பிரீமியம் ஸ்டோரி
ஜூ.வி. ரேடார்

உணவு சர்ச்சைகள் மூன்று!

ஜூ.வி. ரேடார்

வீட்டில் வளர்ப்பதற்காக பசுமாடுகளை வாங்கிவந்த இஸ்லாமிய விவசாயி ஒருவர், பசுவதை சந்தேகத்தால் ராஜஸ்தான் மாநில நெடுஞ்சாலையில் படுகொலை செய்யப்பட்டார்.  இந்த நேரத்தில், ‘‘இந்தியா முழுக்க பசுவதையைத் தடுக்க சட்டம் இயற்ற வேண்டும்” என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் சொல்லியிருக்கிறார்.  ‘‘ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் இப்படியான சட்டம் வந்துவிட்டது. தேசமே ஒரே பாதையில் போக வேண்டும்’’ என்கிறார் அவர். ஆனால், ‘‘இது மாநில அரசுகளின் உரிமைகளில் தலையிடும் முயற்சி’’ என எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

ஜூ.வி. ரேடார்
ஜூ.வி. ரேடார்

‘‘ஹோட்டல்கள், மெனு கார்டில் உணவின் அளவையும் அச்சிட வேண்டும்’’ என மத்திய உணவு அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் சொல்லி இருக்கிறார். சப்பாத்தி என்றால் 2, சாதம் என்றால் எத்தனை கிராம், பீட்ஸா என்றால் என்ன சைஸ்... இப்படி அச்சிடச் சொல்கிறார். ‘‘நிறைய உணவு வீணாகிறது. அளவைக் குறிப்பிட்டால், ஆர்டர் செய்பவர்களுக்கு ஒரு புரிதல் இருக்கும்’’ என்கிறார் அவர். ஆனால், ‘‘இதைச் செய்தால் உணவுகளின் விலை ஏறும்’’ என எதிர்ப்பு தெரிவித்துள்ளது ஹோட்டல்கள் சங்கம்.

ஜூ.வி. ரேடார்
ஜூ.வி. ரேடார்

மத்தியப்பிரதேசத்தின் ஹோஷங்காபாத் நகராட்சி சேர்மன் அகிலேஷ் கண்டேல்வால்,. பி.ஜே.பி-யைச் சேர்ந்த இவர், இந்தியாவின் முதல் சைவ நகரமாக ஹோஷங்காபாத்தை மாற்றப்போகிறார். ‘நர்மதை நதியின் கரையில் இருக்கும் புனித நகரம் இது. ‘நம் நகரத்தை இறைச்சி, மீன், முட்டை என எதையும் யாரும் சாப்பிடாத சைவ நகரமாக மாற்றலாமா?’ என ஃபேஸ்புக்கில் யோசனை கேட்டிருக்கிறார். அதன்பின் இறைச்சி வெட்டுவது மட்டுமல்ல, விற்பதும் குற்றமாகிவிடும். ‘மக்கள் எதைச் சாப்பிடுவது என்பதை அரசாங்கம் தீர்மானிப்பதா?’ எனக் கொதிக்கிறார்கள் பலர்.

ஜூ.வி. ரேடார்

ஃப்ளாஷ்பேக்!

‘வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதால், பழையபடி வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும்’ என்று காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தி இருப்பது, லேட்டஸ்ட் பரபரப்பு. இந்தியாவில் முதல்முதலாக, கடந்த 1982-ம் ஆண்டு கேரளாவின் பரூர் சட்டமன்றத் தேர்தலில்தான் 50 பூத்துகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அங்கு போட்டியிட்ட சிவன் பிள்ளை என்ற வேட்பாளர், அதை எதிர்த்து வழக்குப் போட்டார். ஆனால், 123 ஓட்டுகள் வித்தியாசத்தில் அவர் ஜெயித்துவிட, வழக்கை வாபஸ் வாங்கினார். தோல்வி அடைந்த காங்கிரஸ் வேட்பாளர் ஜோஸ், கோர்ட்டுக்குப் போனார். மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவிட்டது நீதிமன்றம். அதில், ஜோஸ் ஜெயித்துவிட்டார்.

ஜூ.வி. ரேடார்

தேர்தல் ஆணையத்துக்கே `செக்!’

‘‘ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை ரத்துசெய்ததால் எங்கள் செலவெல்லாம் வீணாகப் போய்விட்டதே’’ என்று புலம்பி வருகிறார்கள் சிறிய கட்சிகளின் வேட்பாளர்கள் சிலர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் லோகநாதன், ‘‘ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்ட தொகையை, எங்களைப் போன்ற வேட்பாளர்களுக்குக் கொடுத்து நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும்’’ என்று தேர்தல் ஆணையத்துக்கே ‘செக்’ வைத்திருக்கிறார்.

ஜூ.வி. ரேடார்

தாமதமாகக் கிடைத்த தண்டனை!

இந்தியாவையே பரபரப்பில் ஆழ்த்திய ஊழல் மன்னன், ஹர்ஷத் மேத்தாவை நினைவிருக்கிறதா? ‘பிரதமர் நரசிம்மராவுக்கு ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தேன்’ என்று திரி கொளுத்திப்போட்ட பங்குச்சந்தை ஊழல் மனிதர். வங்கிப் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, பங்கு வர்த்தகத்தில் இவர் செய்த ஊழல் பற்றிய வழக்கு விசாரணை 25 ஆண்டுகள் நடந்து, இந்த வாரம் வந்திருக்கிறது தீர்ப்பு. வழக்கு நடக்கும்போதே கடந்த 2001-ல் ஹர்ஷத் மேத்தா இறந்துவிட்டார். அவரின் மோசடிக்கு உதவிய வங்கி அதிகாரிகள் நான்கு பேருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது, சி.பி.ஐ நீதிமன்றம். சில நிமிடங்களில் அவர்கள் ஜாமீன் வாங்கிக்கொண்டு வீட்டுக்குப் போய்விட்டார்கள். இதுதான் இந்தியா!

ஜூ.வி. ரேடார்

‘‘அமைச்சரைத் தெரியலை!’’

கேரள வருவாய்த் துறை அமைச்சர் சந்திரசேகரனின் வீட்டுக்குக் காலை எட்டு மணிக்குப் போய் இறங்கினார், கேரள உளவுத்துறை ஏ.டி.ஜி.பி முகம்மது யாசின். ‘‘நீங்கள்தானே விவசாய அமைச்சர் சுனில்குமார்?” என்று கேட்டுள்ளார் ஏ.டி.ஜி.பி. அவருக்கு சுனில்குமாரின் வீட்டுக்கு வழி சொல்லி அனுப்பினாராம் சந்திரசேகரன். ‘‘உளவுத்துறை உயர் அதிகாரிக்கு அமைச்சர்களைக்கூட அடையாளம் தெரியாதா?” என்று கொந்தளித்தார் அமைச்சர் சந்திரசேகரன். ‘‘எனக்கு எல்லா அமைச்சர்களையும் தெரியும். ஆனால், என் டிரைவர்தான் வழி தெரியாமல் இவர் வீட்டுக்கு வந்துவிட்டார்’’ என்று சமாளிக்கிறார் யாசின்.

ஜூ.வி. ரேடார்

விளம்பர போர்டு தமிழ்!

தமிழகத்தின் பல பகுதிகளில் இருக்கும் தமிழ் ஆர்வலர்களின் இப்போதைய கவனம், நெடுஞ்சாலை மைல்கல்களில் இருக்கிறது. அதில் எழுதப்பட்டிருக்கும் இந்தி எழுத்துகளைத் தார் பூசி அழித்தவாறு புகைப்படம் எடுத்து, ஃபேஸ்புக்கில் பதிவேற்றி லைக்ஸ் வாங்குகிறார்கள் பலர். சென்னையில் உள்ள தமிழ் ஆர்வலர்கள், அதற்கு அடுத்த முயற்சியிலும் இறங்கிவிட்டார்கள்... மாநகரப் பேருந்து நிறுத்தங்களில் உள்ள பல விளம்பரப் பலகைகளில் தமிழே இல்லை. அவற்றில் இருக்கும் ஆங்கில எழுத்துகளைத் தார் கொண்டு அடித்துவிட்டு, ‘தமிழ்’ என எழுதி வைத்திருக்கிறார்கள் இவர்கள். அடுத்த சர்ச்சை ஆரம்பம்!

ஜூ.வி. ரேடார்

ஹேப்பி பர்த் டே!

கடந்த 12-ம் தேதி புதன்கிழமை, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனின் பிறந்த நாள். அன்று மக்களவையில் பேசிய எம்.பி-க்கள், பதில் சொன்ன அமைச்சர்கள் என்று எல்லோருமே, தங்கள் உரையை முடிக்கும்போது சுமித்ராவுக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொன்னார்கள். நாள் முழுக்க வாழ்த்தொலிகளைக் கேட்டு நெகிழ்ந்துவிட்டார் அவர். ‘‘சீக்கிரமே உங்களை ஜனாதிபதியாகப் பார்க்க வேண்டும்” என்று சிலர் தனியாக வாழ்த்தியபோது அவருக்குப் பூரிப்பு.

ஜூ.வி. ரேடார்

வாய்ஸ்

‘‘இரட்டை இலைச் சின்னம் முடக்கப்படும்’’ என்று தமிழக   பி.ஜே.பி தலைவர் தமிழிசை சொன்னார். அதுபோல நடந்தது. ‘‘ஆர்.கே. நகர் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்’’ என்று சொன்னார். அதுவும் நடந்தது. இதனால் தமிழிசையைப் பார்த்து பிரபல ஜோதிடர்களும், கேரள நம்பூதிரிகளும் தொழில் போட்டி அச்சத்தில் உள்ளனர்!”

- தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்

ஜூ.வி. ரேடார்

என் எண்கள்

சமீபத்தில் கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனியின் ஆதார் விவரங்கள் வெளியாகின .அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  அவரிடம் ஆதார் தகவல்களைச் சேகரித்த நிறுவனத்துக்கு உரிமம் ரத்து செய்யப்பட்டது. 2010-ம் ஆண்டு முதல் இப்படி பிளாக் லிஸ்ட் செய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 34,000

ஜூ.வி. ரேடார்

ங்கே நிறைய டில்லிபாபு இருக்காங்க... டெல்லியில ஒரு மெட்ராஸ்பாபுவாவது இருக்கானா? அவங்க எப்ப மதிச்சாங்க, இப்ப மதிக்கிறதுக்கு?

- ரூபன் ஜே

- த.கதிரவன், நந்தினி சுப்பிரமணி, சே.த.இளங்கோவன்
படம்: தே.அசோக்குமார்
ஓவியங்கள்: கோ.ராமமூர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு