Published:Updated:

மிரட்டும் வகையில் ரெய்டு: மு.க.ஸ்டாலின்

மிரட்டும் வகையில் ரெய்டு: மு.க.ஸ்டாலின்
மிரட்டும் வகையில் ரெய்டு: மு.க.ஸ்டாலின்
மிரட்டும் வகையில் ரெய்டு: மு.க.ஸ்டாலின்

சென்னை: அரசியல் நோக்கத்துடன் மிரட்டும் வகையில் இந்த ரெய்டு நடத்தப்பட்டுள்ளது என்றும் எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்திக்கத் தயாராக இருக்கிறோம் என்றும் தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் வெளிநாட்டில் இருந்து  ஹம்மர் என்ற சொகுசு கார் இறக்குமதி செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து சென்னையில் ஸ்டாலின் வீட்டில் இன்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

##~~##
இந்த சோதனை குறித்து மு.க.ஸ்டாலின் கூறுகையில், அரசியல் நோக்கத்துடன் மிரட்டும் வகையில் இந்த ரெய்டு நடத்தப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டினார்.
எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்திக்கத் தயாராக இருக்கிறோம்  என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, பரிசாகப் பெறப்பட்ட ஹம்மர் காரை சிபிஐயிடம் ஒப்படைக்க மு.க.ஸ்டாலின் முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.