Published:Updated:

'உங்க அரிசியில் பிளாஸ்டிக் இருக்கா? - அரிசி அரசியலின் பின்னணி!

'உங்க அரிசியில் பிளாஸ்டிக் இருக்கா? - அரிசி அரசியலின் பின்னணி!
பிரீமியம் ஸ்டோரி
'உங்க அரிசியில் பிளாஸ்டிக் இருக்கா? - அரிசி அரசியலின் பின்னணி!

'உங்க அரிசியில் பிளாஸ்டிக் இருக்கா? - அரிசி அரசியலின் பின்னணி!

'உங்க அரிசியில் பிளாஸ்டிக் இருக்கா? - அரிசி அரசியலின் பின்னணி!

'உங்க அரிசியில் பிளாஸ்டிக் இருக்கா? - அரிசி அரசியலின் பின்னணி!

Published:Updated:
'உங்க அரிசியில் பிளாஸ்டிக் இருக்கா? - அரிசி அரசியலின் பின்னணி!
பிரீமியம் ஸ்டோரி
'உங்க அரிசியில் பிளாஸ்டிக் இருக்கா? - அரிசி அரசியலின் பின்னணி!

‘‘உங்கள் டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்கா?” என்றனர். இப்போது, ‘உங்க அரிசியில் பிளாஸ்டிக் இருக்கா?’ என்ற கேள்வியால் ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் கதிகலங்கிப் போயிருக்கிறது.

“பிளாஸ்டிக் அரிசியை, சமைத்தால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். சாதாரண அரிசி கையில் ஒட்டிக்கொள்வதுபோல பிளாஸ்டிக் அரிசி கையில் ஒட்டாது. சமைத்தபின், சாதாரண அரிசியைவிட அதிக நேரம் கெடாமல் இருக்கும். நெருப்பில் காட்டினால், பிளாஸ்டிக் வாசம் வரும். சாதத்தைப் பிசைந்து உருண்டையாக்கிக் கீழே போட்டால், அது பந்து போல எழும்பிவரும். அரிசியைச் சமைக்கும்போது, அந்தப் பாத்திரத்தில் பசை போல ஒட்டியிருந்தால் அது பிளாஸ்டிக் அரிசி. அதேபோல அரிசி, தண்ணீரில் மிதக்காவிட்டால் அது வழக்கமான அரிசி. தண்ணியில் மிதந்தால் அது பிளாஸ்டிக் அரிசி” என பிளாஸ்டிக் அரிசி விளக்கவுரைகள் சமூக வலைதளங்களிலும், வாட்ஸ் அப்களிலும் வலம் வந்து, இல்லத்தரசிகளின் இதயங்களை நொறுக்கிக்கொண்டிருக்கின்றன.

'உங்க அரிசியில் பிளாஸ்டிக் இருக்கா? - அரிசி அரசியலின் பின்னணி!

சென்னை ஜாஃபார்கான் பேட்டையைச் சேர்ந்த வசந்தி, “பிளாஸ்டிக் அரிசி சாப்பிட்டால் பிளாஸ்டிக்கையே சாப்பிடுற மாதிரி. பிளாஸ்டிக் மண்ணுல மக்காது. அதுமாதிரிதான் உடம்புல சேர்ந்தா ஆபத்தாகாதா? அதனால கிட்னியில் ஸ்டோன் வரும்... இரைப்பைப் பிரச்னை ஏற்பட்டு உயிரை பறிக்கும்னு என்ன என்னவோ மெசேஜ் எல்லாம் வந்து ரொம்ப பயமுறுத்துது. அதனால நாங்க கோதுமை உணவுக்கு மாறிட்டோம். புள்ளைங்களோ ஃபாஸ்ட் ஃபுட் பக்கம் போய்ட்டாங்க’’ என்றார் அப்பாவியாக.

வேளச்சேரியைச் சேர்ந்த ஐ.டி ஊழியரான மோகனப்ரியா, “எனக்கு ரெண்டு வயசுல குழந்தை இருக்கு. எளிதில் ஜீரணமாகும் என்பதற்காக இட்லி ஊட்டுவேன். சாப்பாட்டை பருப்புல கரைச்சு ஊட்டுவேன். இப்போ பயமாயிருக்கு. ஒரு வாரமா அரிசி அயிட்டமே சாப்பிடுறதில்லை. சிறு தானியம் பக்கம் போலாம்னு இருக்கேன். ஆனா, உணவு பழக்கத்தை மாத்தினா குழந்தை உடம்பு அதை ஏத்துக்குமான்னு குழப்பமா இருக்கு’’ என்றார் தாய்மையின் அக்கறையோடு.

‘அயனாவரம் சென்னை மாநகரப் போக்குவரத்து பணிமனை கேன்டீனில் பிளாஸ்டிக் அரிசி பயன்படுத்துகின்றனர்’ என்று போர்க்கொடி தூக்கினர் பணிமனை தொழிலாளர்கள். ‘‘எங்க கேன்டீன் சாப்பாட்டை உருட்டி, கீழே வீசி பார்த்தோம். பந்து மாதிரி எழும்பியது. நிச்சயமா அது பிளாஸ்டிக் அரிசிதான். ஏற்கெனவே பஸ் டிரைவர்கள், நீண்ட நேரம் பஸ் ஓட்டுறதால மூலம், குடலிறக்கம்னு பல வியாதிகளைச் சம்பாதிச்சிருக்கோம். இப்போ இந்த பிளாஸ்டிக்கைச் சாப்பிட்டு குடல் வெந்து சாகணுமா?’’ எனக் குமுறினர். அங்கே திரண்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அரிசி மாதிரியை எடுத்து, வேதியியல் சோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில், “தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் அரிசி என்பதே இல்லை. யாரும் வதந்தி பரப்பவேண்டாம்” என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் எச்சரித்து வருகிறார். ஆனாலும் மக்களின் அச்சம் விலகியபாடில்லை.

பிளாஸ்டிக் அரிசியின் வேர்!

கடந்த 2010-ம் ஆண்டில் சீனாவின் ஷாங்க்ஷி பகுதியில் இருந்துதான் பிளாஸ்டிக் அரிசி பற்றிய தகவல்கள் பரவின. ‘இங்கு தொழிற்சாலைகளில் பிளாஸ்டிக் பிசின் சேர்த்துப் பிளாஸ்டிக் அரிசி உருவாக்கப்படுகிறது. இதன்மேலே உள்ள மெல்லிய பிளாஸ்டிக் லேயரை எடுத்து வெயிலில் காய வைத்தால், பிளாஸ்டிக்கே(!) கிடைக்கும்’ என்ற ரீதியில் தகவல்கள் பரவின. இதையொட்டி வெளியான சில வீடியோக்கள் வைரலாகி இந்தியாவுக்குள் நுழைந்து, ஆந்திரா, கர்நாடகா, தற்போது தமிழ்நாடு என தென் இந்தியாவைக் குறிவைத்துத் தாக்கி வருகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிளாஸ்டிக் அரிசி என்றால் என்ன?

“மைசூர் பாகில் எப்படி மைசூர் இருக்காதோ, திருநெல்வேலி அல்வாவில் எப்படி திருநெல்வேலி இருக்காதோ, அதே போல் பிளாஸ்டிக் அரிசியில் பிளாஸ்டிக் இருக்காது. அரிசி குருணையை அல்லது ஜவ்வரிசி குருணையை அரைத்து, அதனுடன் மரவள்ளி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு மாவைச் சேர்த்துக் கூழாக்கி, போரிக் அமிலத்தைச் சேர்த்துக் கலக்கி காய வைத்து விடுகின்றனர்.

'உங்க அரிசியில் பிளாஸ்டிக் இருக்கா? - அரிசி அரசியலின் பின்னணி!

பிறகு மெஷினில் கொடுத்து அரிசியைப் போல் சிறு துண்டுகளாக்கி அரிசியில் கலந்துவிடுகின்றனர். ஒரு கிலோ மரவள்ளி ஐந்து ரூபாய்தான். சர்க்கரைவள்ளிக் கிழங்கு 10 ரூபாய்க்குள்தான். குருணை உள்ளிட்ட எல்லாவற்றையும் சேர்த்தாலும் உற்பத்தி செலவு 15 ரூபாய்க்கு மேல் போகாது. ஆனால், கிலோ 40 ரூபாய்க்கு விற்கும் அரிசியில் கலந்து விற்கும்போது பெரும் லாபம் ஈட்ட முடியும். எனவே, ‘வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை’ என தோள்தட்டுவதற்குப் பதிலாக, மேற்கண்டவாறு மோசடியில் ஈடுபடும் நபர்களைக் கண்டறிந்து, தொழிற்சாலைகளைக் கண்டுபிடித்து, கடும் நடவடிக்கை எடுப்பதுதான் அரசின் முதன்மையான வேலை” என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்.

இதனால் ஆபத்தா?

“சில கலப்பின அரிசிகள் ஜவ்வரிசியின் தன்மையோடு இருப்பதால்தான் அரிசி, பந்து போன்று எழும்புகிறது. இதற்கும் பிளாஸ்டிக்குக்கும் சம்பந்தமில்லை. உண்மையில், பிளாஸ்டிக் அரிசி வதந்தி என்பது, தென்னிந்திய உணவு முறைக்கு எதிராக நிகழ்த்தப்படும் தாக்குதல்’’ என்கிறார் அரசு பொதுநல மருத்துவர் பரூக் அப்துல்லா. “கோதுமையில் இருக்கும் க்ளூட்டன், ஒவ்வாமை உள்பட பல பிரச்னைகளை ஏற்படுத்தும். தென்னிந்திய மக்களைவிட வட இந்திய மக்களுக்கு இந்த நோய்கள் அதிகம். மேற்கு உலகம் க்ளூட்டனை மெல்ல மெல்ல தவிர்த்து வருகிறது. நாமோ க்ளூட்டனுடன் உள்ள கோதுமையை உணவாக எடுத்து வருகிறோம். தென்னிந்திய மக்களிடம் அரிசி உணவு மீது பயத்தை உருவாக்கி, கோதுமையை நோக்கித் திருப்பும் வணிக அரசியல் இதனுள் இருப்பதாக நாம் பார்க்கலாம்’’ என்றார் வேறொரு கோணத்தில்.

கார்ப்பரேட் வணிகம்!

தென்னிந்தியாவில் நெல் உற்பத்தியே பிரதானம். இதில் தமிழ்நாட்டு பொருளாதாரத்தில் வேளாண்மைத் துறையின் பங்கு 21 சதவிகிதம் ஆகும். தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங் களில் மட்டுமே சுமார் எட்டு லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி நடக்கிறது. பஞ்சாப், அரியானா போன்ற வட மாநிலங்களின் வேளாண் உற்பத்தி என்பது கோதுமை சாகுபடி மட்டுமே! ஆண்டுக்கு சுமார் 10 கோடி மெட்ரிக் டன் கோதுமையை உற்பத்தி செய்து, உலகளவில் இந்தியா இரண்டாவது இடம் வகிக்கிறது. உலகளவில் அமெரிக்காவில் கோதுமை, மைதா உணவு நுகர்வு அதிகம். இதற்கடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. இந்தச் சந்தையைக் குறிவைத்து பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்தியாவிலிருந்து கோதுமை ஏற்றுமதி, இறக்குமதி பரவலாக நடைபெறுகிறது. எப்படி ஜல்லிக்கட்டுத் தடைக்குப் பின்னால் கார்ப்பரேட்களின் பால் அரசியல் வணிகம் இருந்ததோ, அப்படி இந்தத் தொழிலில் ஈடுபடும் கார்ப்பரேட் முதலாளிகள், தங்கள் வணிகத்துக்காக அரிசிக்கு எதிரான யுத்தத்தை நிகழ்த்துகின்றனர்.

இது ஒரு பிரதான காரணமென்றால், மற்றொரு முக்கிய காரணம், இந்தியாவில் பிரபல யோகா சாமியார், தமது நிறுவனத்தின் மூலம் பாக்கெட் அரிசி விற்பனையைத் தொடங்கு கிறார். ‘‘ரோட்டோரக் கடை களில் சாப்பிட்டால் உடல்நிலை பாதிப்படையும் என்றால், நாம் உடனே பெரிய ஹோட்டல் களுக்குச் செல்வோமில்லையா? அதுபோல பிளாஸ்டிக் அரிசி என்ற வதந்தியைப் பயன்படுத்தி, ‘எங்கள் நிறுவன அரிசியே ஆரோக்கியமான, தரமான அரிசி’ என்று விளம்பரப்படுத்த இந்த வதந்தி உதவலாம். இதுவே பிளாஸ்டிக் அரிசி வதந்திக்குப் பின்னுள்ள நுணுக்கமான அரசியல்’’ என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி விற்பனையாளர்கள் கூட்டமைப்பின் மாநிலச் செய லாளர்  மோகன், “பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தி அரிசி உற்பத்தி செய்ய இயலாது. தேவையில்லாமல் மக்களைப் பீதியடையச் செய்கிறார்கள். பிளாஸ்டிக் கிலோ 88 ரூபாய். அதில் அரிசி செய்து, அதைவிடக் குறைந்த விலைக்கு யார் விற்பார்கள்? பிளாஸ்டிக் அரிசி செய்து மக்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்கு மளவுக்கு    நாங்கள் மனிதாபிமானமற்றவர்கள் இல்லை’’ என்றார் அழுத்தமாக.

நாம் உண்ணும் அரிசியில் நம் பெயர் எழுதப்பட்டிருக்கிறது என்று பொதுவாகச் சொல்வார்கள். இன்று, ஒவ்வொரு அரிசியிலும் கார்ப்பரேட் நலன் எழுதப்பட்டுள்ளது!

- சே.த.இளங்கோவன்

படங்கள்: சரவணகுமார்

'உங்க அரிசியில் பிளாஸ்டிக் இருக்கா? - அரிசி அரசியலின் பின்னணி!

முத்திரை வேண்டும்!

“எந்த வகை கலப்படமும் ஆபத்துதான். மிளகில் பப்பாளி விதை கலப்படத்தை இன்றளவும் கட்டுப்படுத்த முடியவில்லை. மாவில் ரெசின் கலந்து உருவாக்கும் பிளாஸ்டிக் அரிசி வகைகள் குடலை பாதிக்கும். அரிசி விற்கப்படும் கடைகளில் தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட வேண்டும். பிளாஸ்டிக் கலப்படம் அற்ற நல்ல அரிசி என்று அரசால் முத்திரை இடப்பட்டு உறுதி செய்யப்பட வேண்டியது அவசியம். கலப்படம் கண்டு பிடிக்கப்பட்டால் குறைந்தது பத்தாண்டுகள் சிறை என்கிற சட்டத்தைக் கொண்டு வரவேண்டும்” என்கிறார் சூழலியலாளர் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில்.

- ஐஷ்வர்யா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism