Published:Updated:

அதிர்ச்சியில் ‘குடிமகன்’கள்... மகிழ்ச்சியில் பெண்கள்! - டாஸ்மாக் களேபரம்

அதிர்ச்சியில் ‘குடிமகன்’கள்... மகிழ்ச்சியில் பெண்கள்! - டாஸ்மாக் களேபரம்
பிரீமியம் ஸ்டோரி
News
அதிர்ச்சியில் ‘குடிமகன்’கள்... மகிழ்ச்சியில் பெண்கள்! - டாஸ்மாக் களேபரம்

அதிர்ச்சியில் ‘குடிமகன்’கள்... மகிழ்ச்சியில் பெண்கள்! - டாஸ்மாக் களேபரம்

டாஸ்மாக் கடைகளுக்கு ஒருநாள் லீவு விட்டால்கூட, உஷாராக முதல்நாளே வாங்கி ஸ்டாக் வைக்கும் ‘குடிமகன்’கள்கூட இந்தமுறை தடுமாறித்தான் போனார்கள். இந்தியா முழுக்க இருக்கும் ‘குடிமகன்’கள் மீது சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தி இருக்கிறது உச்ச நீதிமன்றம். ‘தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் உள்ள மதுக்கடைகளை மார்ச் 31-ம் தேதி இரவுக்குள் மூட வேண்டும்’ என்று தீர்ப்பு வந்திருக்கிறது. தமிழகத்தில் மதுவிலக்குக்காகப் போராடிய சமூக ஆர்வலர்களுக்கு இது ‘பாதி வெற்றி’யைத் தந்திருக்கிறது. தங்கள் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராடிவந்த தமிழகத் தாய்மார்கள் பலர் நிம்மதி அடைந்திருக்கிறார்கள். ஒரு தலைமுறையே மதுபோதைக்கு அடிமையாகி வாழ்வைத் தொலைத்த அவலம் இனி நிகழாது என்ற நிறைவு வந்திருக்கிறது. இன்னொரு பக்கம் இதில் பலருக்குத் தவிப்பு. ஏற்கெனவே கடனில் தவிக்கும் தமிழக அரசு இனி என்ன செய்யப்போகிறது என்று புரியவில்லை. இந்த உத்தரவால், பல ஸ்டார் ஹோட்டல்கள் மற்றும் கிளப்களில் இருக்கும் பார்களையும் மூட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ‘‘இதனால் சுற்றுலா மற்றும் வரி வருமானம் பெரிதும் குறையும். பல லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும்’’ என ஹோட்டல்கள் சங்கம் கவலைப்படுகிறது. எல்லோருக்கும் மேலாக பரிதவித்துப் போயிருப்பது ‘குடிமகன்’கள்தான். பல ஊர்களில் மொத்தமாகக் கடைகளுக்குப் பூட்டு போட்டுவிட, பல கிலோமீட்டர் தூரம் சென்று, பல மணிநேரம் க்யூவில் நின்று சரக்கு வாங்க வேண்டிய நிலைமை. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வங்கி வாசல்களில் நின்ற க்யூவை விட இது நீளம். ஒருகாலத்தில் தியேட்டரில் டிக்கெட் வாங்க க்யூ நெரியும். வரிசையில் நிற்பவர்களின் தோள் மீது ஏறி நடந்து முந்திச் சென்று வஸ்தாதுக்கூட்டம் ஒன்று டிக்கெட் வாங்கும். அந்தக் காட்சிகள் இப்போது டாஸ்மாக் வாசல்களில் மீண்டும் அரங்கேறியுள்ளன. க்யூவை ஒழுங்குபடுத்த போலீஸ் பாதுகாப்பும் பல இடங்களில் போடப்பட்டுள்ளது. 

அதிர்ச்சியில் ‘குடிமகன்’கள்... மகிழ்ச்சியில் பெண்கள்! - டாஸ்மாக் களேபரம்

தமிழகம் முழுக்க வலம்வந்த நம் நிருபர்களின் ரிப்போர்ட் இதோ...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அதிர்ச்சியில் ‘குடிமகன்’கள்... மகிழ்ச்சியில் பெண்கள்! - டாஸ்மாக் களேபரம்

இதெல்லாம் நெடுஞ்சாலையா? சென்னையில் எந்தெந்த ரோடுகள் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் என இந்தத் தீர்ப்புக்குப் பிறகே மக்களுக்குத் தெரிந்திருக்கிறது. அண்ணா சாலை, 100 அடி ரோடு, கிழக்குக் கடற்கரை சாலை, ராஜீவ் காந்தி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை என நெடுஞ்சாலைகள் சுற்றி வளைத்திருக்க, சென்னையில் 315 டாஸ்மாக் கடைகளில் 68 கடைகள் மூடப்பட்டுள்ளன. இதுதவிர, ரேஸ்கோர்ஸ் கிளப், காஸ்மாபாலிடன் கிளப், ஜிம்கானா கிளப் என சுமார் 100 கிளப்கள் மற்றும் ஹோட்டல்களில் பார்கள் மூடப்பட்டுள்ளன. திறந்திருக்கும் கடைகளில் நீண்ட க்யூ. கிளப்களில் ஹாயாக உட்கார்ந்து குடித்த பலரும் இப்போது திக்பிரமை பிடித்துப் போயிருக் கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்காக பல ‘குடிமகன்’கள் க்யூவில் நின்று சரக்கு வாங்கிக்கொடுத்து சம்பாதிக்கிறார்கள்.  

அதிர்ச்சியில் ‘குடிமகன்’கள்... மகிழ்ச்சியில் பெண்கள்! - டாஸ்மாக் களேபரம்

மதுரையில் மொத்தம் 262 டாஸ்மாக் கடைகளில், 128 கடைகள் மூடப்பட்டுள்ளன. ‘நேற்று இருந்த கடை இன்று இல்லையே’ என்று, நீதிமன்ற விவரம் தெரியாத அப்பாவிக் ‘குடிமகன்’கள் அதிர்ந்து போனார்கள். சோழவந்தான், மேல வளவு பகுதிகளில் மூடவேண்டிய கடைகளைத் திறந்துவைத்து வியாபாரம் செய்ததால், பொதுமக்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். ‘எல்லா கடைகளையும் அடையுங்கள்’ என்று சொல்லியும் பல இடங்களில் மக்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். நாகமலை புதுக்கோட்டை, சமயநல்லூர், வலையங்குளம், உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் நெடுஞ்சாலைக்கு அருகிலிருந்தும் சில கடைகளை மூடாமல், அதிகாரிகள் தில்லாலங்கடி வேலைகளைக் காட்டியுள்ளனர்.

அதிர்ச்சியில் ‘குடிமகன்’கள்... மகிழ்ச்சியில் பெண்கள்! - டாஸ்மாக் களேபரம்

தேனி மாவட்டத்தில் மொத்தம் 98 கடைகள் இருந்தன. அவற்றில், 77 கடைகள் அடைக்கப் பட்டுள்ளன. கொடைக்கானல், தேக்கடி, மூணாறு ஆகிய சுற்றுலா தலங்களுக்குச் செல்பவர்கள், வழியில் டாஸ்மாக் கடைகளில் சரக்குகளை வாங்கிச் செல்வது வழக்கம். இவர்கள் இப்போது தவித்துப்போயிருக்கிறார்கள். 

அதிர்ச்சியில் ‘குடிமகன்’கள்... மகிழ்ச்சியில் பெண்கள்! - டாஸ்மாக் களேபரம்

விருதுநகர் மாவட்டத்தில் இயங்கி வந்த 168 டாஸ்மாக் கடைகளில் 90 கடைகள் மூடப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை விருதுநகரின் நகர்ப் பகுதிக்குள் செயல்பட்டவை.

அதிர்ச்சியில் ‘குடிமகன்’கள்... மகிழ்ச்சியில் பெண்கள்! - டாஸ்மாக் களேபரம்
அதிர்ச்சியில் ‘குடிமகன்’கள்... மகிழ்ச்சியில் பெண்கள்! - டாஸ்மாக் களேபரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 129 கடைகளில் 88 கடைகள் மூடப்பட்டுள்ளன. ராமேஸ்வரம் தீவில் 11 கடைகளில் ஒன்பது கடைகள் மூடப்பட்டன. இதனால் ராமேஸ்வரம் தீவு, மண்டபம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள், சுற்றுலாப் பயணிகள் பாம்பனில் உள்ள மதுக்கடைகளில் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில், பாம்பனில் உள்ள இரண்டு கடைகளையும் மூட வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். பரமக்குடியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் மட்டுமே இப்போது உள்ளன. அங்கு குடிமக்கள் நூற்றுக்கணக்கில் திரள்வதால் வியாபாரிகளும் பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர். இந்த சூழலைப் பயன்படுத்தி, மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கிவந்து, பிற பகுதிகளில் மறைமுகமாக சிலர் கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.

அதிர்ச்சியில் ‘குடிமகன்’கள்... மகிழ்ச்சியில் பெண்கள்! - டாஸ்மாக் களேபரம்
அதிர்ச்சியில் ‘குடிமகன்’கள்... மகிழ்ச்சியில் பெண்கள்! - டாஸ்மாக் களேபரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்ட 160 கடைகளில், 104 கடைகள் மூடப்பட்டன. அடைக்கப்பட்ட கடைகளில் பார்கள் செயல்பட்டன. அங்கு, பாதிக்கதவு திறந்துவைக்கப்பட்டு அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ‘‘வழக்கமாக, திண்டுக்கல் மாவட்டத்தில் தினமும் மூன்று கோடி ரூபாய் வரை வியாபாரம் நடக்கும். கடைகள் மூடப்பட்டதால் ஏப்ரல் 1-ம் தேதி ஒரு கோடியே 27 லட்சம் ரூபாய் அளவுக்கே வியாபாரம் நடந்தது’’ என்று டாஸ்மாக் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

அதிர்ச்சியில் ‘குடிமகன்’கள்... மகிழ்ச்சியில் பெண்கள்! - டாஸ்மாக் களேபரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தமுள்ள 145 டாஸ்மாக் மதுக்கடைகளில் 84 கடைகள் மூடப்பட்டன. விளாத்திகுளத்தில் இருந்த மூன்று கடைகளும் மூடப்பட்டுவிட்டன. அதனால், 15 கி.மீ தூரத்திலுள்ள குளத்தூருக்குச் சென்று ‘குடிமகன்’கள் மது வாங்கி வருகின்றனர். மூடிய கடைகளை வேறு இடங்களில் திறக்க முயற்சி நடக்கிறது. கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான நடராஜபுரம், சிந்தாமணி நகர், செண்பகா நகர், கழுகுமலை கிரிவலப்பாதை, கெச்சிலாபுரம், காலாங்கரைப்பட்டி என பல குடியிருப்பு பகுதிகளில் புதிதாகக் கடைகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தது.

அதிர்ச்சியில் ‘குடிமகன்’கள்... மகிழ்ச்சியில் பெண்கள்! - டாஸ்மாக் களேபரம்

நெல்லை மாவட்டத்தில் மொத்தமுள்ள 173 மதுபானக் கடைகளில் 128 கடைகள் அடைக்கப்பட்டன. நெல்லை மாநகர எல்லைக்குள் ஐந்து கடைகள் மட்டுமே இப்போது உள்ளன. இந்தக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. நீண்ட வரிசையில் காத்திருந்து மது வாங்கிச் செல்கின்றனர்.

அதிர்ச்சியில் ‘குடிமகன்’கள்... மகிழ்ச்சியில் பெண்கள்! - டாஸ்மாக் களேபரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இப்போது 151 கடைகள் மூடப்பட்டுள்ளன. மூடப்பட்ட கடைகளை முக்கிய அரசியல் புள்ளிகள் ஆதரவுடன் கிராமப்புறங்களுக்கு நகர்த்த அதிகாரிகள் தீவிரம் காட்டுகின்றனர். அதற்கு, பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதனால், கிராமப்புறங்கள் போராட்டக்களங்களாக மாறி வருகின்றன.

அதிர்ச்சியில் ‘குடிமகன்’கள்... மகிழ்ச்சியில் பெண்கள்! - டாஸ்மாக் களேபரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 60 சதவிகிதக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி வந்து டீக்கடை, பெட்டிக்கடை என பல இடங்களில் கூடுதல் விலைக்குக் கள்ளத்தனமாக விற்பனை செய்யும் தொழில் உருவாகியுள்ளது.

அதிர்ச்சியில் ‘குடிமகன்’கள்... மகிழ்ச்சியில் பெண்கள்! - டாஸ்மாக் களேபரம்

வேலூர் மாவட்டத்தில் 215 டாஸ்மாக் கடைகளில் 179 கடைகள் மூடப்பட்டன. குடியாத்தம் பகுதியில் 12 கடைகள் இயங்கின. இப்போது, ஒரு கடை மட்டுமே இயங்கி வருகிறது. அங்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிமகன்கள் இந்தக் கடைக்கு படையெடுப்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றது அந்தப்பகுதி.

அதிர்ச்சியில் ‘குடிமகன்’கள்... மகிழ்ச்சியில் பெண்கள்! - டாஸ்மாக் களேபரம்
அதிர்ச்சியில் ‘குடிமகன்’கள்... மகிழ்ச்சியில் பெண்கள்! - டாஸ்மாக் களேபரம்

கடலூர் மாவட்டத்தில் 170 கடைகளில் 124 கடைகள் நீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்டுள்ளன. கடலூர் நகரத்தில் தனியார் பார்கள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதால் குடிமகன்கள் அனைவரும், பக்கத்தில் இருக்கும் புதுச்சேரி பார்டர் கிராமமான சோரியங் குப்பத்துக்குப்  படையெடுத்துள்ளனர். இதனால் அந்தப்பகுதியில் இருக்கும் சோதனைச்சாவடி போலீஸாருக்கு தற்போது யோகம் அடித்துள்ளது.

அதிர்ச்சியில் ‘குடிமகன்’கள்... மகிழ்ச்சியில் பெண்கள்! - டாஸ்மாக் களேபரம்

திருச்சி மாவட்டத்தில் 122 கடைகள் மூடப்பட்டன. பேருந்து நிலையம், காந்தி மார்க்கெட், மதுரை ரோடு, புதுக்கோட்டை நெடுஞ்சாலை, கரூர் நெடுஞ்சாலை என முக்கிய சாலைகளில் இருந்த கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. பல இடங்களில் குடிமகன்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் ஊழியர்கள் தவிக்க, தள்ளுமுள்ளு வரை செல்கின்றது.

அதிர்ச்சியில் ‘குடிமகன்’கள்... மகிழ்ச்சியில் பெண்கள்! - டாஸ்மாக் களேபரம்

தஞ்சாவூரில் 124 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், தஞ்சை நகருக்குள் 5 கடைகள் மட்டுமே செயல்படுவதால், பக்கத்து ஊர்களிலிருந்து வரும் குடிமகன்கள் காலை, மாலை, நாளை எனத் தேவைக்கு ஏற்ப சரக்குகளை வாங்கிச் செல்கிறார்கள். இதனால் ஒவ்வொரு கடையிலும் ஒரு மணி நேரத்துக்குள் மது பாட்டில்கள் தீர்ந்துவிடும் நிலை நீடிக்கிறது. ஒரு சில இடங்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த டாஸ்மாக் ஊழியர்கள், டோக்கன்கள் விநியோகம் செய்து கூட்டத்தைக் கலைக்கிறார்கள். 

அதிர்ச்சியில் ‘குடிமகன்’கள்... மகிழ்ச்சியில் பெண்கள்! - டாஸ்மாக் களேபரம்

கரூர் மாவட்டத்தில் 63 கடைகள் மூடப் பட்டுள்ளன. ஆனால், கடந்த 20 நாட்களுக்கு முன்பே இப்படித் தீர்ப்பு வரப்போவதை உணர்ந்த மாவட்ட நிர்வாகம், இ்தில், 30-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு வேறு இடம் பார்த்து வைத்துவிட்டது. அங்கெல்லாம் ‘கடை அமைக்கக் கூடாது’ என்று இப்போது மனு கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

அதிர்ச்சியில் ‘குடிமகன்’கள்... மகிழ்ச்சியில் பெண்கள்! - டாஸ்மாக் களேபரம்

சேலத்தில் இருந்த 228 கடைகளில், 137 கடைகள் மூடப்பட்டுள்ளன. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீடு, சேலத்தில் நெடுஞ்சாலை நகரில் இருக்கிறது. அவர் வீட்டுக்குச் செல்லும் வழியில் சாரதி ஹோட்டல் பக்கத்தில் டாஸ்மாக் கடையும், தேவூரில் முதல்வரின் மைத்துனர் வீட்டுக்குச் செல்லும் வழியில் இருந்த கடையும் ஸ்பெஷல் ஆர்டர் போட்டு கடந்த மார்ச் 22-ம் தேதியே மூடப்பட்டன. இப்போதும் மூடப்படாத அன்னதானப்பட்டி கடை வாசலில் போராட்டம் தொடர்ந்து நடக்கிறது.

அதிர்ச்சியில் ‘குடிமகன்’கள்... மகிழ்ச்சியில் பெண்கள்! - டாஸ்மாக் களேபரம்
அதிர்ச்சியில் ‘குடிமகன்’கள்... மகிழ்ச்சியில் பெண்கள்! - டாஸ்மாக் களேபரம்

திருப்பூர் மாவட்டத்தில் 230 கடைகளில் 164 கடைகள் மூடப்பட்டன. அகற்றப்பட்ட கடைகள் பல்லடம் பகுதிக்கு உட்பட்ட மாணிக்காபுரம், அவிநாசி பகுதியில் அமைந்திருக்கும் தெக்கலூர் ஆகிய பகுதிகளில் வரவிருப்பதாகத் தகவல் பரவியது. அதனால், பெண்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். கொச்சி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை செல்லும் கருமத்தம்பட்டி என்ற பகுதியில் மூடப்பட்ட மதுக்கடையை பூளக்காடு என்ற பகுதிக்கு மாற்ற இருப்பதாகத் தகவல் பரவியதும், இளைஞர்கள் வாட்ஸ்அப் மூலம் மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தினர்.

தமிழக அரசு விதிமுறைகளை மீறாமலும், குடியிருப்புப் பகுதிகளில் புதிய கடைகளைத் திறக்க விடாமலும் பார்த்துக்கொள்வதில்தான், இந்த நிம்மதியை உறுதி செய்ய முடியும்.

- விகடன் டீம்
படங்கள்: சு.குமரேசன், உ.பாண்டி,  எல்.ராஜேந்திரன், இ.ஜெ.நந்தகுமார், தீக்‌ஷித்

தள்ளாடும் புதுச்சேரி!

டாஸ்மாக் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு புதுச்சேரி வரை எதிரொலித்திருக்கிறது. தமிழகத்துடன் சேர்த்து புதுச்சேரியிலும் 168 கடைகளுக்கு மூடுவிழா நடத்தியிருப்பது ’குடி’மகன்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருப்பது ஒருபுறம் என்றால், இந்த விவகாரத்தில் அதிகம் நிலைகுலைந்து போயிருப்பது மாநில அரசுதான். பெரிய தொழிற்சாலைகள் எதுவும் புதுச்சேரியில் இல்லாத நிலையில், அரசுக்கு அதிக வருவாயை ஈட்டித் தரக்கூடிய இரண்டாவது இடத்தில் இருப்பது கலால் துறைதான். இந்தக் கடைகளை மூடியதன் மூலம் நடப்பு நிதியாண்டில் சுமார் 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று கூறுகிறார்கள் அதிகாரிகள். இதுவரை புதுச்சேரிக்கு வந்த குடிமகன்கள் தள்ளாடினர்; இனி அரசு தள்ளாடும்.

உறுதியாக நின்ற உச்ச நீதிமன்றம்!

சாலைப் பாதுகாப்பு ஆர்வலரான ஹர்மான் சிங் சித்து தொடர்ந்த ஒரு வழக்கில், பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலுவும் இணைந்துகொண்டு உச்ச நீதிமன்றம் வரை சென்று, இந்தத் தடைக்காகப் போராடினார். இப்போது, உச்ச நீதிமன்றம் உறுதியான தீர்ப்பு தந்துள்ளது. மார்ச் 31-ம் தேதியை இதற்கு இறுதிக்கெடுவாக விதித்திருந்த நிலையில், எப்படியாவது இதைத் தவிர்க்க தமிழக அரசு முயன்றது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர், நீதிபதிகள் சந்திரசூட், நாகேஸ்வரராவ் அமர்வின் முன்பு தமிழக அரசு சார்பில், நவம்பர் 28-ம் தேதி வரை அவகாசம் கேட்கப்பட்டது. மேலும், ‘மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும்’ என்றும், 500 மீட்டர் தூரம் என்பதை 100 மீட்டர் என குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் வாதம் வைக்கப்பட்டது. ‘‘மதுக்கடைகள் மூலம் ஆண்டுக்கு 25,500 கோடி ரூபாய் வருமானம் வருகிறது. இந்த உத்தரவைப் பின்பற்றினால் பெரும் வருமான இழப்பு ஏற்படும்’’ என்ற தமிழக அரசின் வாதத்துக்கு, ‘‘மக்களின் உயிரைவிட உங்களுக்கு வருமானம் முக்கியமா?” என எரிச்சலோடு நீதிபதிகள் கேள்வி கேட்டனர். 

தமிழகத்தில் இருந்த 5,672 டாஸ்மாக் கடைகளில் இப்போது 3,303 கடைகள் இந்த உத்தரவால் மூடப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான கடைகளை வேறு இடங்களில் திறந்துவிடலாம் என இடம் தேடும் படலத்தில் பிஸியாக இருக்கிறார்கள் டாஸ்மாக் அதிகாரிகள். இன்னும் சில இடங்களில், கடையின் வாசலை அடைத்துவிட்டு, வேறு சாலை பக்கம் வாசல் வைத்து, 500 மீட்டருக்கு அப்பால் இருப்பதாகக் கணக்குக் காட்டும் முயற்சியும் நடைபெறுகிறது.

இந்த விஷயத்தில் தமிழகம் எவ்வளவோ பரவாயில்லை என்னும் அளவில் இருக்கின்றன, பல வடமாநிலங்களின் செய்கைகள். உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஹரியானா, கோவா போன்ற மாநிலங்கள், சாமர்த்தியமாக மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகளாக மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளன. இதனால், அந்தச் சாலைகளின் ஓரமுள்ள கடைகளை மூட வேண்டிய அவசியம் இல்லை.