Published:Updated:

மின்வெட்டால் தமிழகத்தில் அதிகரிக்கும் கொள்ளை!

மின்வெட்டால் தமிழகத்தில் அதிகரிக்கும் கொள்ளை!
மின்வெட்டால் தமிழகத்தில் அதிகரிக்கும் கொள்ளை!

தமிழகத்தில் ஏற்பட்டு வரும் தொடர் மின்வெட்டால் இரவு நேரங்களி்ல் கொள்ளைகள் அதிகரி்த்துள்ளது. திருச்சியில் 60 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளி பொ ருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த தி.மு.க. ஆட்சியில் சென்னையில் ஒரு மணி நேரமும், கிராமப்புறங்களில் மூன்று மணி நேரமுமாக மின்வெட்டு இருந்தது. ஆனால் ஆட்சி மாற்றத்துக்கு பிறகு மின்வெட்டு நேரம் தலைகீழாக மாறியது.

கிராமப்புறங்களி்ல் மூன்று மணி நேரமாக இருந்த மின்வெட்டு படிப்படியாக அதிகரித்து 14 மணி நேரமானது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

தொழில் நகரமான கோவை, திருப்பூர், ஈரோடு  உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் மின்வெட்டால்  தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் வேலையை இழந்து சொந்த ஊருக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் சில மாதங்களாக மின் வெட்டு நேரம் குறைந்திருந்தது. தற்போது கோடை காலம் என்பதால் மின்தேவை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மின்வெட்டு நேரம் மீண்டும் அதிகரி்த்துள்ளது. கிராமப்புறங்களில் 14 மணி நேரம் முதல்1 6 மணி நேரம் மின்வெட்டு நிலவி வருகிறது.

##~~##
அதுமட்டுமின்றி, தொழில் நகரமான கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் 16 மணி நேரம் மின்வெட்டு நிலவி வருகிறது. இதனால் மக்கள் மீண்டும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த தொடர் மின்வெட்டை பயன்படுத்திக் கொண்டு தமிழகத்தில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.  இதனால் மக்கள் பீதியில் உள்ளனர்.
தற்போது திருச்சியில் மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில். திருச்சி சீனிவாசநகரில் வசித்து வரும் செந்தில்குமார் குடும்பத்தினருடன் பழனி கோயிலுக்கு சென்றிருந்தார்.
இதனைப் பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் இன்று அதிகாலை வீட்டில் புகுந்து 60 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இவற்றின் மதிப்பு 16 லட்ச ரூபாய் ஆகும்.
இது குறித்து செந்தில் குமார் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கொள்ளைர்களைதேடி வருகின்றனர்.

 'ப்ரீத்தி" கார்த்திக்