Published:Updated:

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதிக்கும் நடிகர்–நடிகைகள்

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதிக்கும் நடிகர்–நடிகைகள்
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதிக்கும் நடிகர்–நடிகைகள்

சென்னை: இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடிகர்–நடிகைகள் போராட்டம் நடத்துவது பற்றி நாளை நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
 

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதிக்கும் நடிகர்–நடிகைகள்

இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 2009ஆம் ஆண்டு ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசின் ராணுவத்தினரால் அப்பாவி இலங்கை தமிழ் மக்கள் ஏராளமாக கொன்று குவிக்கப்பட்டனர். 2011இல் முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையில் புதிய அரசு அமைந்தவுடன், இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றி இந்திய அரசின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்து, தொடர்ந்து பிரதமருக்கு கடிதங்கள் மூலமாகவும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்.

##~~##
தற்போது ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அம்சங்கள் இடம்பெறும் வகையில், இந்திய அரசு திருத்தம் கொண்டு வந்து, அந்த தீர்மானம் நிறைவேறிட எல்லா நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும்.
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் நிறைவேறிட போராட்டங்கள் நடத்தி வரும் அனைத்து அமைப்பினருக்கும், தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது. இதுதொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசித்து, உறுதியான நிலைப்பாட்டுடன் விரைவில் போராட்டத்தில் ஈடுபடும் என்பதை தமிழக மக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு சரத்குமார், ராதாரவி கூறியுள்ளனர்.