Published:Updated:

ஜூ.வி ரேடார்

ஜூ.வி ரேடார்
பிரீமியம் ஸ்டோரி
ஜூ.வி ரேடார்

ஜூ.வி ரேடார்

ஜூ.வி ரேடார்

ஜூ.வி ரேடார்

Published:Updated:
ஜூ.வி ரேடார்
பிரீமியம் ஸ்டோரி
ஜூ.வி ரேடார்
ஜூ.வி ரேடார்

மன்னிப்பு கேட்ட அமைச்சர்!

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், புதிதாகக் கட்டியுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் மற்றும் நீதித்துறை அலுவலர்களுக்கான குடியிருப்பு திறப்புவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகமும், வனத்துறை அமைச்சர் சீனிவாசனும் கலந்துகொண்டனர். ‘நிகழ்ச்சி குறித்து எனக்கு முறையாகத் தெரிவிக்கவில்லை’ என திண்டுக்கல் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் மருதராஜ், அமைச்சர்கள் இருவரிடமும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஜூ.வி ரேடார்

‘‘என்னை மாவட்டச் செயலாளரா நியமிச்சது அம்மா. மாவட்டச் செயலாளருக்கு சொல்லாம ஒரு அமைச்சர் மாவட்டத்துக்குள்ள வரலாமா? நீங்க தகவல் சொல்லாட்டியும், உங்க பி.ஏ மூலமாகவாவது தகவல் சொல்ல வேண்டாமா? இதுதான் மாவட்டச் செயலாளருக்கு கொடுக்குற மரியாதையா?’’ என சண்முகத்தைக் கேட்டார் மருதராஜ். அடுத்து வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பக்கம் திரும்பி, ‘‘நத்தம் விசுவநாதன் அமைச்சரா இருந்தப்பவும் நான் மாவட்டச் செயலாளரா இருந்திருக்கேன். நான் ஊர்ல இல்லைங்கிறதுக்காக, நிகழ்ச்சியை ஒருநாள் தள்ளி வச்சாரு. ஆனா, நீங்க மாவட்டச் செயலாளரை

ஜூ.வி ரேடார்

மதிக்கறதேயில்லை. உங்களால முடிஞ்சா என் பதவியை எடுத்துப் பாருங்க’’ என திட்டித் தீர்த்துவிட்டார்.
அமைச்சர் சண்முகம், ‘‘தெரியாம நடந்திடுச்சு. மன்னிச்சுக்கோங்க. இனிமே இப்படி நடக்காது’’ என மன்னிப்பு கேட்ட பிறகே சமாதானம் அடைந்தார் மருதராஜ்.

ஒரு கேள்வி ஒரு பதில்

மாஃபா பாண்டியராஜன், (ஓ.பன்னீர்செல்வம் அணி)

‘‘ ‘பி.ஜே.பி தலைமையிலான கூட்டணியில் அ.தி.மு.க இணைவதாக இருந்தால் மட்டுமே இரு அணிகளும் ஒன்று சேர்வது சாத்தியமாகும்’ என்று உங்கள் தரப்பு நிபந்தனை விதித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளதே?’’

‘‘அந்த செய்தியில் எந்தவித உண்மையும் கிடையாது. ‘அம்மாவின் கொள்கைப்படிதான் கட்சியைக் கொண்டு செல்லவேண்டும்’ என்றே ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இதில், எங்களிடையேயும் மாற்றுக் கருத்து எதுவும் கிடையாது. அதனால், ‘தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேரவேண்டும்’ என்பதுபோன்ற எந்த ஆலோசனையும் கட்சியின் உயர்மட்டக் குழுவில் நடைபெறவில்லை. பேச்சுவார்த்தை நடத்துவதற்கான எங்கள் தரப்பு நிபந்தனைகள் இரண்டு மட்டுமே. ஒன்று, சசிகலா குடும்பத்தினரை முழுமையாகக் கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும். இரண்டாவதாக, ஜெயலலிதா மரணம் குறித்த சி.பி.ஐ விசாரணைக்கு மாநில அரசே பரிந்துரைக்க வேண்டும்.’’

நூறில் ஒரு போலீஸ்!


சென்னை திருவொற்றியூரில் இருந்து சுமார் 100 பேர், ஒரு புகார் தருவதற்காக  திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் வந்தனர். கூட்டத்தில் இருந்த ஒருவருக்கு திடீர் என்று வலிப்பு வந்து கீழே விழுந்தார்.

ஜூ.வி ரேடார்

பாதுகாப்புப் பணியில் இருந்த ஆயுதப்படை காவலரான ஜார்ஜ் வில்லியம், பாதிக்கப்பட்டவரை ஒரு ஆட்டோவில் ஏற்றி உடனடியாக அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தார். அவரைப் பரிசோதித்து சிகிச்சை செய்த மருத்துவர்கள், “சரியான நேரத்தில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறீர்கள். கொஞ்சம் தாமதித்து இருந்தாலும் நிலைமை சிக்கலாகி இருக்கும்” என்று ஜார்ஜ் வில்லியமின் அக்கறையைப் பாராட்டினார்கள்.

பசு நேசன் லாலு!

சு மாட்டுக்கும் பாலுக்கும் சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ... நிச்சயம் அரசியலுக்கும் பசுவுக்கும் ‘சம்பந்தம்’ இருக்கிறது.

ஜூ.வி ரேடார்

அதிரடி ஸ்டேட்மென்ட்களுக்குப் பெயர் பெற்ற பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், தன்னுடைய மகன்கள் இருவருக்கும் பெண் தேடும் படலத்தில் ஈடுபட்டுள்ளார். மகன்களில் ஒருவர் பீகார் அமைச்சராகவும், இன்னொருவர் துணை முதல்வராகவும் இருக்கிறார்கள். மருமகள்களிடம் லாலு என்ன எதிர்பார்க்கிறார் தெரியுமா? ‘‘வரதட்சணை எதுவும் வேண்டாம். எளிமையாகவே திருமணங்களை நடத்த இருக்கிறேன். ஆனால், சீதனமாக ஒரு பசு மாட்டை மட்டும் பெண் வீட்டார் தந்தே ஆகவேண்டும்’’ என்பது நிபந்தனை. ஒருவேளை சம்பந்தி வீட்டார் இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற முடியாதவர்களாக இருந்தால், ‘பசு மாட்டுக்குப் பதிலாக கன்றுக்குட்டியை தரலாம்’ என்று கோரிக்கையை கொஞ்சம் தளர்த்தியிருக்கிறார்.

‘‘இதெல்லாம் நம்புறா மாதிரியா இருக்கு..?’’ என்று எதிர்க்கட்சியினர் முணுமுணுக்கிறார்கள்!

- த.கதிரவன், ந.பா.சேதுராமன், ஆர்.குமரேசன்