Published:Updated:

இந்தியா 272 ரன்னுக்கு அவுட்: ஆஸ்திரேலியா மீண்டும் திணறல்

இந்தியா 272 ரன்னுக்கு அவுட்: ஆஸ்திரேலியா மீண்டும் திணறல்
இந்தியா 272 ரன்னுக்கு அவுட்: ஆஸ்திரேலியா மீண்டும் திணறல்
இந்தியா 272 ரன்னுக்கு அவுட்: ஆஸ்திரேலியா மீண்டும் திணறல்

டெல்லி: டெல்லியில் நடந்து வரும் 4வது டெஸ்ட் போட்டியி்ல் இந்திய அணி முதல் இன்னிங்சில் 272 ரன்னுக்கு ஆட்டம் இழந்ததோடு, ஆஸ்ட்ரேலியா அணியை விட 10 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 46 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 262 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. அந்த அணியி்ல் அதிகபட்சமாக சிடில் 51 ரன்னும், ஸ்மித் 46 ரன்னும், ஹக்கீஸ் 45 ரன்னும், கோவன் 38 ரன்னும், பேட்டின்சன் 30 ரன்னும் எடுத்தனர்.

இந்திய தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இசாந்த் சர்மா, ஜடேஜா தலா 2 விக்கெட்டும், ஓஜா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, தொடக்க வீரர்கள் பூஜாரா- முரளி விஜய் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 108 ரன்கள் குவித்தது. 52 ரன் எடுத்திருந்த பூஜாரா, லயான் பந்தில் ஆட்டம் இழந்தார்.

##~~##
பின்னர் வந்த கோலி ஒரு ரன்னில் பௌவிலியன் திரும்பினார். இதையடுத்து களம் புகுந்த சச்சின், விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை. முரளி விஜய் 57  ரன்னில் வெளியேறியதையடுத்து களம் இறங்கிய அறிமுக வீரர் ரஹானே 7 ரன்னில் வீழ்ந்தார்.
பின்னர் சச்சின்- கேப்டன் தோனி ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடியும் தாக்குபிடிக்க முடியவில்லை. 32 ரன் எடுத்த திருப்தியோடு சச்சின் ஆட்டம் இழந்தார்.
ஆனால் தோனி அதிரடியாக விளையாடி 23 ரன்னில் 24 ரன்கள் எடுத்திருந்தபோது, பேட்டின்சன் பந்தில் வாட்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆல் ரவுண்டர் ஜடேஜா அதிரடியாக விளையாடி 43 ரன் எடுத்தார்.
பின்னர் வந்த அஸ்வின் (12), இசாந்த் சர்மா (0), ஓஜா (0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். புவனேஷ்குமார் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 14 ரன்னில் இருந்தார்.
ஆஸ்திரேலியா தரப்பில் லயான் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்டின்சன், சிடில், மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
10 ரன் பின்னடைவு அடைந்த ஆஸ்திரேலியா அணி 2வது இன்னிங்சை தொடங்கியுள்ளது. தொடக்க வீரர்கள் வார்னர் 8 ரன்னிலும், மேக்ஸ்வெல் 8 ரன்னில் ஆட்டம் இழந்தனர். பின்னர் வந்த ஹக்கீஸ் 6 ரன்னில் வெளியேறினார்.
தற்போது ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 46 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. கோவன் 23 ரன்னிலும், வாட்சன் ரன் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.