Published:Updated:

டி.ஆர்.எஸ் Vs பா.ஜ.க: `132 கோடி மக்களும் பா.ஜ.கமீது குற்றப்பத்திரிகை பதிய வேண்டும்!' - என்ன பிரச்னை?

TRS Vs BJP
TRS Vs BJP

`ஹைதராபாத் வளர்ச்சிக்காக 67,000 கோடி ரூபாய் செலவிட்டதற்கான ஆவணங்கள் இருக்கின்றனவா' என்ற கேள்வியும் அந்தக் குற்றப்பத்திரிகை புத்தகத்தில் எழுப்பப்பட்டிருக்கிறது.

தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவரும், தெலங்கானா மாநில முதல்வருமான சந்திரசேகர் ராவ், மத்தியில் ஆளும் பா.ஜ.க-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். `ஹைதராபாத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளுக்குமான கூட்டத்தை டிசம்பர் மாத இறுதிக்குள் நடத்தியே தீருவேன்' என்று உறுதி கூறி, அதற்கான ஏற்பாடுகளையும் முழுவீச்சில் செய்துகொண்டிருக்கிறார்.

சந்திரசேகர ராவ்
சந்திரசேகர ராவ்
அ.தி.மு.க-விடம், பா.ஜ.க அதிக சீட்டுகளை வாங்கினால் சாதகம் யாருக்கு? #TNElection2021

சந்திரசேகர் ராவ், எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டுவதற்கு முக்கியக் காரணம், சமீபத்திய இடைத் தேர்தல்தான் என்று சொல்லப்படுகிறது. தெலங்கானாவிலுள்ள துபக்கா (Dubbaka) தொகுதியில் சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. பொதுவாக, இடைத்தேர்தல்களில் பெரும்பாலும் அம்மாநிலத்தை ஆளும் கட்சிகளே வெற்றி பெறும். ஆனால், தெலங்கானாவில் நடைபெற்ற சமீபத்திய இடைத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று சந்திரசேகர் ராவுக்கு அதிர்ச்சி கொடுத்தது.

``பா.ஜ.க தெலங்கானாவில் அதிவேகமாக வளர்ந்துவருகிறது. அதன் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்று சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார் சந்திரசேகர் ராவ்'' என்கிறது தெலங்கானா அரசியல் வட்டாரம்.

தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினரும், பா.ஜ.க-வினரும் நேரடியாகவே அம்மாநிலத்தில் மோதிக்கொள்ளத் தொடங்கியிருக்கும் நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தெலங்கானா அரசுமீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கி `குற்றப்பத்திரிகை' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது பா.ஜ.க. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டிருக்கும் அந்தக் குற்றப்பத்திரிகை புத்தகத்தில், தெலங்கானா அரசுமீது மொத்தம் 132 குற்றங்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன. `ஹைதராபாத் வளர்ச்சிக்காக 67,000 கோடி ரூபாய் செலவிட்டதற்கான ஆவணங்கள் இருக்கின்றனவா?' என்ற கேள்வியும் அந்தக் குற்றப்பத்திரிகைப் புத்தகத்தில் எழுப்பப்பட்டிருக்கிறது.

குற்றப்பத்திரிகை புத்தக வெளியீடு
குற்றப்பத்திரிகை புத்தக வெளியீடு
Twitter/ @bandisanjay_bjp
மேற்கு வங்கம்: `மிஷன் 200'... 11 பேர்கொண்ட குழு - மம்தாவை வீழ்த்துமா பா.ஜ.க?

இதையடுத்து, பா.ஜ.க-வின் இந்தப் புத்தக வெளியீட்டுக்கு பதிலளிக்கும்விதமாக தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் செயல் தலைவரும், அம்மாநில அமைச்சருமான கே.டி.ராமா ராவ் காட்டமாகப் பேசியிருந்தார்.

2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதி அளித்தபடி ஒவ்வோர் இந்தியரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் செலுத்தத் தவறியதால் பா.ஜ.க-வுக்கு எதிராக 132 கோடிக்கும் மேல் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட வேண்டும். ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தருவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியதற்காக இந்நாட்டின் இளைஞர்கள், பா.ஜ.க-வுக்கு எதிராக மேலும் 12 கோடி குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்ய வேண்டும்.
கே.டி.ராமா ராவ், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி
மேலும் பேசிய அவர், ``எதற்காக எங்கள்மீது குற்றம் சுமத்துகிறீர்கள்... அன்னப்பூர்ணா உணவகங்கள் அமைத்ததற்காகவா (சாலைகளில்), சிசிடிவி அமைத்ததற்காகவா, எல்.இ.டி விளக்குகளைப் பொறுத்தியதற்காகவா, மின்சாரப் பிரச்னையையும் தண்ணீர் பிரச்னையையும் தீர்த்ததற்காகவா அல்லது ஹைதராபாத்துக்கு முதலீடுகளைக் கொண்டு வந்ததற்காகவா.... இந்தக் காரணங்களுக்காகவெல்லாமா எங்கள்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வீர்கள்?'' என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.
கே.டி.ராமா ராவ்
கே.டி.ராமா ராவ்
KT Rama Rao/Twitter

அமைச்சர் கே.டி.ராமா ராவின் பேச்சுக்குப் பின்னர், தெலங்கானா மாநில பா.ஜ.க-வுக்கும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கும் இடையேயான மோதல் போக்கு அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு