Published:Updated:

ரஜினியின் சென்டிமென்ட் கோயில்... கட்டி முடிக்கும் சசிகலா!

ரஜினியின் சென்டிமென்ட் கோயில்...  கட்டி முடிக்கும் சசிகலா!
பிரீமியம் ஸ்டோரி
News
ரஜினியின் சென்டிமென்ட் கோயில்... கட்டி முடிக்கும் சசிகலா!

ரஜினியின் சென்டிமென்ட் கோயில்... கட்டி முடிக்கும் சசிகலா!

கீற்றுக்கொட்டகையிலேயே இருந்த சிவலிங்கத்துக்கு ஒரு கோயில் எழுப்ப வேண்டும் என்பது ஊர் மக்களின் ஆசை. கோயிலைக் கட்டுவதற்காகப் பிரசன்னம் பார்த்தபோது, ‘‘அரசாள்பவர்களின் உத்தரவில்தான் இந்தக் கோயில் கட்டி எழுப்பப்படும்” என்று கூறியுள்ளனர். இப்போது சசிகலாவின் முயற்சியில் இந்தக் கோயில் கட்டப்பட்டு வருகிறது. கிழக்குக் கடற்கரை சாலையில், கூவத்தூரை அடுத்த முகையூரில் இருக்கும் கனகபுரீஸ்வரர் ஆலயம்தான் அது.

ரஜினியின் சென்டிமென்ட் கோயில்...  கட்டி முடிக்கும் சசிகலா!

கோயிலைப் பற்றி முகையூர் மக்கள் பெருமையோடு சொல்கிறார்கள். ‘‘ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகப் பல்லவர் காலத்தில் இங்கு சிவன் கோயில் ஒன்று கட்டப்பட்டது. சுமார் 400 வருடங்களுக்கு முன்பு இயற்கைச் சீற்றத்தில் அது தரைமட்டமானது. கடற்கரை மணலில் புதைந்திருந்த சிவலிங்கம் மட்டும், சில ஆண்டுகளுக்கு முன்பு லேசாக வெளியில் தெரிந்தது. லிங்கத்தைத் தோண்டியெடுத்து, அதே இடத்தில் கீற்றுக் கொட்டகை அமைத்து கண்ணன் என்பவர் வழிபடத்தொடங்கினார்” என்றார்கள். இப்போதும் கோயிலைப் பராமரித்து வருபவர், அவர்தான். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ரஜினியின் சென்டிமென்ட் கோயில்...  கட்டி முடிக்கும் சசிகலா!
ரஜினியின் சென்டிமென்ட் கோயில்...  கட்டி முடிக்கும் சசிகலா!

இந்தக் கோயிலைப் பற்றிக் கேள்விப்பட்ட ரஜினிகாந்த், இரண்டு முறை இங்கு வந்தார். ‘‘லிங்கத்தைத் தரிசித்த பிறகுதான், தன் பேரனுக்கு ‘லிங்கா’ எனப் பெயர் சூட்டினார் ரஜினி. தன் படத்துக்கும் ‘லிங்கா’ எனத் தலைப்பு வைத்தார். கருணாநிதியின் மகள் செல்வியின் உறவுக்காரர்களும் ஒவ்வொரு பிரதோஷத்துக்கும் கோயிலுக்கு வருவார்கள். சசிகலாவை ஜெயலலிதா விலக்கி வைத்தபோது இந்தக் கோயிலைப் பற்றி சசிகலாவிடம் சொல்லியிருக்கிறார்கள். உடனே, இங்கு வந்து தரிசனம் செய்தார் சசிகலா. அடுத்த சில மாதங்களில், சசிகலாவை ஜெயலலிதா அரவணைத்துக்கொண்டார். அதனால், கனகபுரீஸ்வரர் மீது சசிகலாவுக்கு நம்பிக்கை அதிகரித்தது” என்கிறார்கள் ஊர் மக்கள்.

ரஜினியின் சென்டிமென்ட் கோயில்...  கட்டி முடிக்கும் சசிகலா!

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களின் ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது, கனகபுரீஸ்வரருக்கு பூஜை செய்யுமாறு சசிகலா சொல்லியிருக்கிறார். பூஜையின்போது மணி அடிக்கும் நேரத்தில்தான், அவர்களுக்கு ஜாமீன் கிடைத்ததாம். அடுத்த முறை இங்கு வந்த சசிகலா, ‘‘கோயிலுக்கு நான் என்ன செய்ய வேண்டும், சொல்லுங்கள்?” என்று கேட்டிருக்கிறார். ‘‘சிவனுக்குக் கோயில் எழுப்ப வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளனர். அதை ஜெயலலிதாவிடம் சசிகலா தெரிவித்துள்ளார். ‘திருப்பணியைத் தொடங்குங்கள். நானே கும்பாபிஷேகத்துக்கு வருகிறேன்’ என ஜெயலலிதா சொன்னாராம். 2014-ல் கோயில் திருப்பணிகள் தொடங்கப்பட்டன.

ரஜினியின் சென்டிமென்ட் கோயில்...  கட்டி முடிக்கும் சசிகலா!

அடிக்கடி சசிகலா வருவதைக் கேள்விப்பட்ட சிட்லபாக்கம் ராஜேந்திரன், சின்னையா உள்ளிட்ட லோக்கல் அ.தி.மு.க பிரமுகர்களும் இங்கே படையெடுத்தனர். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஓ.எஸ்.மணியன், வேலுமணி என அ.தி.மு.க புள்ளிகள் பலரும் இங்கு வந்தனர். சசிகலாவிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக, அமைச்சர்கள் சிலர் இந்தக் கோயில் திருப்பணிக்கான பல வேலைகளை உடனடியாகச் செய்துகொடுத்துள்ளனர். ஜெயலலிதாவை வைத்து கும்பாபிஷேகம் நடத்த சசிகலா விரும்பினார். அது முடியாமல்போனது.

தற்போது சசிகலா சிறையில் இருக்கும் சூழலில், அமைச்சர்கள் யாரும் இந்தக் கோயிலுக்கு வருவதில்லை. அ.தி.மு.க-வின் உள்கட்சிப் பிரச்னைகளால், கோயில் தரப்பில் கேட்கப்பட்ட உதவிகளும் கிடைக்கவில்லை.

இந்தச் சூழலில், ‘‘எனக்காக எதுவும் தடைபட வேண்டாம். விரைவில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யுங்கள்’’ என்று  தனது உறவினர்களிடம் சசிகலா கூறியிருக்கிறார். ‘‘ஆடி மாதம் பிறந்த பிறகு கும்பாபிஷேகம் நடத்தக்கூடாது. வளர்பிறையில் பிரதோஷமும் சேர்ந்து வரும் ஜூலை 6-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்துங்கள்” எனச் சசிகலா நாள் குறித்திருக்கிறார். இதையடுத்து சிவாலய வேலைகள் விறுவிறுப்பு அடைந்துள்ளன. ‘‘சசிகலாவின் அண்ணன் மனைவியான இளவரசியின் வாரிசுகள் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெறப்போகிறது’’ என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

- பா.ஜெயவேல்