Published:Updated:

கோடியக்கரை மீனவர்களுக்கு அரிவாள் வெட்டு: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

கோடியக்கரை மீனவர்களுக்கு அரிவாள் வெட்டு: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!
கோடியக்கரை மீனவர்களுக்கு அரிவாள் வெட்டு: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!
கோடியக்கரை மீனவர்களுக்கு அரிவாள் வெட்டு: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

வேதாரண்யம்: நாகை மாவட்டம், கோடியக்கரை மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கத்தியால் குத்தியதோடு, அவர்களை விரட்டியடித்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிக்கிறது.

இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கோடியக்கரை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த மீனவர்கள் 50 படகுகளில் நேற்று மதியம் மீன் பிடிக்க  சென்றனர். இவர்கள் மீன் பிடித்துவிட்டு இன்று அதிகாலை 3.30 மணிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, இலங்கை கடற்படையை சேர்ந்த 3 பேர் கண்ணையன் என்பவருக்கு சொந்தமான படகை கைப்பற்றி அதிலுள்ளவர்களை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

இதில் கண்ணையன், சசிக்குமார், செல்வக் குமார், பொன்னுசாமி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக வேதாரண்யம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

இதேபோல், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டிணத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்று முன் தினம் மீன் பிடித்துவிட்டு திரும்பும் போது இலங்கை கடற்படையினர் ரப்பர் கட்டைகளால் தாக்கினர்.

##~~##
இதில் சதீஷ், நாராயணன் ஆகியோர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இலங்கை பிரச்னையில் மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுக்க பல்வேறு போராட்டங்கள் நடந்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக மீனவர்கள் மீண்டும் தாக்கப்பட்டிருப்பது போராட்டத்தை தீவிரப்படுத்தி இருக்கிறது.
- கரு. முத்து