அடுத்த மாதம் நடக்கிறது பா.ஜ.க தேசிய செயற்குழு - தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க திட்டம்!

பா.ஜ.க-வின் தேசிய செயற்குழுக் கூட்டம் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 18 மற்றும் 19-ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.

தேர்தல்

பா.ஜ.க-வின்  கொள்கைப்படி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை செயற்குழுக் கூட்டம் நடத்துவது வழக்கம். ஆனால், அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, அடுத்த வருடம் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, கட்சி நிர்வாகிகளைச் சந்தித்துவருகிறார். மேலும், அம்மாநில பூத் ஏஜென்ட்டுகளையும் சந்தித்து, நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி வியூகம்குறித்து ஆலோசனை நடத்திவருகிறார். இதன் காரணமாக, சமீபத்தில் அவர் தமிழகத்துக்கும் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி, நாடு முழுவதும் அவர் சுற்றுப்பயணம்செய்து கட்சி நிர்வாகிகளைச்  சந்தித்துவருவதால், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை செயற்குழுக் கூட்டம் நடத்தப்படவில்லை எனத் தெரிகிறது. 

இந்த நிலையில், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில், இந்த ஆண்டின் இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தல்களில் வெற்றிபெறுவது குறித்து விவாதிப்பதற்காக பி.ஜே.பி கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் அடுத்த மாதம் 18 மற்றும் 19-ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!