Published:Updated:

“தோட்டாவுக்குப் பயந்தவன் நான் இல்லை!” வெடிக்கும் ராக்கெட் ராஜா

“தோட்டாவுக்குப் பயந்தவன் நான் இல்லை!” வெடிக்கும் ராக்கெட் ராஜா
பிரீமியம் ஸ்டோரி
“தோட்டாவுக்குப் பயந்தவன் நான் இல்லை!” வெடிக்கும் ராக்கெட் ராஜா

“தோட்டாவுக்குப் பயந்தவன் நான் இல்லை!” வெடிக்கும் ராக்கெட் ராஜா

“தோட்டாவுக்குப் பயந்தவன் நான் இல்லை!” வெடிக்கும் ராக்கெட் ராஜா

“தோட்டாவுக்குப் பயந்தவன் நான் இல்லை!” வெடிக்கும் ராக்கெட் ராஜா

Published:Updated:
“தோட்டாவுக்குப் பயந்தவன் நான் இல்லை!” வெடிக்கும் ராக்கெட் ராஜா
பிரீமியம் ஸ்டோரி
“தோட்டாவுக்குப் பயந்தவன் நான் இல்லை!” வெடிக்கும் ராக்கெட் ராஜா

‘‘என்னை போலீஸார் சுற்றி வளைத்து விட்டார்கள். இதுவே என்னுடைய கடைசிப் பேச்சாக இருக்கலாம்’’ என ராக்கெட் ராஜா பேசும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி விட்டது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பதற்றத்தை ஏற்படுத்திய பசுபதி பாண்டியன் கொலை உட்பட பல விவகாரங்களில் தொடர்புபடுத்தப்பட்டவர் ராக்கெட் ராஜா. பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையாருக்கு நெருக்கமானவராக இருந்தவர். வெங்கடேச பண்ணையார் மரணத்துக்குப் பிறகு எதிரிகளுக்குப் பயந்து வெளியே தலைகாட்டாமல் இருந்தார்.

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகில் உள்ள ஆனைகுடி கிராமத்தைச் சேர்ந்த ராக்கெட் ராஜா மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் ‘‘என்னை என்கவுன்டரில் சுட்டுக் கொல்ல நெல்லை மாவட்ட எஸ்.பி அருண் சக்திகுமார் குறி வைத்திருக்கிறார்” என வாட்ஸ் அப் வீடியோ வெளியிட்டார். உடனே, தெஷணமாற நாடார் சங்கம், நாடார் மகாஜன சங்கம் உள்ளிட்ட நாடார் அமைப்புகள் ராக்கெட் ராஜாவுக்கு ஆதரவாகக் களமிறங்கின.

“தோட்டாவுக்குப் பயந்தவன் நான் இல்லை!” வெடிக்கும் ராக்கெட் ராஜா

தலைமறைவாக இருக்கும் ராக்கெட் ராஜாவை பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு தொடர்பு கொண்டோம். அவர், “நான் ஒரு கால்பந்து வீரன். சிறு வயதிலேயே சாதிய விவகாரங்களில் தலையிட்டதால் என் வாழ்க்கை திசைமாறிவிட்டது. நான் 9-வது படித்தபோது, சாதிப் பிரச்னை தொடர்பான முதல் வழக்கைச் சந்தித்தேன். பல பிரச்னைகளுக்குப் பிறகு, வட இந்தியாவுக்கு வந்து செட்டிலாகிவிட்டேன். எப்போதாவதுதான் சொந்த ஊருக்குப் போவேன். என் மீது போடப்பட்ட வழக்குகளில் இருந்து விடுதலையாகிவிட்டேன். இப்போது என் மீது எந்த வழக்கும் கிடையாது. ஆனால், திருநெல்வேலிக்குப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள எஸ்.பி அருண் சக்திகுமார் என்னைத் தேடுகிறார். என் மீது பொய் வழக்குப் போட்டு என்கவுன்டரில் சுட்டுக்கொல்லத் திட்டமிட்டுள்ளார். என்னுடைய ‘நாடார் மக்கள் சக்தி கட்சி’யில் நிர்வாகியாக இருக்கிறார் என்ற காரணத்துக்காக ஹரி நாடாரைக் குண்டர் சட்டத்தில் அடைத்தார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“தோட்டாவுக்குப் பயந்தவன் நான் இல்லை!” வெடிக்கும் ராக்கெட் ராஜா

இப்போது கேரள எல்லையில் எனக்குத் தெரிந்த பிரவீன்ராஜ் என்பவரைத் துப்பாக்கியுடன் போலீஸார் பிடித்துள்ளனர். அந்த வழக்கில் என்னைச் சேர்க்க முயற்சி நடக்கிறது. என் வீட்டில் அத்துமீறிச் சோதனை போட்டுள்ளனர். என் தோட்டத்தில் வேலை செய்த ஐந்து பேரைக் கைதுசெய்துள்ளனர். ஹீரோயிசம் பண்ண வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் எஸ்.பி செய்கிறார். இவர், என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்தாலும் நான் பயப்படப் போவதில்லை. தோட்டாவுக்கு அஞ்சி வாழுகிற ஆள் நான் கிடையாது. எனக்கும் இன்னொரு குழுவுக்கும் இடையே நடக்கும் தனிப்பட்ட பிரச்னையில் எஸ்.பி தலையிடுகிறார். அனுபவம் இல்லாத அவர், தன்னை முன்னிறுத்த இப்படி செயல்படுவதை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும்” எனப் படபடத்தார் ராக்கெட் ராஜா.

போலீஸ் அதிகாரிகளிடம் பேசியபோது, ‘‘குமரி மாவட்டம் அமரவிளை செக்போஸ்ட்டில், கடந்த 3-ம் தேதி கேரள மாநிலப் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது, பேருந்தில் வந்த ஒரு இளைஞரிடம் துப்பாக்கி மற்றும் 12 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரை நெல்லை போலீஸார் விசாரித்தனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், ஐந்து பேரைக் கைது செய்துள்ளோம். இந்த கோஷ்டியினர், திருவனந்தபுரத்தில் உள்ள எதிர் குழுவைச் சேர்ந்த வழக்கறிஞரைக் கொலை செய்யத் திட்டமிட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது” என்றனர். 

“தோட்டாவுக்குப் பயந்தவன் நான் இல்லை!” வெடிக்கும் ராக்கெட் ராஜா

ராக்கெட் ராஜாவின் வீடியோ குறித்து எஸ்.பி அருண் சக்திகுமாரிடம் கேட்டோம். ‘‘கேரள போலீஸாரிடம் பிடிபட்ட பிரவீன்ராஜிடம் நடத்திய விசாரணையில் சில தகவல்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில்  ராக்கெட் ராஜா வீட்டில் சோதனையிட்டோம். அங்கு பதுங்கி இருந்த ஐந்து பேரைக் கைது செய்துள்ளோம். அவர்களிடம் இருந்து மேலும் சில தகவல்கள் கிடைத்துள்ளன. பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதும், சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதும் எங்கள் பணி. சாதி ரீதியாக இரு குழுக்கள் மோதிக்கொள்ளும்போது, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க நாங்கள் நடவடிக்கை எடுக்கத்தான் செய்வோம். இதற்காக என்கவுன்டர் அளவுக்கு யாரும் அச்சப்படத் தேவையில்லை” என்றார்.

இது தொடர்பாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்களான இன்பதுரை, செல்வ மோகன்தாஸ் பாண்டியன் ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசியுள்ளனர். இன்பதுரை நம்மிடம், ‘‘ராக்கெட் ராஜா, என் தொகுதியைச் சேர்ந்தவர். அவருடைய வீடியோவைப் பார்த்ததும் டி.ஜி.பி-யிடம் பேசினேன். முதல்வரின் கவனத்துக்கும் விஷயத்தைக் கொண்டுசென்றேன். என்கவுன்டர் செய்தால் சமுதாய ரீதியாகக் கட்சிக்குப் பின்னடைவு ஏற்படும் என்பதால் இந்த முயற்சியில் இறங்கினேன். தவறு செய்பவர்களைச் சட்டத்தின் பிடியில் நிறுத்துவதுதான் போலீஸின் கடமை. என்கவுன்டர் வரை போவது தவறு” என்றார்.

- ஆண்டனிராஜ்,

படங்கள்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism