Published:Updated:

‘போட்டி கான்ட்ராக்டரும் இன்கம்டாக்ஸ் அதிகாரியும்தான் காரணம்!’

‘போட்டி கான்ட்ராக்டரும் இன்கம்டாக்ஸ் அதிகாரியும்தான் காரணம்!’
பிரீமியம் ஸ்டோரி
‘போட்டி கான்ட்ராக்டரும் இன்கம்டாக்ஸ் அதிகாரியும்தான் காரணம்!’

சுப்ரமணியம் தற்கொலைக் கடிதம்

‘போட்டி கான்ட்ராக்டரும் இன்கம்டாக்ஸ் அதிகாரியும்தான் காரணம்!’

சுப்ரமணியம் தற்கொலைக் கடிதம்

Published:Updated:
‘போட்டி கான்ட்ராக்டரும் இன்கம்டாக்ஸ் அதிகாரியும்தான் காரணம்!’
பிரீமியம் ஸ்டோரி
‘போட்டி கான்ட்ராக்டரும் இன்கம்டாக்ஸ் அதிகாரியும்தான் காரணம்!’

‘எனக்கும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. என் மரணத்துக்குத் தொழில் போட்டியாளர் பி.எஸ்.கே.தென்னரசும், சென்னை வருமான வரித்துறை அதிகாரி கார்த்திக் மாணிக்கமும்தான் காரணம்’ என்று நாமக்கல் கான்ட்ராக்டர் சுப்ரமணியம் மரண வாக்குமூலமாகக் கடிதம் எழுதி வைத்திருப்பதால், அவரது மரணம் தொடர்பான வழக்கில் புதுத் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 6-ம் தேதியே இந்த நான்கு பக்கக் கடிதத்தை எழுதி எல்லோருக்கும் அனுப்பிவிட்டு, 8-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார்.

‘போட்டி கான்ட்ராக்டரும் இன்கம்டாக்ஸ் அதிகாரியும்தான் காரணம்!’

‘‘அடுத்தவரின் பணத்துக்கு ஆசைப் படாமல், கான்ட்ராக்ட் தொழில் செய்து வந்தேன். ஆரம்பத்தில் பி.எஸ்.கே நிறுவனத்துடன் இணைந்து தொழில் செய்த நான், அங்கே என் போலவே இருந்த தென்னரசு என்பவரால் பல தொல்லைகளை அனுபவித்தேன். எனவே, 2000-ல் ‘அபிராமி என்ஜினீயரிங் கன்ஸ்ட்ரக்‌ஷன்’ எனத் தனி நிறுவனம் தொடங்கினேன். ஆபீஸர்களிடம் மரியாதையாக நடந்ததால், நல்ல முறையில் முன்னேறி வந்தேன். தென்னரசு கடந்த 6 வருடங்களாக முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், அபூர்வா ஐ.ஏ.எஸ் ஆகியோரது ஆதரவோடு பல தொல்லைகளைக் கொடுத்தார்.

எனக்கும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் தொடர்பு உள்ளது என்றும், அவர்தான் எனக்குப் பணம் தருகிறார் என்றும் பொய்யான தகவலை பரப்பி என் பெயரைக் கெடுத்தார்கள். விஜயபாஸ்கரின் கிரஷரில் ஜல்லி வாங்கினோம். வேறு எவ்வித தொடர்பும் எனக்கும் அவருக்கும் இல்லை. என் வீட்டுக்கு ரெய்டு வர வைத்து, ‘தங்கக் கட்டியும் கோடிக்கணக்கான பணமும் என்னிடம் உள்ளதாகவும், நான் அமைச்சரின் பினாமி’ என்றும் தகவல் பரப்பியதால், எங்களது பெயர் கெட்டது. மேலும் 27.4.2017 அன்று வருமான வரித்துறை இணை இயக்குநர் கார்த்திக் மாணிக்கம், விசாரணையின்போது அவருடைய அறைக்குள் அழைத்து என்னை மிகவும் தகாத வார்த்தைகளால் அசிங்கமாக, என்னை ஒரு திருடனைப்போல சித்திரித்து கேவலமாகப் பேசினார். அமைச்சருக்கு நான் பணம் கொடுத்ததாகவோ, அல்லது அமைச்சர் எனக்குப் பணம் கொடுத்தாகவோ ஒப்புக்கொள்ளச் சொல்லி மிரட்டினார். மறுத்தால், என்னைக் கொன்று விடுவதாகவும் மிரட்டினார். ஆகவே நான் மிகவும் மனம் நொந்துபோய் எனது உயிரை விடத் தீர்மானித்து விட்டேன். என்னுடையை மரணத்துக்கு பி.எஸ்.கே.தென்னரசு, கார்த்திக் மாணிக்கம் ஆகியோரே காரணம்’’ என்று முடிகிறது கடிதம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘போட்டி கான்ட்ராக்டரும் இன்கம்டாக்ஸ் அதிகாரியும்தான் காரணம்!’

நாமக்கல் மோகனூர் ரோட்டில், ஆசிரியர் குடியிருப்புக்குப் பின்புறமாக உள்ள சுப்ரமணியத்தின் வீட்டுக்குச் சென்றோம். அவர் மனைவி சாந்தியிடம் பேசினோம். ‘‘என் கணவர் யாருக்கும் தீங்கு நினைக்கமாட்டார். யாரையும் ஏமாற்றவோ, பெரிய அளவில் கமிஷன் பெறவோ மாட்டார். அப்படிப்பட்ட மனிதனை அநியாயமாக தற்கொலை செய்ய வைத்து விட்டார்கள். தென்னரசு, தொழில் போட்டியால் கடந்த ஒரு வருடமாகவே ஒவ்வொரு அதிகாரிகளிடமும் ‘விஜயபாஸ்கரின் பணம்தான் சுப்ரமணியத்திடம் விளையாடுகிறது’ என்று வதந்திகளைப் பரப்பி விட்டார். ரெய்டு நடந்த நேரத்தில், தமிழ்நாடு பில்டர்ஸ் அசோசியேஷன் மீட்டிங் சிங்கப்பூரில் நடந்ததால், என் கணவர் அங்கு சென்றுவிட்டார். எங்கள் வீட்டில் நடத்திய ரெய்டில், வீட்டிலிருந்து 7 லட்ச ரூபாய் ரொக்கமும், 5 வருட வருமான வரித்துறை ஆவணங்களையும் மட்டும்தான் எடுத்துச் சென்றார்கள். மற்றபடி தங்கக் கட்டிகளையும், பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தையும் கைப்பற்றவில்லை. விஜயபாஸ்கரோடு தொடர்புபடுத்தி ஒரு துரும்புகூட இங்கு இல்லை.

‘போட்டி கான்ட்ராக்டரும் இன்கம்டாக்ஸ் அதிகாரியும்தான் காரணம்!’

சிங்கப்பூரில் இருந்து வந்ததும், என் கணவர் சேலம் வருமான வரித்துறை அலுவலகத்துக்குச் சென்றார். அவர்களோ, ‘சம்மன் வந்ததும் சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் போய்ப் பாருங்கள்’ என்றார்கள். அதன்பின் சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து பேசியவர்கள், ‘ஏன்... சம்மன் வந்தால்தான் வருவீங்களா? நீங்க அவ்வளவு பெரிய ஆளா?’ என்று மிரட்டினார்கள். 27.4.2017 அன்று சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அவரை, கார்த்திக் மாணிக்கம் ‘வாடா, போடா’ என்று ஒருமையில் திட்டியுள்ளார். அவரால் இதையெல்லாம் தாங்கிக் கொள்ள முடியவில்லை’’ என்று கலங்கினார்.

இதுபற்றி சென்னை வருமான வரித்துறை இணை இயக்குநர் கார்த்திக் மாணிக்கத்திடம் கேட்டபோது, ‘‘அப்படியா? என் பெயரைக் குறிப்பிட்டு எழுதி இருக்கிறாரா? இது நம்புவது போலவா இருக்கிறது? நீங்கள் சொல்வது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. நீங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியவருகிறது. அந்தக் கடிதத்தை பார்த்துவிட்டு நான் துறைரீதியாக விளக்கம் கொடுப்பேன்’’ என்றார்.

இதுபற்றி தென்னரசின் கருத்தைக் கேட்பதற்கு முயற்சித்தோம். அவர் தலைமறைவாக இருப்பதால், அவரிடம் பேச முடியவில்லை.

- வீ.கே.ரமேஷ்,
படங்கள்: க.தனசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism