Published:Updated:

ஜூ.வி. ரேடார்

ஜூ.வி. ரேடார்
பிரீமியம் ஸ்டோரி
ஜூ.வி. ரேடார்

ஜூ.வி. ரேடார்

ஜூ.வி. ரேடார்

ஜூ.வி. ரேடார்

Published:Updated:
ஜூ.வி. ரேடார்
பிரீமியம் ஸ்டோரி
ஜூ.வி. ரேடார்
ஜூ.வி. ரேடார்

ராமானுசர் 1000

‘ராமானுசர் ஆயிரமாவது திருநட்சத்திரப் பெருவிழா’ என்ற நிகழ்வோடு, முதல் உலக வைணவ மாநாட்டை கடந்த 14-ம் தேதி சென்னையில் நடத்தி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் தி.மு.க-வின் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன். தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற இவ்விழாவில் பிரமாண்டம்... பிரமாண்டம்! ராமானுஜர் சிலை, திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பது போன்ற திருமால் சிலை, வண்ண மின்விளக்குகள், வந்திருந்த அனைவருக்கும் உணவு உபசரிப்பு என களைகட்டியது காமராஜர் அரங்கம். துரைமுருகன், துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள். ‘‘ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை இன்னும் பிரமாண்டமாகத் தயாரித்து கலைஞர் டி.வி-யில் ஒளிபரப்ப வேண்டும். இதை ஜெகத்ரட்சகனிடம் சொன்னாலே கலைஞரிடம் சொல்லிவிட்டதுபோலத்தான்’’ என்றார் ஒரு ஜீயர் முத்தாய்ப்பாக.

ஜூ.வி. ரேடார்

ஆந்திராவில் அடுத்த வாரிசு!

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ். அரசியல் ரீதியாக தந்தைக்குப் பல்வேறு ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தார். எனவே, சட்டமன்ற உறுப்பினராக இல்லாத இவரை, சட்டமேலவைக்கு போட்டியின்றித் தேர்ந்தெடுக்க வைத்தார் முதல்வர் சந்திரபாபு நாயுடு. அப்போதே, ‘விரைவில், லோகேஷ் அமைச்சராகவும் பதவியேற்பார்’ என சொன்னார்கள். குடும்ப நிறுவனங்களின் பொறுப்புகளிலிருந்து விலகிய லோகேஷ், இப்போது ‘தகவல் தொழில்நுட்பம், கிராம அபிவிருத்தி மற்றும் பஞ்சாயத்து ராஜ்’ துறைகளுக்கான அமைச்சராகப் பதவி ஏற்றிருக்கிறார். அடுத்து..?

ஜூ.வி. ரேடார்

ஒரு கேள்வி ஒரு பதில்

டி.கே.ரங்கராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர்)

‘‘கடந்த முறை தி.மு.க கூட்டிய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்காத கம்யூனிஸ்ட் கட்சிகள், தற்போது பங்கேற்றதன் பின்னணி என்ன?’’


‘‘கடந்த முறை காவிரி பிரச்னைக்காக தி.மு.க அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டியபோது, உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதுபோன்ற சமயத்தில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றால் அது ஒரு தவறான சமிக்‌ஞையைக் காட்டிவிடும் என்பதால், அப்போது பங்கேற்கவில்லை. இப்போது அப்படி எந்தத் தேர்தலும் இல்லை. இந்தக் கூட்டம் விவசாயிகளின் நலனை கருத்திற்கொண்டே கூட்டப்பட்டது. பத்திரிகையாளர்கள்தான் திரும்பத் திரும்ப ‘இது அரசியல் கூட்டணிக்கான அச்சாரமா’ என கேட்கிறீர்கள். தற்போதைய தமிழக அரசியலுக்கும் இந்தக் கூட்டத்துக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.’’

சூழல் அக்கறை கலெக்டர்!

ஜூ.வி. ரேடார்‘ஓடும் நீரை மெதுவாக நடக்க வைக்கணும், நடக்கும் நீரை ஓரிடத்தில் தேக்கி வைக்கணும், தேக்கி வைக்கும் நீர் நிலத்தினுள் கசிந்து செல்ல வேண்டும்’ என்ற தாரக மந்திரத்தை மனதில் ஏந்திக்கொண்டு, திருவண்ணாமலை மாவட்டத்தின் நீர் நிலைகளைக் காப்பதற்கு ‘தண்ணீர் தண்ணீர்’ என்கிற பெயரில் இயக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளார், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே.

நீர் நிலைகளைக் காப்பது, ஏரி மற்றும் குளங்களைத் தூர் வாருவது குறித்த விழிப்பு உணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் முயற்சிக்கிறார். மக்கள் குறை அறிவதற்காகச் செல்கின்ற இடங்களில் மக்களோடு இணைந்து உணவு சாப்பிடுகிறார். பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து விளையாடுகிறார். இதனால் கலெக்டரிடம் தீர்வு கேட்டு வருகிறவர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.

ஜூ.வி. ரேடார்

உ.பி-யிலும் உடன்பிறப்பு அரசியல்!

உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதியின் சகோதரர், ஆனந்த் குமார். ஆயிரம் கோடிகளைத் தாண்டிய இவரது சொத்துமதிப்பு குறித்து, பல்வேறு சர்ச்சைகள் இருந்துவருகின்றன. அமலாக்கப் பிரிவு விசாரணை வளையத்தில் சிக்கியிருக்கிறார் அவர். இந்த நிலையில், தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘‘மாயாவதி ஆட்சியின்போது அரசு சர்க்கரை ஆலைகளைத் தனியாருக்கு விற்பனை செய்ததில் நடைபெற்றுள்ள ஊழல்குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும்’’ என்று அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இப்போது, ஆனந்த் குமாரை பகுஜன் சமாஜ் கட்சியின் துணைத் தலைவராக நியமித்துள்ளார் மாயாவதி. ‘‘வழக்குகளிலிருந்து சகோதரரைப் பாதுகாக்கவே மாயாவதி இப்படியொரு பொறுப்பைக் கொடுத்திருக்கிறார்’’ என்கிறார்கள் பி.ஜே.பி-யினர்.

ஜூ.வி. ரேடார்

இன்றைய இலை விலைப்பட்டியல்

வாழை இலை: ரூ.4
வெற்றிலை: ரூ.1
கறிவேப்பிலை: ரூ.5
இரட்டை இலை: ரூ.60 கோடி

- த.கதிரவன், ஜெ.அன்பரசன், கா.முரளி