Published:Updated:

‘‘மதுக்கடைகள் வேண்டும்!” - ஒரு கிராமத்தில் பெண்கள் நடத்தும் போராட்டம்

‘‘மதுக்கடைகள் வேண்டும்!” - ஒரு கிராமத்தில் பெண்கள் நடத்தும் போராட்டம்
பிரீமியம் ஸ்டோரி
‘‘மதுக்கடைகள் வேண்டும்!” - ஒரு கிராமத்தில் பெண்கள் நடத்தும் போராட்டம்

‘‘மதுக்கடைகள் வேண்டும்!” - ஒரு கிராமத்தில் பெண்கள் நடத்தும் போராட்டம்

‘‘மதுக்கடைகள் வேண்டும்!” - ஒரு கிராமத்தில் பெண்கள் நடத்தும் போராட்டம்

‘‘மதுக்கடைகள் வேண்டும்!” - ஒரு கிராமத்தில் பெண்கள் நடத்தும் போராட்டம்

Published:Updated:
‘‘மதுக்கடைகள் வேண்டும்!” - ஒரு கிராமத்தில் பெண்கள் நடத்தும் போராட்டம்
பிரீமியம் ஸ்டோரி
‘‘மதுக்கடைகள் வேண்டும்!” - ஒரு கிராமத்தில் பெண்கள் நடத்தும் போராட்டம்

மிழகம் முழுக்க டாஸ்மாக் கடைகளை ஊருக்குள் அமைப்பதற்குக் கடும் எதிர்ப்பு இருக்கிறது. பல இடங்களில் பெண்களே திரண்டு வந்து மதுக்கடைகளை உடைத்து நொறுக்குகிறார்கள். இப்படி டாஸ்மாக் எதிர்ப்புப் போர் உக்கிரம் அடைந்திருக்கும் நிலையில், ஒரு கிராமத்தில் மதுபானக் கடைகள் அமைக்க வலியுறுத்தி பெண்களும் சேர்ந்து போராட்டம் நடத்துகிறார்கள் என்ற செய்தி அதிர்ச்சியளித்தது. 

புதுவை மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் தமிழக எல்லையோரம் இருக்கும் சிறிய கிராமம் நல்லாத்தூர். முருகன் கோயில், மருத்துவமனை, கிறிஸ்தவ தேவாலயம், பேருந்து நிலையம், பள்ளிக்கூடம் என எல்லாம் அருகருகே அமைந்துள்ள இந்தக் கிராமக் குடியிருப்புப் பகுதியின் மத்தியில், இரண்டு ஒயின் ஷாப்கள் உள்ளன. இந்த நிலையில்தான் இன்னும் இரண்டு ஒயின் ஷாப்கள் அமைக்கவேண்டி, கிராம மக்களும் பெண்களும் போராடுகிறார்கள். 

‘‘மதுக்கடைகள் வேண்டும்!” - ஒரு கிராமத்தில் பெண்கள் நடத்தும் போராட்டம்

விசித்திரமான இந்தப் போராட்டம் ஏன்?

நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன், “அமைதியா இருந்த எங்க ஊர்ல ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி திடீர்னு ஒயின் ஷாப்களைக் கொண்டுவந்தாங்க. கடுமையா எதிர்த்தோம். அரசு கேட்கல. போலீஸ் பாதுகாப்போட திறந்து வச்சாங்க. அந்தக் கடைங்களால நாங்க படுகிற பாடு கொஞ்ச நஞ்சமில்ல. இது புதுச்சேரி பகுதிங்கறதால, தமிழ்நாட்டைவிட மதுபான விலை குறைவு. இதனால் தினம் தினம் வெளியூர்கள்ல இருந்து நிறைய பேர் குடிக்க வர்றாங்க. கொலைகாரன், கொள்ளைக்காரன்னு முகம்தெரியாத பலரும் தினந்தோறும் போதையோட நடமாடுறதால, நாங்க பயந்து வாழ வேண்டியிருக்கு” என்கிறார். 

அவரைத் தொடர்ந்து பேசிய முனுசாமி, “வாசல்ல ஒரு பொருளை வைக்கமுடியல, குடிக்கக் காசில்லாதவங்க திருடிட்டுப் போயிடுறாங்க. திடீர்னு வீட்டுக் கதவைத் தட்டி தண்ணி கேட்கறாங்க. ஆம்பள இல்லாத வீடுன்னா உள்ளே நுழைஞ்சிடுறாங்க. பகீர்னு ஆகிடுது. பஸ் ஸ்டாண்டு, பள்ளிக்கூடம், கோயில்னு எங்க பார்த்தாலும், போதையில அரைகுறை ஆடையோட விழுந்து கிடக்கிறாங்க. பெண்கள் நிம்மதி தேடி கோயிலுக்குக்கூட போகமுடியாத அவலநிலை. வழியிலதான் இந்தக் கடைங்க இருக்கு. குடிச்சித் தொலைக்கிறவங்க, அந்த பாட்டில உடைச்சி வயல்ல வீசுறாங்க. அதையெல்லாம் அப்புறப்படுத்திட்டு விவசாயம் செய்றதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு” என்றார். 

‘‘மதுக்கடைகள் வேண்டும்!” - ஒரு கிராமத்தில் பெண்கள் நடத்தும் போராட்டம்

‘‘ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிக்கிற எங்க ஊர் புள்ளைங்க, அந்த ஒயின் ஷாப்களை தாண்டித்தான் போகணும், வரணும். டியூஷன் முடிச்சி இரவு நேரத்துல புள்ளைங்க வீடுவந்து சேர்றதுக்குள்ள, வயித்துல நெருப்பைக் கட்டி வைச்சிருக்க வேண்டியிருக்கு. ஏன்னா, ஆடு, மாடு மேய்க்க வயல்வெளிக்குப் போற பொம்பளைங்கள குடிபோதையில கையைப் புடிச்சி இழுத்து கலாட்டா நடந்திருக்கு. கெட்ட வார்த்தையில பொம்பளைங்கள கிண்டலடிக்கிறதைத் தாங்கிக்க முடியல. இதுக்கு விடிவு காலம் வேணாமா?” என்றார், சத்தியகலா. 

எல்லாம் சரி, இரண்டு ஒயின் ஷாப்களால் இவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கும் இவர்கள், இன்னும் இரண்டு ஒயின் ஷாப்களைத் திறக்கச் சொல்லி ஏன் போராடுகிறார்கள்?

‘‘மதுக்கடைகள் வேண்டும்!” - ஒரு கிராமத்தில் பெண்கள் நடத்தும் போராட்டம்

சுமதி என்ற பெண்மணி தெளிவாக பதில் சொன்னார். “எங்க ஊர்ல தமிழக எல்லையோரம் இருக்கிற நந்தலாற்றங்கரையில் ஒதுக்குப்புறமான இடத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலா சாராயக்கடை இருக்கு. அதன் பக்கத்திலேயே புதிதாக இரண்டு ஒயின்ஷாப்கள் கட்டிக்கிட்டு இருக்காங்க. பள்ளிக்கூடத்தைக் காரணம் காட்டி, அதற்கு அரசு அனுமதி தர மறுக்குதாம். சாராயக்கடை இருக்கும்போது, அதுக்குப் பக்கத்தில ஒயின்ஷாப் இருக்கக்கூடாதா? இந்தக் கடைகளைத் திறந்தா, தமிழ்நாட்டிலேர்ந்து வர்றவங்க ஊர் எல்லையிலேயே குடிச்சிட்டு, ஊருக்குள் வராம அப்படியே திரும்பிப் போயிடுவாங்க.  எங்களுக்கும் தொந்தரவு குறையும். ஊருக்கு நடுவில் ஒயின் ஷாப்களைத் திறந்து வெச்சு எங்களை நிம்மதியில்லாம ஆக்கின அரசு, ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் அமைக்க எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? இதற்காகத்தான் போராட்டம் நடத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தோம். ஊருக்கு ஒதுக்குப்புறமா அந்த ஒயின் ஷாப்களை திறக்க முடியாதுன்னா, ஊருக்குள்ள இருக்கற ரெண்டு கடைகளையும் மூடிடணும்” என்றார். 

காரைக்கால் கலெக்டர் பார்த்திபனிடம் பேசினோம். “ஒரு பிரிவினர் ஒயின் ஷாப்களைத் திறக்க வேண்டும் என்றும், இன்னொரு குரூப் திறக்கக் கூடாது என்றும் சொல்கிறார்கள். வழிபாட்டுத்தலம், பள்ளிக்கூடம் அருகே மதுபானக்கடைகள் அமைக்க அனுமதி தர இயலாது. என்றாலும், புதிய மதுக்கடைகள் ஊரின் எல்லையில் அமைந்தால் தொல்லைகள் குறையும் எனச் சொல்கிறார்கள். சட்டத்திற்கு உட்பட்டு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வோம்” என்றார்.

மதுக்கடை வருமானத்துக்காக ஒரு கிராமம் நிம்மதி இழக்க வேண்டுமா? 

- மு.இராகவன்
படங்கள்: க.சதீஷ்குமார்