‘மழை விட்டாலும் தூவானம் விடாது’ என்பதைப்போல, சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்ற பிறகும், அவருடைய குடும்பத்தினர் மீது நில அபகரிப்புப் புகார்கள் பூகம்பமாகப் புறப்பட்டுள்ளன.

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நிலையில், வழக்கில் உள்ள சொத்துகளைக் கையகப்படுத்தும் நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இந்த நிலையில், சசிகலா குடும்பத்தினரால் தங்களுடைய நிலம் அபகரிக்கப்பட்டதாக கூடுவாஞ் சேரியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற விமானப்படை வீரர் கண்ணனும், அவருடைய மனைவி விஜயலட்சுமியும் போலீஸில் புகார் செய்துள்ளனர். விஜயலட்சுமி ஒரு வழக்கறிஞர்.

சசிகலா குடும்பத்தினரால் அபகரிக்கப்பட்டதாக இவர்கள் சொல்லும் நிலம், சிறுதாவூர் பங்களாவுக்கு அருகில் ஸ்ரீகுமரன் நகர் வெஸ்ட் பகுதியில் உள்ளது. இவர்களின் நிலம் 16.44 கிரவுண்டு. இந்தப் புகார் தொடர்பாக கண்ணனிடம் கேட்டபோது, ‘‘அந்த நிலத்தை உங்களுக்கு நேரில் காட்டுகிறேன்’’ என்று அழைத்துச் சென்றார். ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவை நெருங்கினோம். அதற்கு இப்போதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. “அந்த ரோஸ் கலர் காம்பவுண்டு சுவர் வரை மட்டுமே அவங்களோட நிலம். அதையொட்டி, கற்களால் காம்பவுண்டு எழுப்பப்பட்டுள்ள நிலம் எங்களுடையது” என்று அடையாளம் காட்டினார் கண்ணன்.

“1980-ம் ஆண்டு, சிப்பாய் முனுசாமி என்பவரிடம் இந்த நிலத்தை வாங்கினேன். கிணறு வெட்டி, ஒரு விவசாயியை அங்கு தங்க வைத்து நிலத்தைப் பராமரிக்கச் சொன்னேன். தென்னை, சப்போட்டா மரங்களை வளர்த்தோம். 1984-ல் அந்த விவசாயி வேலையில் இருந்து விலகி விட்டார். பிறகு, நாங்களே அவ்வப்போது போய் நிலத்தைப் பார்த்து வந்தோம். நிலத்தை மேம்படுத்தலாம் என்று 2003-ல் அங்கு போனபோது, எங்களுடைய நிலம் அபகரிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவர்களுடைய நிலத்துடன் இணைத்து காம்பவுண்டு போட்டிருந்தனர். திருப்போரூர் சார் பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்று பார்த்தபோது, ‘இந்த நிலம் பரணி பீச் ரிசார்ட் நிறுவனத்தின் பெயரில் பதிவாகியுள்ளது’ என்றார்கள். அந்த ஆவணங்கள் எல்லாம் போலியானவை. எங்கள் நிலத்தின் விற்பனைக்கான பவர் ஆஃப் அட்டர்னி பூபதி என்பவரின் மகன் சிப்பாய் முனுசாமி பெயரில் உள்ளது. ஆனால், அவர்களுக்கு விற்ற பவர் ஆஃப் அட்டர்னி, திருவேங்கடம் மகன் முனுசாமி.

இது குறித்து ஜெயலலிதாவிடம் முறையிட பல முறை முயற்சி செய்தோம். அவரைப் பார்க்க முடியவில்லை. அவருக்கு பல புகார் மனுக்களையும் அனுப்பினோம். பதிலே இல்லை. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோம். அந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வைத்துவிட்டார்கள்.

சசிகலாவின் வழக்கறிஞர் செந்தில் எங்களை இரண்டு முறை சந்தித்து, ‘இந்தப் பிரச்னையைப் பெரியம்மாவிடம் கொண்டுசெல்ல வேண்டாம். சசிகலா அம்மாவே எல்லாத்தையும் முடித்துக் கொடுத்து விடுவார்’ என்று சொன்னார். ஆனால், எதுவும் நடக்கவில்லை. இதற்காக, கடந்த 15 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். எங்களுடைய வேதனையைச் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை” என்று கண்கலங்கினார்.

இந்த விவகாரத்தில், கண்ணன் குடும்பத்துக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளது அறப்போர் இயக்கம். அதன் ஒருங்கிணைப் பாளரான ஜெயராம் வெங்கடேசனிடம் பேசினோம்.

“ஆறு, ஏரி, குளம் போன்ற நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு, தனி நபர்களின் இடங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக சசிகலா மற்றும் அவருடைய உறவினர்கள் மீது கடந்த பிப்ரவரி மாதம் டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் செய்தோம். அதுதான், இப்போது காஞ்சிபுரம் நில அபகரிப்புத் தடுப்புப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் இதுவும் ஒன்று. இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஆவணங்கள் அனைத்தையும் காவல்துறையிடம் அளித்துள்ளோம்.

சசிகலா மற்றும் அவரின் உறவினர்களுக்கு ஆதரவாக இதில் தொடர்புடைய ஆவணத்தை மறைத்திருக்கலாம் அல்லது அழித்திருக்கலாம் என சந்தேகிக் கிறோம். கடந்த மார்ச் 13-ம் தேதி, பரணி பீச் ரிசார்ட்ஸ் நிறுவனத்துக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள் ளனர். ஆனால், அதன் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. இந்தப் பிரச்னையில் அதிகாரிகள் நேர்மை யாக நடந்துகொண்டால், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தீர்வு கிடைக்கும்” என்றார் ஜெயராம் வெங்கடேசன்.

இந்தநிலையில், சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனன் மீதும் நில அபகரிப்புப் புகார் ஒன்று அனலாகப் புறப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டத்தில் உள்ள ராஜேந்திரம் ஆற்காடு கிராமத்தைச் சேர்ந்த மனோகரன் - வளர்மதி தம்பதியர் தங்களுடைய நான்கு ஏக்கர் நிலத்தை, சுந்தரவதனம் அபகரித்துள்ளார் என்று புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, கடந்த ஒன்பது ஆண்டுகளில், 20-க்கும் மேற்பட்ட புகார் மனுக்களை அளித்தும், சுந்தரவதனத்தின் மீது வழக்கு எதுவும் பதிவுசெய்யப்படவில்லை.

மனோகரனைச் சந்தித்தோம். “தஞ்சாவூர் தெற்கு வீதியில் அச்சகம் மற்றும் ஜெராக்ஸ் கடை வைத்துள்ளோம். எங்கள் சொந்த ஊரான ராஜேந்திரம் ஆற்காட்டில் 4.34 ஏக்கர் நிலம் வாங்கினோம். நான்கு ஆழ்குழாய் கிணறுகள் உள்ளன. தேக்கு, மா, பலா மரங்களை வளர்த்து ஒரு சோலையை உருவாக்கினோம். 2008-ம் ஆண்டு, என் மருமகன் மூலமாக அந்த நிலத்தை சுந்தரவதனம் கேட்டார். கொடுக்க மறுத்துவிட்டோம். எங்கள் அச்சகத்துக்கு வந்து மிரட்டினார்கள்.

இது இருந்தால் வம்பு என்று 65 லட்ச ரூபாய்க்கு விற்க ஏற்பாடு செய்தோம். தகவல் தெரிந்து, என்னையும் என் மனைவியையும் சுந்தரவதனம் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். அங்கு மிரட்டலுக்குப் பயந்து கையெழுத்துப் போட்டோம். என் மகனும், மகளும் சாட்சிக் கையெழுத்துப் போட்டார்கள். பத்திரப்பதிவு அலுவலகத்தில் கையெழுத்துப் போட்டபிறகு, ரொக்கமாக ஆறரை லட்ச ரூபாய் மற்றும் 68 ஆயிரம் ரூபாய்க்கு செக் கொடுத்தார்கள். மீதித்தொகை வரவே இல்லை. இது குறித்து, நடுக்காவேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். எஸ்.பி அலுவலகத்தில் புகார் கொடுத்தோம். நில அபகரிப்புப் பிரிவில் புகார் அளித்தோம். யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. பிறகு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தேன். ஆறு மாதங்களுக்குள் வழக்குப் பதிவுசெய்யுமாறு காவல்துறைக்கு 16.11.2016 அன்று, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இன்னும் வழக்குப் பதிவுசெய்யப்பட வில்லை” என்றார் சோகத்துடன்.

“இந்தப் பிரச்னையால் என் கணவருக்கு மாரடைப்பு வந்து விட்டது” என்று கண்ணீர் வடித்தார் வளர்மதி.

இது குறித்து விளக்கம் கேட்பதற்காக, சுந்தரவதனனின் குடும்பத்தினரைச் சந்திக்கப் பலமுறை முயற்சி செய்தோம். யாரையும் சந்திக்க முடிய வில்லை. எனவே, சுந்தரவதனத்தின் வழக்கறிஞர் வடிவேலுவிடம் பேசினோம். ‘‘வளர்மதியும், மனோகரனும் தங்கள் விருப்பப்படியே அந்த நிலத்தை விற்றனர். அவர்களை மிரட்டியோ, ஏமாற்றியோ, அபகரித்தோ அந்த நிலத்தை வாங்கவில்லை. அவர்களின் மகனும், மகளும் சாட்சிகளாகக் கையெழுத்துப் போட்டுள்ளனர். முழு சம்மதத்துடன் அனைத்துப் பத்திரங்களையும் கொடுத்து, சுந்தரவதனத்துக்கு எழுதிக் கொடுத்துள்ளனர். ஆனால், 2011-ல் சசிகலாவின் குடும்ப உறுப்பினர்கள் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, மேலும் பணம் வாங்குவதற்காக இவர்கள் புகார் அளித்துள்ளனர். நிலத்துக்காகப் பேசப்பட்ட முழுத்தொகையும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை” என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக, தஞ்சாவூர் நிலஅபகரிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் கண்ணதாசனிடம் கேட்டதற்கு, “நான் இங்கு வந்து பத்து நாட்கள்தான் ஆகின்றன. அந்த வழக்குத் தொடர்பான தகவல்கள் எதுவும் எனக்குத் தெரியாது” என்றார்.

‘சசிகலாவை ஒதுக்கி வைத்துவிட்டோம்’ எனச் சொல்கிறார்கள் அமைச்சர்கள். ஆனால் ‘சசிகலா குடும்பத்தினர் ஆக்கிரமித்திருக்கிறார்கள் ’ என்கிற புகாருக்கு நடவடிக்கை இல்லை. இது எப்படி இருக்கு?

- ஏ.ராம், கே.புவனேஸ்வரி

படங்கள்: கே.குணசீலன், தி.குமரகுருபரன்