Published:Updated:

மும்பை குண்டு வெடிப்பு வழக்கு: சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகளாக தண்டனை குறைப்பு!

மும்பை குண்டு வெடிப்பு வழக்கு: சஞ்சய் தத்துக்கு  5 ஆண்டுகளாக தண்டனை குறைப்பு!
மும்பை குண்டு வெடிப்பு வழக்கு: சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகளாக தண்டனை குறைப்பு!
மும்பை குண்டு வெடிப்பு வழக்கு: சஞ்சய் தத்துக்கு  5 ஆண்டுகளாக தண்டனை குறைப்பு!
புதுடெல்லி: மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும், யாகுப் மேமனுக்கு விதிக்கப்பட்ட மரணத்தண்டனையை உறுதி செய்தும் உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. 
மும்பையில் கடந்த 1993–ம் ஆண்டு, மார்ச் 12 ஆம் தேதி அன்று 12 இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில், 257 பேர் உயிரிழந்தனர். 713 பேர் படுகாயம் அடைந்தனர்.  இது தொடர்பான வழக்கை விசாரித்த தடா நீதிமன்றம், கடந்த 2006–ம் ஆண்டில் தீர்ப்பு கூறியது. மொத்தம் 100 பேரை குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர்களில் 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
##~~##
இத்தண்டனை தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். 
இம்மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், யாகுப் மேமனின் மரண தண்டனையை உறுதி செய்து இன்று தீர்ப்பளித்தது. யாகுப் மேமன், குண்டு வெடிப்பில் முக்கிய சதிகாரனான தேடப்படும் குற்றவாளி டைகர் மேமனின் சகோதரர். மேலும், இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் மரண தண்டனை பெற்ற 10 பேர்களின் மரணத் தண்டனையை ஆயுள் தண்டனையாக  குறைத்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், சஞ்சய் தத்துக்கு, தடா நீதிமன்றம் விதித்த 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையை 5 ஆண்டுகளாக குறைத்து உத்தரவிட்டுள்ளது. , 
சஞ்சய் தத் ஏற்கனவே இவ்வழக்கில் 18 மாதங்கள் சிறையில் கழித்துள்ளதால், அத்தண்டனை காலம் இதில் கழித்துக் கொள்ளப்படும். எனவே அவர், இன்னும் சுமார் மூன்றரை ஆண்டுகாலம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும். 
 பாகிஸ்தானில் பயிற்சி; ஐ.எஸ்.ஐ.க்கு தொடர்பு

மேலும், குண்டு வெடிப்பை நடத்தியவர்களுக்கு பாகிஸ்தானில் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. குண்டு தயாரிக்கவும் மிகவும் சக்தி வாய்ந்த வெடி பொருட்களை கையாளுவதற்கும் அவர்களுக்கு பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ.க்கும் குண்டு வெடிப்பில் தொடர்பு உள்ளது என்றும் தனது தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 
போலீஸ், சுங்க வரிதுறை, கடலோர பாதுகாப்பு துறையினருக்கு கண்டனம்

அத்துடன் இந்த குண்டு வெடிப்பில் தூக்கு தண்டனை பெற்றுள்ள யாகுப் மேமன் மற்றும் தேடப்படும் குற்றவாளிகளான தாவூத் இப்ராகிம், டைகர் மேமன், அயூப் மேமன் ஆகியோர் தாக்குதல் நடத்துவதற்கு அம்பு எய்தவர்களாக இருந்துள்ளனர். மற்றவர்கள் அம்புகளாக இருந்துள்ளனர் என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், போலீஸ், சுங்க வரிதுறை, கடலோர பாதுகாப்பு துறையினர் ஆகியோரும் கண்டனத்திற்குரியவர்கள் என்றும் தெரிவித்துள்ளது.

குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தானில் வைத்து தாவூத் இப்ராகிம் மற்றும் பலரால் சதிதிட்டம் தீட்டப்பட்டுள்ளது என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.