Published:Updated:

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு! - ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு! - ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி
பிரீமியம் ஸ்டோரி
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு! - ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு! - ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு! - ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு! - ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

Published:Updated:
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு! - ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி
பிரீமியம் ஸ்டோரி
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு! - ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

‘‘கோயிலுக்குப் புதுசா யானை வாங்கியிருக்கோம். நம்ம கோயில்ல சிவன் சந்நிதியும் இருக்கு... விஷ்ணு சந்நிதியும் இருக்கு. யானைக்குப் பட்டை போடறதா... நாமம் போடறதாங்கிறதுதான் பிரச்னை.”

‘‘ஆஹா... ஆரம்பிச்சுட்டேளா... இந்த மேட்டர் அந்த யானைக்குத் தெரியுமா?”

‘‘யானைக்கு ஐந்தறிவுதானே..!”

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு! - ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

‘‘யானைக்கு மட்டும்தானா?”

‘சாமி’ படத்தில் விவேக்  பேசும் இந்த டயலாக்தான் நினைவுக்கு வருகிறது... ‘இறைச்சிக்காக சந்தையில் மாடுகளை விற்கக்கூடாது’ என்று மத்திய அரசு சமீபத்தில் பிறப்பித்திருக்கும் உத்தரவை நினைக்கும்போது. ‘‘அண்ணே... மோடி அண்ணே. இதைப் பத்தி அந்த மாடுகளுக்கிட்ட கேட்டீங்களா... இல்ல, விவசாயிங்ககிட்டயாவது கேட்டீங்களா?’’ என்றுதான் கேள்வி எழுப்பத் தோன்றுகிறது.

பின்னே... மாடு என்பது தனிப்பட்ட மதம், மொழி, இனம், சமூகம், சாதி சம்பந்தபட்ட பிரச்னையல்ல... விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னை. இந்த உத்தரவைப் போட்ட மத்திய அரசுக்கோ... மோடிக்கோ, விவசாயிகளுக்கும் மாடுகளுக்குமான பிணைப்புப் பற்றித் தெரியுமா? இது ஆயிரமாயிரம் ஆண்டு பந்தம். ஆம், ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து தன்னுடன் சேர்த்துக்கொண்ட மனிதன், ஆதிகாலத்திலிருந்தே தனக்குத் துணையாகத் தேடிக் கொண்ட விலங்குகளில் முதன்மையானவை மாடுகள். அவற்றை அவன் பாலுக்காக முதலில் பயன்படுத்தவில்லை. உழவுக்காகவும் உணவுக்காகவும்தான் பயன்படுத்தினான். உழைத்துக் களைத்து ஓய்ந்து போகும், அல்லது உழவுக்கோ வேறு உபயோகங்களுக்கோ பயன்படாத மாடுகளைத்தான் உணவாகப் புசித்தான். மற்றபடி மாடு என்பது அவனுடைய வாழ்நாள் தோழன்.

காட்டுமிராண்டியாக வாழ்க்கையைத் தொடங்கிய மனிதன் வகுத்த கோட்பாடு இது. இப்போது பார்க்கும்போது இது முரண்பாடாகத் தெரியலாம். ஆனால், அன்றைய சூழலில் அதுதான் சரி. உடன்பிறந்த அக்கா மகள் அல்லது தங்கையின் மகளைத் திருமணம் செய்துகொள்வது தமிழகத்தின் பல பகுதிகளில் நடைமுறை. இதுவே, கன்னியாகுமரி பக்கம் சென்றால்... ‘‘என்னது, மருமகளைத் திருமணம் செய்து கொள்வதா?’’ என்று சிரிப்பார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு! - ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

இப்படி ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு, மொழிக்கு மொழி ஆயிரமாயிரம் பார்வைகள் இருக்கும். இவற்றில் இருக்கும் முரண்பாடான விஷயங்கள் காலப்போக்கில் மாறலாம்... அல்லது நாகரிக காலங்களிலும் அவையே தொடரலாம். சில வழக்கங்கள் இன்றும் மாறாமல் இருக்கின்றன, எத்தனையோ பழக்க வழக்கங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன. இவற்றையெல்லாம் சட்டம் போட்டு யாரும் மாற்றவில்லை. காலப்போக்கில்தான் மாறியுள்ளன. மாட்டிறைச்சி உண்பதும்கூட காலப்போக்கில் மாறலாம்... மாறாமலும் போகலாம்.

இதில் தலையிட அரசுக்கு எங்கிருந்து வந்தது அதிகாரம்? ‘மாடுகளை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் விவசாயிகளிடம்தான் அந்த அதிகாரம் இருக்கிறது’ என்பது இயற்கையின் நியதி. இதை அரசியல் அமைப்போ... உச்ச நீதிமன்றமோகூட மறுக்கவே முடியாது என்பதுதான் உண்மை.

பல ஆண்டுகளாக மாடு வளர்ப்பு, பால் விற்பனை செய்து கொண்டிருக்கும் கிணத்துக்கடவைச் சேர்ந்த திருவேங்கடம் இந்தப் பிரச்னை பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா?

‘‘மாட்டுப் பிரச்னையில அரசாங்கம் தலையிடத் தேவையே இல்லை. அதை நாங்க பார்த்துக்குவோம். முதல்ல நாட்டுல ஏற்கெனவே இருக்கிற பிரச்னைகள் பக்கம் கவனத்தைத் திருப்பி, அவற்றையெல்லாம் சரி பண்ணச் செல்லுங்க... புண்ணியமா போகும். எங்க கிராமத்துல ‘பசுமை உழவர் மன்றம்’ மூலமா சுமார் 250 மாடுகள் வரைக்கும் வளர்த்துட்டிருக்கோம். எல்லாமே கலப்பின மாடுங்கதான். ஒரு மாடு அதிகபட்சமா 12 ஈத்து வரைக்கும்கூட கொடுக்கும். சராசரியா எட்டு ஈத்துனு வெச்சுக்கலாம். ஒவ்வொரு ஈத்துக்கும் ஒரு கன்னு கிடைக்கும். முன்பெல்லாம் 40 ஆயிரம், 50 ஆயிரம் ரூபாய்க்கு வித்துக்கிட்டிருந்த மாடுங்க, இப்ப வறட்சி காரணமா 25 ஆயிரம் ரூபாய்க்குதான் விற்பனை ஆகுதுங்க.

இப்படி விலை கொடுத்து வாங்குற மாடுகள் ஈத்து நின்னு, பால் கறப்பும் நின்னு போற நிலையில... அடிமாட்டுக்குத்தான் விற்பனை செய்ய முடியும். மாடு நல்ல பராமரிப்போட இருந்தா, 10,000 லிருந்து 15,000 ரூபாய் வரைக்கும் போகும். இது, விவசாயிகளைப் பொறுத்தவரைக்கும் இன்னொரு வருமானம். இப்படி அடிமாடா விற்பனை செய்யக் கூடாதுனு சொன்னா... ஒவ்வொரு மாட்டுக்கும் மாசம் மூவாயிரத்துக்கும் மேல தீவனச் செலவு பிடிக்கும். இந்தத் தொகையை யார் கொடுக்கிறது? கால்சியம் சத்துக் குறைஞ்சு போச்சுதுனா... மாடு படுத்துக்கும். அதுலயும் இந்தக் கலப்பின மாடுகளைத் தூக்கவே முடியாது. கிரேன் வெச்சுதான் தூக்கணும். இவைகளுக்கெல்லாம் யார் செலவு பண்றது?

‘பேசாம கோசாலையில விடவேண்டியதுதானே’னு சிலர் சொல்றாங்க. அடிமாடா ரெண்டு மாடுகளை வித்துட்டு, புதுசா ஒரு மாட்டை வாங்கிக் கட்டினா அதன் மூலமா லாபம் வரும். கோசாலையில விட்டா எங்களுக்கு என்ன லாபம்? கோசாலைகள்லயும் சிலர் ஏமாத்து வேலை பார்க்கிறாங்க. நாங்க ஒரு மாட்டைக் கொடுத்தா... 10 மாடு கொடுத்ததா கணக்கு எழுதி, அரசிடம் மானியத்தை வாங்கிச் சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க.

‘வலியால துடிச்சிட்டிருக்கிற கன்னுக்குட்டியைக் கொல்றதே நல்லது’னு காந்தி சொல்லியிருக்கார். அதுமாதிரி, ஏற்கெனவே விவசாயிங்க நாங்க பல கஷ்டங்கள்ல துடிச்சிக்கிட்டு இருக்கோம். இந்தச் சூழல்ல எங்கள காப்பாத்தறத விட்டுட்டு, மேலும் எங்களுக்கு இடைஞ்சல் கொடுக்கற வேலைகளையே மத்திய, மாநில அரசாங்கங்கள் செய்துகிட்டிருக்கு. இதுக்கு விவசாயிகளை ஒரேயடியா கொன்னு போட்டுடலாம்’’ என்றார் திருவேங்கடம்.

‘‘எதற்காக அரசியல், மதம் போன்றவற்றை யெல்லாம் நுழைத்து, பிரச்னையைக் கிளப்பி எங்கள் வயிற்றில் அடிக்க வேண்டும்?” என்று கேட்கிறார் சேலம் ஆத்தூரைச் சேர்ந்த ஜெயக்குமார். முப்பது மாடுகள் வரை வைத்துப் பராமரித்து வரும் விவசாயி.

‘‘மாடு வளர்ப்புடன் பாக்கு, தென்னை விவசாயத்தையும் செய்து வருகிறேன். பிறந்தது முதலே விவசாயத்தில்தான் இருக்கிறேன். கலப்பினமோ... நாட்டு மாடோ... எந்த இன மாடாக இருந்தாலும் 5 ஈத்து முடிந்த பிறகு பால் குறைய ஆரம்பித்துவிடும். பொதுவாக மாடுகளை அன்பாகத்தான் பராமரிப்போம். கருத்தரிப்பு நின்ற மற்றும் மலடான மாடுகளை வேறு வழியில்லாமல் விற்பனை செய்வோம். ஆனால்,  நல்ல மாடுகளையும் இப்போது விற்க வேண்டிய நிலை. இன்னொருவரிடம் அடிமாடாக விற்பதற்காகவா 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து மாட்டை வாங்குகிறோம். வளர்க்க முடியாத சூழலில்தானே விற்பனை செய்கிறோம்.

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு! - ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

ஒரு மாடு தினமும் சராசரியாக 6 லிட்டர் பால் கறக்கும். இப்படி 270 நாள் வரைதான் கறக்க முடியும். மாடு வளர்ப்பில் உண்மையில் எங்களுக்கு லாபமே இல்லை. அதையும் மீறி வளர்க்க அரசு தரும் கடன்கள்தான் காரணம். கறவை மாடு வாங்கக் கடன், பயிர்க்கடன் என்று கொடுக்கிறார்கள். தொடர் நஷ்டம் வந்தாலும், இந்தக் கடன் பணத்தை வைத்து சமாளித்து வட்டி, அசல் எல்லாம் கட்டி திரும்பக் கடன் வாங்கி சமாளிக் கிறோம். சாணி அள்ளுவது முதல் அனைத்துப் பணிகளையும் நாங்கள்தான் செய்கிறோம். ஆனால், எங்களின் உழைப்புக்கேற்ற லாபம் இல்லை. வேறு வேலைகளில் இருந்துகொண்டே பகுதிநேரமாக விவசாயம் மற்றும் மாடு வளர்ப்பு செய்பவர்கள் சமாளித்து விடுவார்கள். ஆனால், விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் எங்களைப் போன்றவர்களால் சமாளிக்க முடியாது.

ஒரு பால் மாடு வளர்ப்பின் வரவு-செலவு கணக்கு!

(ஒரு பசு மாடு சராசரியாக 8 கன்றுகள் வரை ஈனும் என்பதை அடிப்படையாகக் கொண்ட கணக்கு இது.)

இன்ஃபோகிராபிக்ஸ்: எஸ்.ஆரிப் முகம்மது

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு! - ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

மாடுகளைக் காப்பாற்றுவதற் காகத்தான் இப்படி ‘இறைச்சிக்காக விற்பனை செய்யத் தடை’ என்று சொல்வது ஏமாற்றுவேலை. சொல்லப்போனால், இங்கே நாட்டுமாடுகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவற்றின் எண்ணிக்கை ஏற்கெனவே சுருங்கிவிட்டது. இருப்பவை எல்லாமே கலப்பின மாடுகள்தான். இதையும் விற்பனை செய்யக்கூடாது என்றால், மாடு வளர்ப்பவர்களுக்கு ஒரு கன்று பிறந்தது முதல் இறக்கும் வரை ஒரு நாளைக்கு 100 ரூபாய் மானியம் கொடுத்தால் போதும், நாங்களே பராமரித்துக் கொள்கிறோம். இதைச் செய்வதற்கு இந்த அரசு தயாராக இருக்கிறதா?” என்று கேட்கிறார் ஜெயக்குமார்.

‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு!’ படியாத மாடுகளுக்காக, கிராமங்களில் சொல்லும் பழமொழி இது. இதைத்தவிர மத்திய அரசுக்குச் சொல்ல வேறு வார்த்தைகள் இல்லை.

- மேகலாசன்
படங்கள்: தி.விஜய், க.சுகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism