Published:Updated:

“மாமா தப்பு செய்துவிட்டார்!” - ஐ.ஏ.எஸ் மாணவி மர்ம மரணம்

“மாமா தப்பு செய்துவிட்டார்!” - ஐ.ஏ.எஸ் மாணவி மர்ம மரணம்
பிரீமியம் ஸ்டோரி
“மாமா தப்பு செய்துவிட்டார்!” - ஐ.ஏ.எஸ் மாணவி மர்ம மரணம்

“மாமா தப்பு செய்துவிட்டார்!” - ஐ.ஏ.எஸ் மாணவி மர்ம மரணம்

“மாமா தப்பு செய்துவிட்டார்!” - ஐ.ஏ.எஸ் மாணவி மர்ம மரணம்

“மாமா தப்பு செய்துவிட்டார்!” - ஐ.ஏ.எஸ் மாணவி மர்ம மரணம்

Published:Updated:
“மாமா தப்பு செய்துவிட்டார்!” - ஐ.ஏ.எஸ் மாணவி மர்ம மரணம்
பிரீமியம் ஸ்டோரி
“மாமா தப்பு செய்துவிட்டார்!” - ஐ.ஏ.எஸ் மாணவி மர்ம மரணம்

“கலெக்டர் ஆவேன் என்று சொல்லி, சென்னைக்குப் படிக்கப்போன என் மகள் இப்படி பிணமாகிவிட்டாளே” என்று கதறு கிறார்கள் பெற்றோர். சேலம் மாவட்டம் மேட்டூர் கோம்பை சேர்ந்த காயத்ரி, பொறியியல் பட்டதாரி. ஐ.ஏ.எஸ் கனவுடன் சென்னைக்கு வந்து சைதை துரைசாமியின் மனிதநேய அறக் கட்டளையில் பயிற்சி பெற்றுவந்த காயத்ரி, திடீரென மரணம் அடைய மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி அவரின் பெற்றோரும், உறவினர்களும் உடலை வாங்க மறுத்துப் போராட்டம் செய்தனர்.

காயத்ரியின் அம்மா அருளழகியிடம் பேசினோம். ‘‘எங்களுக்கு காயத்ரி, வினோத்குமார்னு ரெண்டு பிள்ளைங்க. என் வீட்டுக்காரர், வீடுகளுக்குக் கூரை போடுற தொழில் செய்றார். அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பம் நடத்துறோம். காயத்ரி நல்லா படிச்சு, ப்ளஸ் டூவில் 1115 மார்க் வாங்கினா. அப்புறம், கோயமுத்தூரில் சி.ஐ.டி காலேஜில் பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சா.

சின்ன வயதில் இருந்து காயத்ரிக்கு கலெக்டர் ஆகணும்னு ஆசை. சென்னையில் சைதை துரைசாமியோட பயிற்சி மையத்தில் சேர்ந்து படிச்சுட்டு இருந்தா. காயத்ரிக்கு உடம்பு சரியில்லைன்னு கடந்த 18-ம் தேதி ராத்திரி என் கணவருக்கு போன் வந்துச்சு. பதறியடிச்சு சென்னைக்குக் கிளம்பினோம். என் மகளை ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தாங்க. என்னம்மா ஆச்சுன்னு கேட்டதுக்கு, ‘ஒண்ணும் இல்லை... அழாதீங்க’னு சொன்னா. 20-ம் தேதி காலையில் ஒரு நர்ஸ் என் பொண்ணுக்கு ஊசி போட்டாங்க. உடனே, வாய் கோணலாகி மேல் மூச்சு விட்டு என் மகளுக்கு உயிர் போயிருச்சு’’ என்று கதறினார். 

“மாமா தப்பு செய்துவிட்டார்!” - ஐ.ஏ.எஸ் மாணவி மர்ம மரணம்

காயத்ரியின் அப்பா நாகராஜிடம் பேசினோம். ‘‘அடுத்த மாதம் பரீட்சை எழுதிட்டு, டெல்லிக்குப் போயிடுவேன்னு என் மக சொல்லிட்டு இருந்துச்சு. எந்த பாவியோ என் மகளைக் கொன்னுட்டான்’’ என்று சொல்லியவாறு மயங்கிவிட்டார்.

காயத்ரியுடன் விடுதியில் ஒரே அறையில் தங்கி இருந்த பெண்ணிடம் பேசினோம். ‘‘ஆரம்பத்தில் காயத்ரி, தன்னோட பெரியம்மா மகள் ஜோதியின் கணவர் பிரபுவின் வீட்டில் தங்கியிருந்து பயிற்சி மையத்துக்கு வருவாள். மார்ச் இறுதியில்தான் இந்த ஹாஸ்டலுக்கு வந்தாள். கடந்த 18-ம் தேதி இரவு காயத்ரி ரூமுக்கு வரவில்லை. இரவு 10.30 மணிக்கு காயத்ரி போனில் இருந்து எனக்கு கால் வந்தது. ‘நான் காயத்ரியோட மாமா பிரபு பேசறேன். காயத்ரி என் கூட கீழே இருக்கா. கொஞ்சம் வாங்க’ என்றார். கீழே போனேன். `காயத்ரிக்குக் குடும்பப் பிரச்னை. அரளி விதை சாப்பிட்டதாகச் சொல்லி மிரட்டுறா. கொஞ்சம் பத்திரமா பார்த்துக்குங்க. ஏதாவது பிரச்னைன்னா எனக்கு போன் பண்ணுங்க’னு சொல்லிட்டுப் போயிட்டார்.

கொஞ்ச நேரத்தில், ‘வயிறு வலிக்குது’னு காயத்ரி அழுதா. உடனே அவுங்க மாமாவுக்குத் தகவல் சொல்லிட்டு, அண்ணா நகரில் உள்ள எஸ்.கே.எஸ் மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப் போனோம். காயத்ரியின் மாமா வந்து கையெழுத்துப் போட்டு மருத்துவமனையில் சேர்த்தார். அவள் அரளி விதைகள் சாப்பிட்டிருப்பதாக மருத்துவர்கள் சொன்னாங்க. விடியற்காலை மூன்று மணிக்கு காயத்ரி அப்பாவிடம் தகவலைச் சொன்னோம்.

“மாமா தப்பு செய்துவிட்டார்!” - ஐ.ஏ.எஸ் மாணவி மர்ம மரணம்

19-ம் தேதி இரவு காயத்ரியின் அப்பாவும், அம்மாவும் வந்தாங்க. காயத்ரி அவங்ககிட்ட, ‘உங்க ஸ்தானத்துல மாமாவை வெச்சிருந்தேன். ஆனா, அவர் தப்பு செஞ்சிட்டார்’ என்று சொன்னாள். அதன் பிறகு, காயத்ரியின் பெற்றோருக்கும், பிரபு குடும்பத்துக்கும் ஏதோ சண்டை நடந்தது” என்றார்

மனிதநேய அறக் கட்டளையின் நிறுவனர் சைதை துரைசாமியிடம் பேசினோம். ‘‘ஆரம்பத்தில் இது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. ‘மனிதநேய அறக்கட்டளையில் படிக்கும் பெண் மரணம்’ என்று டி.வி-யில் வந்த பிறகுதான் எங்களுக்கே தெரியவந்தது. காயத்ரி, எங்கள் பயிற்சி மையத்தில் படித்த பெண்தான். வெளியில் ஹாஸ்டலில் தங்கி இங்கு படித்து வந்தார். ஹாஸ்டலில் இருந்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். எங்களுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை” என்றார்.

எஸ்.கே.எஸ் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் செல்வகுமாரிடம் கேட்டோம். ‘‘18-ம் தேதி இரவு 11.45-க்கு அந்தப் பொண்ணோட மாமா அட்மிட் பண்ணினார். விஷம் சாப்பிட்டு இருந்த தால், போலீஸுக்குத் தகவல் கொடுத்து எஃப்.ஐ.ஆர் போட வைத்து முதலுதவி சிகிச்சை கொடுத்தோம். விஷம் அருந்துபவர்களுக்குத் தாமதமாகவே இதய அடைப்பு, நுரையீரல் அடைப்பு வரும். அப்படித்தான் காயத்ரிக்கும் வந்துவிட்டது. அதில் அவர் மரணம் அடைந்துவிட்டார்” என்றார்.

“மாமா தப்பு செய்துவிட்டார்!” - ஐ.ஏ.எஸ் மாணவி மர்ம மரணம்

பிரபுவின் போனுக்குத் தொடர்பு கொண்டபோது, அவரின் சகோதரி அம்பிகா பேசினார். ‘‘பிரபுவுக்கு உடல்நிலை சரியில்லை. தற்போது பேசும் நிலையில் அவர் இல்லை. காயத்ரி சென்னை வந்த புதிதில் சில மாதங்கள் எங்கள் வீட்டில் தங்கிப் படித்தார். மற்றபடி, எங்க அண்ணனுக்கும் காயத்ரிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’’ என்றார்.

சமூகத்தின் அடித்தட்டில் உள்ள அருந்ததியர் சமூகத்தில் பிறந்து, ஐ.ஏ.எஸ் கனவுடன் பயணித்த காயத்ரியின் மரணம் பெரும் சோகம்.

- வீ.கே.ரமேஷ்
படங்கள்: எம்.விஜயகுமார்