Published:Updated:

ஓர் ஊரையே சிறையாக்கிய போலீஸ்! - மீத்தேன் எடுக்க ரகசியத் திட்டமா?

ஓர் ஊரையே சிறையாக்கிய போலீஸ்! - மீத்தேன் எடுக்க ரகசியத் திட்டமா?
பிரீமியம் ஸ்டோரி
ஓர் ஊரையே சிறையாக்கிய போலீஸ்! - மீத்தேன் எடுக்க ரகசியத் திட்டமா?

ஓர் ஊரையே சிறையாக்கிய போலீஸ்! - மீத்தேன் எடுக்க ரகசியத் திட்டமா?

ஓர் ஊரையே சிறையாக்கிய போலீஸ்! - மீத்தேன் எடுக்க ரகசியத் திட்டமா?

ஓர் ஊரையே சிறையாக்கிய போலீஸ்! - மீத்தேன் எடுக்க ரகசியத் திட்டமா?

Published:Updated:
ஓர் ஊரையே சிறையாக்கிய போலீஸ்! - மீத்தேன் எடுக்க ரகசியத் திட்டமா?
பிரீமியம் ஸ்டோரி
ஓர் ஊரையே சிறையாக்கிய போலீஸ்! - மீத்தேன் எடுக்க ரகசியத் திட்டமா?

‘ஓர் அரசின் எல்லைக்குள் சட்டபூர்வமாக வாழும் ஒருவர், அந்தப் பகுதிக்குள் எங்கும் செல்வதற்கும் தன் வாழிடத்தையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை உள்ளவராவார்’ என்கிறது, குடிமை மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த சர்வதேச ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தை சர்வ சாதாரணமாக மீறுகிறது தமிழக போலீஸ். தஞ்சை திருவிடைமருதூர் வட்டத்தில் இருக்கும் கதிராமங்கலம் சிற்றூரிலிருந்து மக்களை வெளியே விடாமலும், வெளியிலிருந்து யாரையும் உள்ளே அனுமதிக்காமலும், ஆயிரக்கணக்கில் போலீஸாரை நிறுத்தி, அந்த ஊரையே திறந்தவெளி சிறைச்சாலை ஆக்கியிருக்கிறது காவல் துறை.

ஓர் ஊரையே சிறையாக்கிய போலீஸ்! - மீத்தேன் எடுக்க ரகசியத் திட்டமா?

என்ன நடக்கிறது கதிராமங்கலத்தில்? கதிரா மங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் குழாய் பதித்திருக்கிறது. ‘இந்தக் குழாய்களால் சூழல் கெட்டுவிட்டது, நிலத்தடி நீர் மிகவும் குறைந்துவிட்டது,  இந்தக் குழாய்களால் விபத்தும் நிகழ்கிறது’ எனக் குற்றம்சாட்டி, கடந்த சில ஆண்டுகளாக நிவாரணம் கேட்டுப் போராடிவருகிறார்கள் மக்கள். இந்தச் சூழலில், சில வாரங்களுக்கு முன்பு அங்கே மீண்டும் பணிகளைத்தொடங்க பெரும் குழாய்களுடன் வந்தது ஓ.என்.ஜி.சி நிறுவனம். மக்கள் தடுத்து நிறுத்தவே, ‘உங்கள் சம்மதம் இல்லாமல், எந்தப் பணியையும் தொடங்க மாட்டோம்’ என்று வாக்குறுதிக் கொடுத்தது ஓ.என்.ஜி.சி. ஆனால், அந்த நம்பிக்கை ஒரு மாதம்கூட நீடிக்கவில்லை. மீண்டும் ஓ.என்.ஜி.சி பெரும் குழாய்களுடனும், மற்ற உபகரணங்களுடனும் ஜூன் 2-ம் தேதி வந்தது. கூடவே நூற்றுக்கணக்கில் போலீஸ். ‘ஏன் இப்படி மக்களை அச்சுறுத்துகிறீர்கள்?’ என்று அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பிய ‘மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்க’த்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்பட 11 பேரைக் கைது செய்து, ஜாமீனில் வரமுடியாத சட்டப்பிரிவுகளில் வழக்குகள் போட்டு சிறையில் தள்ளியது காவல் துறை. சிறைக்குச் செல்லும்முன் நம்மிடம் பேசிய ஜெயராமன், “இப்படி போலீஸ் துணையோடு வர என்ன காரணம்? இது எண்ணெயோ, எரிவாயுவோ எடுக்கும் திட்டமாகத் தெரியவில்லை. எரிவாயு என்ற பெயரில் மக்களை ஏமாற்றி மீத்தேன் எடுக்கத் திட்டமிடுகிறார்களோ என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள். நாங்கள் தொடர்ந்து போராடுவோம்” என்றார்.

ஜெயராமன் கைதுக்குப்பின்பு, போராட்டம் வீரியம் அடைந்திருக்கிறது. வீடுகள்தோறும் கறுப்புக் கொடி ஏற்றியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், ‘இந்த ஊரிலிருந்து வெளியேறுகிறோம். எங்கள் ரேஷன் அட்டைகளையும், ஆதார் அட்டைகளையும் ஒப்படைக்கிறோம்’ என்று திரண்டிருக்கிறார்கள். அதன்பின்தான் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஓர் ஊரையே சிறையாக்கிய போலீஸ்! - மீத்தேன் எடுக்க ரகசியத் திட்டமா?

மீத்தேன் திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராடிவரும் ‘தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்க’த்தின் நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஷ்ணு, “பேச்சுவார்த்தையின்போதும் மக்களின் பக்கம் நிற்காமல், மாவட்ட நிர்வாகம் ஓ.என்.ஜி.சி பக்கம்தான் நிற்பது தெளிவாகத் தெரிகிறது. இது  மீத்தேன் திட்டத்துக்கான முன்னோட்டம்தான். சட்டத்துக்குட்பட்டுதான் எல்லாம் செய்கிறார்கள் என்றால், ஏன் இத்தனை போலீஸாரை ஊரில் நிறுத்தி வைத்திருக்கிறார்கள்? ஏன் கதிராமங்கலம் மக்களைச் சந்திக்கவிடாமல், ஊரையே திறந்தவெளி சிறையாக்கி வைத்திருக்கிறார்கள்?” என்று கோபமாகக் கேட்கிறார்.

‘காவிரி உரிமை மீட்புக் குழு’வின் தலைவர் பெ.மணியரசன், “ஏதோ போர்க்களப் பகுதி போல வீதிக்கு ஒரு காவலரை நிறுத்திவைத்திருக்கிறார்கள். மக்களைச் சந்திக்கச் சென்றால் வழியிலேயே கைது செய்கிறார்கள். கேட்டால், ‘எங்களுக்கு வந்த உத்தரவு’ என்கிறார்கள். இது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. காவிரி டெல்டாவை உடனடியாக வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். மண்ணையும், நீர்வளத்தையும் நஞ்சாக்கும் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவிடாமல் தடுக்க வேண்டும்” என்றார்.

ஓர் ஊரையே சிறையாக்கிய போலீஸ்! - மீத்தேன் எடுக்க ரகசியத் திட்டமா?

இதுகுறித்து ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியைத் தொடர்புகொண்டு பேசினோம். “இது வெறும் மராமத்து பணிதான். ஓ.என்.ஜி.சி எண்ணெய் மற்றும் எரிவாயுதான் எடுக்கிறது. மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. இது மக்களுக்கான நிறுவனம்தான். மக்களிடமும், போராட்டக்காரர்களிடமும் தெளிவாக எடுத்துக் கூறிவிட்டோம்... நாங்கள் கதிராமங்கலம் பகுதிகளில் மேற்கொள்ளும் பணிகள் குறித்து ஒரு விளக்க அறிக்கையையும் விடுத்திருக்கிறோம். ஆனால், இதுகுறித்து புரிதல் இல்லாமல், மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஓ.என்.ஜி.சி  பொதுத்துறை நிறுவனம். மக்களின் வளர்ச்சிக்கான நிறுவனம். அது ஒருபோதும் மக்களின் நலனுக்கு எதிராக எதுவும் செய்யாது” என்றார் அவர்.

‘வளர்ச்சி’, ‘பொருளாதார முன்னேற்றம்’ என்பதெல்லாம் சாமான்ய மக்களுக்காகத்தான். அவர்களை முடக்கி வைத்துவிட்டு, புள்ளிவிவரக் கணக்குகளுக்காக வளர்ச்சியைப் பேசி என்ன பயன்?

- மு.நியாஸ் அகமது
படங்கள்: கே.குணசீலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism