Published:Updated:

நான்காண்டுகளில் பா.ஜ.க அரசின் சாதனை இதுதான்! - திருமாவளவன் விமர்சனம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நான்காண்டுகளில் பா.ஜ.க அரசின் சாதனை இதுதான்! - திருமாவளவன் விமர்சனம்
நான்காண்டுகளில் பா.ஜ.க அரசின் சாதனை இதுதான்! - திருமாவளவன் விமர்சனம்

நான்காண்டுகளில் பா.ஜ.க அரசின் சாதனை இதுதான்! - திருமாவளவன் விமர்சனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் உலக அரங்கில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நாடுகளின் வரிசையில் 4வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போதைய பா.ஜ.க ஆட்சியில் முதல் இடத்துக்கு வந்துள்ளது. இதுதான் மோடியின் 4 ஆண்டு சாதனை” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அன்னா ஹசாரேவின் போராட்டம் ஊழல் ஒழிப்புக்கான போராட்டம். அந்தப் போராட்டத்துக்குப் பின்னிருந்து துணைபுரிந்தது பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள். அந்தப் போராட்டத்தின் விளைவாக ஆட்சி அதிகாரத்துக்கு வந்தவர் பிரதமர் மோடி. ஊழலை ஒழிப்போம், கறுப்புப் பணத்தை மீட்போம் என்பதுதான் முக்கிய முழக்கமாக இருந்தது. ஊழலை ஒழிப்பதற்கான சட்டத்தையும் நடைமுறைப்படுத்தவில்லை. அயல்நாடுகளில் முடங்கிக் கிடக்கும் கறுப்புப் பணத்தை மீட்கவில்லை. பண மதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி வரிவிதிப்பு போன்ற சுமைகளை மக்கள் மீது திணித்து, உலக அரங்கில் பணத்தின் மதிப்பை அதலபாதாளத்தில் இந்திய ரூபாயின் மதிப்பை சரிய வைத்து சாதனை புரிந்துள்ளது.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட லோக்அதாலத் சட்டத்தை  நீர்த்துப் போகச் செய்யும் வகையில் ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார்களே தவிர, அதை நடைமுறைப்படுத்திட சிறிதளவும் முயற்சி எடுக்கவில்லை. முனைப்பும் காட்டவில்லை. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் உலக அரங்கில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நாடுகளின் வரிசையில் 4வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போதைய பா.ஜ.க ஆட்சியில் முதல் இடத்துக்கு வந்துள்ளது. பெண்களுக்கு மட்டுமல்ல, பட்டியலின, பழங்குடியினர், சிறுபான்மையினர் என பலதரப்பினருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழலே நிலவுகிறது.

சேலம் - சென்னை 8 வழி பசுமைச்சாலை திட்டம் என்பது விவசாயிகள், மக்களுக்கு எதிரான திட்டம். விவசாயிகளின் கடுமையான போராட்டங்களுக்கு மத்தியிலும் எப்படியாவது இத்திட்டத்தைச் செயல்படுத்திவிட வேண்டும் என்பது மத்திய மாநில அரசுகள் நினைப்பது வெகுமக்கள் புரட்சிக்கு வித்திடும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானப் போராட்டத்தில் மக்களே எவ்வாறு தன்னெழுச்சியாக போராடினார்களோ அதுபோல 8 வழி பசுமைச்சாலைக்கு எதிராகவும் மக்கள் போராடும் நிலை ஏற்படும்.

ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைப்பதற்கே போராடும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு உள்ளது. எந்த நேரத்தில் மத்திய அரசு என்ன செய்யும் என்று தெரியாத நிலையில், எப்போதும் நெருக்கடிக்குள்ளே சிக்கித் தவிக்கும் அரசாக உள்ளது. அதனால் சட்டம், ஒழுங்கைக் கவனிக்க இயலவில்லை என்பதை நடைபெறும் வன்முறைச் சம்பவங்கள், படுகொலைகள் உறுதிபடுத்துகின்றன. 10 ஆண்டுகள் சிறையில் இருப்பவர்களை நன்நடத்தையின் அடிப்படையில் விடுதலை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்களையும் விடுதலை செய்ய வேண்டும்” என்றார்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு