Published:Updated:

நிஜத்தைக் கக்குவாரா நீரா?

அழைத்தால் வருவேன்... அத்தனையும் சொல்வேன்!

நிஜத்தைக் கக்குவாரா நீரா?

அழைத்தால் வருவேன்... அத்தனையும் சொல்வேன்!

Published:Updated:

அமலாக்கப் பிரிவின் கண்காணிப்பில் இருக்கிறார் நீரா ராடியா! 

##~##
2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசாங்கத் தின் கஜானாவுக்குப் போக வேண்டிய பணத்தைத் தனிப் பாதை போட்டுத் திருப்பிக்கொண்டர்களா என்ற விவகாரம் பூதாகாரமாக வெடித்து, தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா பதவிவிலகியாக வேண்டிய நெருக்கடியை எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஏற்படுத்தின. இது தொடர்பான வழக்கு சி.பி.ஐ-யின் விசாரணையில் இருக்கிறது. உச்ச நீதிமன்றம் தனது பிடியை அதிகமான அளவில் நெருக்கியும் வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில், மத்திய அமலாக்கப் பிரிவில் கடந்த புதன்கிழமை வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார் நீரா ராடியா. ஸ்பெக்ட்ரம் 2ஜி அலைவரிசை ஒதுக் கீட்டில் மிக முக்கியமான மீடியேட்டராக சி.பி.ஐ-யால் கருதப்படும் ராடியாவை அமலாக்கப் பிரிவு விசாரிக்கிறது என்றால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அமலாக்கப் பிரிவும் இணைந்து ரகசிய விசாரணை செய்து வருகிறது என்றுதான் அர்த்தம்.  

நிஜத்தைக் கக்குவாரா நீரா?

பெரிய பெரிய நிறுவனங்கள் சார்பில் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளைத் தொடர்புகொள்ளும் மக்கள் தொடர்புத் துறையில் ஜாம்பவானாக இருப்பவர் நீரா ராடியா. டாடாவின் பெரும்பாலான நிறுவனங்கள், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களின் ஊடகத் தொடர்பை நீராவின் நிறுவனம்தான் செய்துவந்தது.

49 வயதாகும் நீரா ராடியாவின் பெற்றோர் காஷ்மீரை சேர்ந்தவர்கள். இவர்கள் கிழக்கு ஆப்ரிக்காவில் பணியாற்றியபோது, பிறந்தவர் நீரா. இங்கிலாந்து பிரஜையாக இருந்தாலும், 'இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்டவர்’ என்ற தகுதியைப் பெற்றுள்ளார். பெயருக்குள் ராடியாவை வைத்திருந் தாலும், இவர் தன் கணவர் ஜானக் ராடியாவை விவாகரத்து செய்துவிட்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இவரது சரளமான ஆங்கிலப் பேச்சுத் திறன்தான் இவரை ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளிடம் எளிதில் நெருக்கத்தை ஏற்படுத்தியது. 1990-களில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளை இந்தியாவில் தொடங்கும் முயற்சி (டாடா நிறுவனம் சார்பில்) மூலம் இங்கு வந்து சேர்ந்தார். நீராவின் கனவுத் திட்டம் மேஜிக் ஏர்! குறைந்த விலையில் தரமான விமான சேவை அளிக்க வேண்டும் என்பதுதான் ஐடியா.

'நீராவின் திட்டப்படி மேஜிக் ஏர் டேக் ஆஃப் ஆகி இருந்தால், இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான விமான நிறுவன மாக அது இருந்திருக்கும்!’ என்று இந்தியன் ஏர்லைன்ஸின் முன்னாள் தலைமைச் செயலாக்க அதிகாரி ஒருவர் கூறும் அளவுக்கு விமானப் போக்குவரத்து துறையில் அறிவு கொண்டவர். இந்த ஆழ்ந்த அனுபவம் காரணமாக நீராவுக்கு டாடா - சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஆலோசகர் பதவி தேடி வந்தது. அந்த விமான நிறுவனம் டேக் ஆஃப் ஆகவில்லை. ஆனால், அவருக்கு இரண்டு பெரும்புள்ளிகளுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அவர்களில் ஒருவர் பி.ஜே.பி-யைச் சேர்ந்த சிவில் விமானப் போக்குவரத்துத் துறை முன்னாள் அமைச்சர் அனந்த் குமார்... மற்றொருவர், டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா.

2000-ம் ஆண்டில் அனந்த் குமார் அமைச்சராக இருந்தபோது, விமானப் போக்குவரத்துத் துறையில் நுழைய லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்தார் நீரா. ஆனால், அது சர்ச்சைக்குரியதாக இருந்ததால், அனுமதி கொடுக்காமல் ஒதுங்கிக் கொண்டார் அனந்த் குமார். ரத்தன் டாடாவுடனான சந்திப்பு அவரை கார்ப்பரேட் கம்யூனிகேஷன் உலகின் உச்சத்துக்குக் கொண்டு சென்றது. நீராவின் பேச்சு, திறமையால் கவரப்பட்ட ரத்தன் டாடா தன்னுடைய அனைத்து நிறுவனங்களின் கார்ப்பரேட் கம்யூனிகேஷன் (நிறுவனங்களின் மக்கள் தொடர்பு) பொறுப் பைக் கொடுத்தார். இதைத் தொடர்ந்து 2001-ம் ஆண்டு நீரா ராடியா, 'வைஷ்ணவி கார்ப்பரேட் கம்யூனிகேஷன்’ தொடங்கினார்.

அதன் பின்னர் அவரது அசுர வளர்ச்சி தொடங்கியது. கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்கள் அவரது நிறுவனத்தின் சேவையைப் பெற்று வந்தன. ஊடக மேலாண்மை தொடர்பாக முகேஷ் அம்பானியும் நீராவை அணுகினார். இப்படி ஒரு சில ஆண்டுகளிலேயே இந்தியாவின் மிகப் பெரிய பணக்கார கார்ப்பரேட் நிறுவனங்களில் ஒன்றானது. இவரது பல்வேறு நிறுவனங்களின் ஒட்டுமொத்த ஆண்டு வருமானம்

நிஜத்தைக் கக்குவாரா நீரா?

100 கோடி முதல்  

நிஜத்தைக் கக்குவாரா நீரா?

120 கோடி வரை. டிராய் முன்னாள் தலைவர் பிரதிப் பைஜல், நிதித் துறை முன்னாள் செயலாளர் வாசுதேவ் உள்பட பல முக்கிய அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், நீராவின் நண்பர்கள் வட்டத்தில் இருந்தனர்.

இப்படிப்பட்ட நீரா கடந்த 2009-ம் ஆண்டு மத்திய ஆட்சியில் யார் யார் அமைச்சர், அதுவும் எந்தத் துறை யாருக்குத் தரப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் மனிதராக இருந்திருக்கிறார். இவர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி, பத்திரிகையாளர் வீர் சங்வி, செய்தியாளர் பர்கா தத், தொழிலதிபர் ரத்தன் டாடா ஆகியோருடன் அந்த சமயத்தில் பேசிய பேச்சுகள் முழுமையாக வெளியே வந்து அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளன. ஆ.ராசாவுக்கு மீண்டும் தொலைத் தொடர்புத் துறையை வாங்கித் தர வேண்டும் என்று தனக்குத் தெரிந்த பத்திரிகையாளர்கள் மூலமாக நீரா ராடியா காங்கிரஸ் மேலிடத் துக்கு நெருக்கடி கொடுக்கிறார் என்பதாகவும், ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகிய இருவரும் இதற்கான தங்களின் தூதராக நீராவை வைத்திருந்தார்கள் என்பதாகவும் இந்த டேப் ஆதாரங்கள் சொல்கின்றன. இந்த டேப் விவரங்கள் அனைத்தையும் உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு சி.பி.ஐ. கொண்டு சென்றுள்ளது.

''ஸ்பெக்ட்ரம் 2ஜி ஒதுக்கீட்டில் சம்பந்தப் பட்டவர்கள்தான் ஆ.ராசாவை மீண்டும் அந்தத் துறைக்கே அமைச்சராக்கத் துடித் தனர் என்று நினைக்கிறது சி.பி.ஐ. எனவே, அதைக் கண்டுபிடிக்க மத்திய அமலாக்கப் பிரிவின் உதவியை சி.பி.ஐ. நாடியது. பணப் பரிவர்த்தனைகள் இந்தியாவுக்கும் வெளிநாடுகளுக்கும் நடந்திருந்ததாகக் கணித்தது அமலாக்கத் துறைதான். ஸ்பெக்ட்ரம் 2ஜியை ஏலம் எடுத்த நிறுவனங்கள் அதை அதிக விலைக்கு வெளிநாட்டு கம்பெனிகளுக்கு விற்பனை செய்துள்ளன. எனவே, வெளிநாட்டுத் தொடர்புகள் முக்கியமானவை என்பதால் இத்துறையின் உதவியை நாடினார்கள்.

அவர்களுக்கு உதவி செய்வது வருமான வரித் துறை புலனாய்வு அதிகாரிகள். இவர்கள் முக்கியமான தொழிலதிபர்களின் போன்களை டேப் செய்வார்கள். வரி ஏய்ப்பு குறித்த தகவல்களைத் தோண்டுவதற்கு இந்த வசதி அவர்களுக்கு தரப்படுகிறது. அவர்கள் செய்த டேப்பில்தான் நீரா ராடியாவின் முக்கிய லிங்க் அத்தனையும் கிடைத்தது!'' என்று சொல்லும் டெல்லி அதிகாரிகள்...

''நீரா ராடியாவின் அனைத்துத் தொடர்புகளையும் 2007-ம் ஆண்டில் இருந்து முழுமையாக அமலாக்கப் பிரிவும் சி.பி.ஐ-யும் கைப்பற்றிவிட்டன. இந்த வேலைகள் அனைத்தும் கடந்த மே மாதமே தொடங்கிவிட்டன. உடனடியாக அவரது சில வங்கிக் கணக்குகளை முடக்க ஆரம்பித்தனர். இதனால், வைஷ்ணவி நிறுவனமே செயல்பட முடியாத அளவுக்கு முடக்கப்பட்டது.

இதைத் தெரிந்த பிறகுதான் நீரா ராடியா வெளி நாட்டுக்கு தப்பிச் சென்றார். அதிகாரபூர்வமான விசாரணைக்காக அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த மாதம் அழைத்தார்கள். 'எனக்கு உடல் நிலை சரியில்லை’ என்று வர மறுத்திருக்கிறார். அடுத்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பத் தயாரானார்கள். இனி தன்னைக் கைது செய்துவிடுவார்கள் என்று நினைத்த அவர் இறங்கி வர ஆரம்பித்தார். இதற்கு மத்தியில் அவரை இந்தியாவுக்கு வர வேண்டாம் என்று பலரும் தகவல் அனுப்பினார்கள். அவர்களிடம் 'நான் யார் யாருக்கு உதவி செய்துள்ளேன் என்பதற்கு ஆதாரம் வைத்துள்ளது சி.பி.ஐ. அதை நான் மறுக்க முடியாது. ஆனால், என்னுடைய கம்பெனி சார்பில் அதற்கான ஃபீஸ் வாங்கியதைத் தாண்டி, நான் எந்த ஆதாயத்தையும் பெறவில்லை. அதை நான் நிரூபிப்பேன்!’ என்று சொல்லிவிட்டு டெல்லிக்கு கிளம்பி வந்து தங்கியிருந்தார். புதன்கிழமை விசாரணை நடந்தது!'' என்கிறார்கள்.

டெல்லி இந்தியா கேட் அருகில் இருக்கிறது அமலாக்கப் பிரிவு அலுவலகம். இதன் டெபுடி டைரக்டர் பிரபா காந்த், நீராவை சுமார் ஏழு மணி நேரம் விசாரித்தார். ''நீரா தன்னுடைய தொழில் தொடர்புகள் அனைத்தையும் மறைக்காமல் சொல்லிவிட்டார். தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் அனைவருக்கும் தனக்கும் உள்ள நெருக்கத்தை ஒப்புக்கொண்டார். டாடா மற்றும் முகேஷ் அம்பானி தொடர்பு தன்னாலேயே மறைக்க முடியாதது என்று கூறினார். தொலைத் தொடர்புத் துறையில் டாடா நிறுவனத்துக்கு சில சலுகைகள் மறுக்கப்பட்டதை டாடா தன்னிடம் சொல்லி வருந்தியதாகவும், அவருக்கு தான் சில உதவிகளைச் செய்தேன் என்றும் நீரா அப்போது சொல்லியிருக்கிறார். அவருடைய பேச்சில் இருக்கும் புரியாத சில வார்த்தைகளுக்கு அதிகாரிகள் விளக்கம் கேட்டபோதும் அதை மறைக்காமல் சொல்லி இருக்கிறார். 'என்னை எப்போது வேண்டுமானாலும் கூப்பிடுங்கள். அனைத்தையும் சொல்லத் தயாராக இருக்கிறேன்’ என்று நீரா வாக்குறுதி கொடுத்தார்!'' என்றும் டெல்லித் தகவல்கள் கூறுகின்றன.

ஊழலில் பயனாளிகள் யார், அவர்கள் அதிகார மட்டத்தில் இருக்கின்ற யாருக்கு எவ்வளவு தொகையைக் கொடுத் தார்கள், அது எங்கெல்லாம் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது போன்ற தகவல்களை நீரா மூலமாக அமலாக்கப் பிரிவும் சி.பி.ஐ-யும் அள்ளிக்கொள்ளும் என்றே சொல் கிறார்கள்!

-  பா.பிரவீன்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism