்!' என்கிறார்கள் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்கள் சிலர்.

''ஈரோட்டில் நாளுக்கு நாள் தொழிற்சாலைகள் பெருகி வருகின்றன. இளம் வயதில் அமைச்சராக வாய்ப்பு கிடைப்பது அரிது. ராஜாவுக்கு 42 வயதில் அமைச்சர் பதவி கிடைத்தது. இந்தப் பதவியை வைத்து அவர் தொகுதிக்கு எத்தனையோ ஆக்கபூர்வப் பணிகளைச் செய்து இருக்கலாம். ஆனால், அவரோ நிலம் வாங்குவதிலும், கட்டப்

பஞ்சாயத்து செய்வதிலுமே குறியாக இருந்தார். தடாலடித்தனமும் அதிக ஆட்களின் சேர்க்கையும் ராஜா மீது அதிருப்தியைக் கிளப்பி இருக்கிறது...'' என்கிறார்கள் ஈரோட்டில் உள்ள பிசினஸ் புள்ளிகள் பலரும்.

ராஜாவுக்கு ஆதரவான சிலரோ, ''அண்ணன் அமைச்சராக இருந்த காலத்தில் தன்னுடைய தொகுதி நிதியில் இருந்து ஈரோடு தொகுதிக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளின் பள்ளிகளுக்குக் கூடுதல் கட்டடம், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, கிராமச் சாலைகள் என நிறைய செய்தார். ஈரோட்டில் நிலவும் தண்ணீர்ப் பிரச்னையைத் தீர்க்க ஆழ்துளைக் கிணறுகள் போட நடவடிக்கை எடுத்தார். மாநகராட்சி விரைவில் போர் போட்டு தண்ணீர் எடுக்கப்போகிறது. பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில்

என்ன செய்தார் எம்.எல்.ஏ.?: என்.கே.கே.பி.ராஜா

20 லட்சத்தில் நடை மேம்பாலம் கட்டும்  பணியும் விரைவில் தொடங்கும்.

என்ன செய்தார் எம்.எல்.ஏ.?: என்.கே.கே.பி.ராஜா

250 கோடியில் கதவணையில் இருந்து ஈரோட்டுக்கு தண்ணீர் கொண்டுவர முயற்சித்து வருகிறார். விரைவில்  ஒப்புதல் கிடைத்துவிடும்.

பெரியார் நகரில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி முடிந்துவிட்டது. சாயப் பட்டறைக் கழிவுகள் ஆற்றில் கலப்பதைத் தடுக்க அடிக்கடி அதிரடி சோதனை நடத்துவார். சமீபத்தில்கூட அப்படி நடவடிக்கை எடுத்து சில நிறுவனங்களை மூடினார். ஈரோடு மாநகராட்சி தவிர்த்து, மற்ற பகுதிகளில் இலவச கலர் டி.வி. கொடுக்கப்பட்டுவிட்டது. மாநகராட்சிப் பகுதியில் டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளார். அண்ணன், தான் செய்யும் எந்த விஷயத்தையும் விளம்பரப்படுத்தியது கிடையாது. தன் வேலையை ஒழுங்கா செஞ்சாப் போதும்னு நினைப்பார். அதனால், அவரைப்பத்தி மக்களுக்கு சரியாத் தெரியலை...'' என்கிறார்கள் தடாலடியாக!

என்ன செய்தார் எம்.எல்.ஏ.?: என்.கே.கே.பி.ராஜா
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism