Published:Updated:

நேற்று யானைகள்... இன்று மாடுகள்... நாளை... “உலகம் அழியப்போகுதுங்க!”

நேற்று யானைகள்... இன்று மாடுகள்... நாளை... “உலகம் அழியப்போகுதுங்க!”
பிரீமியம் ஸ்டோரி
நேற்று யானைகள்... இன்று மாடுகள்... நாளை... “உலகம் அழியப்போகுதுங்க!”

நேற்று யானைகள்... இன்று மாடுகள்... நாளை... “உலகம் அழியப்போகுதுங்க!”

நேற்று யானைகள்... இன்று மாடுகள்... நாளை... “உலகம் அழியப்போகுதுங்க!”

நேற்று யானைகள்... இன்று மாடுகள்... நாளை... “உலகம் அழியப்போகுதுங்க!”

Published:Updated:
நேற்று யானைகள்... இன்று மாடுகள்... நாளை... “உலகம் அழியப்போகுதுங்க!”
பிரீமியம் ஸ்டோரி
நேற்று யானைகள்... இன்று மாடுகள்... நாளை... “உலகம் அழியப்போகுதுங்க!”

மெரினாவிலும், அலங்காநல்லூரிலும் மாட்டுக்காகப் போராடி உலகின் கவனத்தை ஈர்த்த தமிழ்ப்பெருங்குடிகளுக்கு இந்தச் சோகச் செய்தி தெரியுமா? பசுக்களைக் காப்பாற்ற மனிதர்களையே கொல்கிற பண்பாட்டுக் காவலர்களுக்கு இந்த அபாயச் செய்தி புரியுமா?

குடங்களைத் தூக்கிக்கொண்டு அலைய வைக்கும் தண்ணீர்ப் பஞ்சம் மனிதர்களை வதைக்கிறது; தண்ணீர் தேடி அலைந்த யானை ஒன்று, பவானிசாகர் அணைக்குள் சேற்றில் சிக்கி இறக்கிறது; இந்தக் கடும் தண்ணீர்ப் பஞ்சத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல், கொத்துக்கொத்தாக மாடுகள் செத்துக்கொண்டிருக்கின்றன. எப்போதும் ஈரம் வற்றாமல் இருக்கும் காவிரிக்கரை கிராமங்களில் இப்படி நிகழ்கிறது என்பதுதான் பெரும் வேதனை!

தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களின் பல கிராமங்களில், தமிழக - கர்நாடக எல்லையை காவிரிதான் தீர்மானிக்கிறது. ஆற்றுக்கு அந்தப் பக்கம் கர்நாடகா. இந்தப் பக்கம் தமிழ்நாடு. இரு கரைகளிலும் தமிழர்கள்தான் வாழ்கிறார்கள்.

நேற்று யானைகள்... இன்று மாடுகள்... நாளை... “உலகம் அழியப்போகுதுங்க!”

எங்க வாழ்நாள்ல இந்த வருஷம்தாங்க காவிரியைத் தண்ணி இல்லாம பாக்குறோம். எவ்வளவு பெரிய கோடையானாலும், முழங்கால் தண்ணியாச்சும்  இருக்கும். மேட்டூர் டேம் கட்டி முடிச்சபிறகு, ‘இனிமே ஜென்மத்துக்கும் இங்கே தண்ணி நிக்கும். அப்படி நிக்கலைன்னா, உலகம் அழிஞ்சிரும்’னு எங்க தாத்தனுங்க ஊர் மெச்ச சொன்னாங்களாம். சீக்கிரமே உலகம் அழியப்போகுதுங்க! இன்னைக்குத் தண்ணி இல்லாம செத்துக்கிடக்கும் மாடுங்கதான் அதுக்கு ஆதாரம்’’ என்று பன்னீர் சொல்லும்போதே, பக்கென்று இருந்தது. இப்படி ஆங்காங்கே செத்துக்கிடக்கும் மாடுகளைக் காட்ட  அழைத்துச்செல்பவர்கள் பேசுவதைக் கேட்டால், உங்களுக்கும் உள்ளுக்குள் உதற ஆரம்பித்துவிடும். 

கொங்கிரிப்பட்டி, குழிப்பட்டி, சிகிர்லிப்பட்டி, ஏரில்பட்டி, சிங்காபுரம், ஊட்டமலை உள்ளிட்ட தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த  தமிழக எல்லையோர கிராமங்களில் தண்ணீர் இல்லாமல், மேய்ச்சலுக்கு பசுந்தரை இல்லாமல், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்துபோயிருக்கின்றன.இந்தக் கிராமங்களில் பல குடும்பங்களும் ஒரு கண்ணீர்க்கதையை சுமந்துகொண்டிருக்கின்றன.

வறண்டு கிடக்கும் காவிரி ஆற்றில் தோண்டிய குழியில் ஊறியிருக்கும் தண்ணீரை உறிஞ்சி தொண்டையை நனைத்துக்கொண்டு பேசுகிறார், சிங்காபுரத்தைச் சேர்ந்த பன்னீர். ‘‘என் வாழ்நாள்ல இப்படி ஒரு வறட்சியைப் பார்த்ததே இல்லைங்க. இதுக்கு முன்னாடி கோடையில கோமாரி நோய் தாக்கி, ஒண்ணு, ரெண்டு மாடுகள் இறந்திருக்கு. ஆனால், தண்ணி இல்லாம, மேய்ச்சல் இல்லாம நூத்துக்கணக்கான மாடுங்க சாகுறது இதுதான் முதல்முறை. என்னோடது மட்டுமே பத்து மாடுகள் செத்துருக்கு. எங்க ஊர்ல கிட்டத்தட்ட ஐம்பது, அறுபது மாடுங்க செத்துருச்சி. எல்லாம் பட்டி மாடுங்க. நீங்க நெனைக்கிற மாதிரி புண்ணாக்கு போட்டு வளர்க்க முடியாது. புல்லுதான் சாப்பிடும். இப்ப மழை தண்ணி இல்லாததால, மேய்ச்சலுக்கு இந்தக் காட்டுப்பகுதியில ஒண்ணும் இல்லை. இதுவரைக்கும் என் சக்திக்கு இருபதாயிரம் ரூபாய்க்கு சோளத்தட்டு வாங்கிக் போட்ருக்கேன். அதெல்லாம் எந்த மூலைக்கு? இன்னும் 20 மாடுங்க இருக்கு. அதுல பாதி இன்னைக்கோ நாளைக்கோன்னு இருக்குங்க. பாக்கவே கொடுமையா இருக்கு’’ என்று கலங்குகிறார். 

நேற்று யானைகள்... இன்று மாடுகள்... நாளை... “உலகம் அழியப்போகுதுங்க!”

அபிமன்யு, ஆற்றாமையோடு பேசுகிறார். “இந்தக் காவிரிக்கரை கிராமங்கள் எல்லாம் ஒரு காலத்துல மாடு மேய்ப்புப் பகுதியா மட்டும்தான் இருந்திருக்கு. எங்க முன்னோருங்க மாட்டுப்பட்டி போட வந்து இங்கேயே செட்டில் ஆகி, பின்னால கிராமங்கள் ஆகியிருக்கு. இங்க உள்ளவங்களுக்கு மாடு வளர்க்கிறதுதான் பிரதானத் தொழில். கோடையில மாட்டை ஓட்டிக்கிட்டு காட்டுக்குள்ள போனாங்கன்னா, மழைக்காலத்துலதான் திரும்பி வருவாங்க. இப்ப, காடு சொட்டையாகிக் கெடக்கு. காவிரி மொட்டையாகிக் இருக்கு. இந்தத் துயரங்கள் நடக்கறது காவிரிக் கரையில். இங்கிருந்து, கூட்டுக்குடிநீர் திட்டத்தில், பல மாவட்ட மக்களுக்கும் குடிதண்ணீர் போகுது. சேலத்துல ஏதோ ஓர் ஊர்ல நாள் கணக்கா தண்ணி வரலைன்னு காலிக் குடத்தோட போராடுற மக்களுக்கும், இங்கே சாகும் மாடுகளுக்கும் தொடர்பு இருக்கு. இது ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்குமான எச்சரிக்கை. இப்படியான கடுமையான வறட்சியிலும் கூல்ட்ரிங்ஸ் கம்பெனிகளுக்கும், கார் கம்பெனிகளுக்கும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை நம்ம அரசாங்கம் கொடுத்துக்கிட்டு இருக்கு. நேத்து வரைக்கும் தண்ணி இல்லாம யானைங்க செத்துச்சி.. இன்னைக்கு மாடுங்க சாகுது. இதுக்குப் பிறகும் நாம இப்படியே இருந்தோம்னா, நாளைக்கு மனுஷங்களும் சாக வேண்டியதுதான்.”

ஒரு பெருமூச்சோடு கொஞ்சம் இடைவெளிவிட்ட அபிமன்யு, ‘‘எங்களுக்கு மாடுகளும் மக்களும் வேற வேற இல்லீங்க. நாங்க மனுஷங்களோட செலவழிக்கிற நேரத்தைவிட மாடுகளோட செலவழிக்கிற நேரம்தான் அதிகம். இன்னும் மிச்ச சொச்சம் இருக்குற மாடுகளைக் காப்பாத்த, நம்ம அரசாங்கம் உதவணும்” என்று வேண்டுகோள் வைக்கிறார்.

மாடு மேய்த்துக்கொண்டிருந்த குப்புசாமியிடம் பேசினோம். ‘‘எனக்கு எழுவது வயசு கண்ணு. ஐம்பது வருஷமா மாடு வளக்குறேன். இந்த ரெண்டு மாசத்துல என் பட்டியில 25 மாடுங்க செத்திருச்சு. நம்மகிட்ட இருந்தா மிச்சமும் செத்துடுமேன்னு, விக்கப் பாக்குறேன். நல்லா கொழுகொழுனு இருந்தா 15 ஆயிரத்துல இருந்து 20 ஆயிரம் ரூபாய் வரைக்கும் ஒரு மாடு போகும். இப்ப பஞ்சத்துல அடிபட்டு எல்லாம் எலும்பும் தோலுமா இருக்குதுக. சும்மா குடுத்தாக்கூட வியாபாரி எவனும் வாங்க மாட்டேங்குறான். ‘ஜோடி ஆயிரம் ரூவாய்க்கு தர்றியா’னு கேக்குறான். சோளத்தட்டு வாங்கிப்போட்டாவது மாடுங்களை காப்பாத்திரலாம்னு பார்த்தா, அதுவும் குதிரை விலை விக்குது. உடம்புல தெம்பு உள்ளவங்க கர்நாடகா பக்கம் மழை பேஞ்சிருக்குனு, அந்தப் பக்கம் காட்டுக்குள்ள ஓட்டிக்கிட்டு போயிட்டாங்க. இன்னைக்கோ நாளைக்கோன்னு கெடக்குற நான், எப்படி இந்த உசுருங்களைக் காப்பாத்துறதுனு தெரியல” என்கிறார் இயலாமையோடு.

நேற்று யானைகள்... இன்று மாடுகள்... நாளை... “உலகம் அழியப்போகுதுங்க!”

குறவன்திண்ணை கிராமத்தில், குடிக்கவே தண்ணீர் இல்லை. இந்த கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ், தான் வளர்க்கும் மாடுகளுக்காகத் தண்ணீரை, பஸ் டியூபில் கட்டி ஒரு சரக்குப் பொருளைப்போல கொண்டுவருவதைப் பார்க்கும்போது பகீரென ஆகிறது. ‘‘மூணு கிலோ மீட்டர் தொலைவுல இருக்கிற ஜீவா நகருக்குத்தான் தண்ணீர் எடுக்கப் போகணும.கரடுமுரடான மலைப்பாதையைக் கடந்து வர்றது ரொம்ப கஷ்டம். இன்னும் கோடை வந்திருச்சின்னா, ஜீவா நகர்லயும் தண்ணி இருக்காது. பத்து கிலோ மீட்டர்ல இருக்கிற பாப்பாரப்பட்டிக்குப் போகணும். என்ன பண்றது... பத்து மாடு நிக்குது. அதுங்க உயிர்வாழ வேண்டாமா? இந்தத் தண்ணீர் பிடிக்க, ஜீவா நகர் மக்கள்கிட்ட நான் வாங்குற வசவு இருக்கே... ஐயோ! மானம், ரோஷம் பார்த்தா இங்க தண்ணி கிடைக்காது. தண்ணி இல்லாததால புல்லு கூட வளர்க்க முடியல. வீணா தீயிட்டு கொளுத்துற கரும்புத்தோகையைக் காசு கொடுத்து வாங்கி, மாடுகளுக்குத் தீவனமா போடுறோம். ஒரு லோடு 3,500 ரூபாய். அதுவே வைக்கோல்னா ஒரு குட்டி யானை (டாடா ஏஸ்) 11,500 ரூபாய். மாடுகளை விற்கவும் மனசு வரமாட்டேங்குது. அதுகதான் இத்தனை காலமும் எங்களைக் காப்பாத்திச்சுங்க. என்னால முடியுற வரைக்கும் எப்படியாவது தண்ணி கொண்டுவந்து இந்த மாடுகளைக் காப்பாத்துவேன்” என்று மாதேஷ் சொல்லும்போது மனம் கனத்துப்போகிறது.

‘வறட்சியால் விவசாயிகள் யாரும் சாகவில்லை’ என உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும் தமிழக அரசின் தலையை யார் குட்டுவது?

- எம்.புண்ணியமூர்த்தி
படங்கள்: எம்.விஜயகுமார்