நித்தியானந்தா மீண்டும் செய்திகளில் அடிபட ஆரம்பித்துள்ளார். இப்போதும் நல்லவிதமாக அல்ல!

திருவண்ணாமலையில், பவளக்குன்று மலையை இரும்பு வேலி அமைத்து ஆக்கிரமிப்பதற்கு நித்தியானந்தாவின் ஆட்கள் செய்த முயற்சியை முறியடித்து விட்டது தமிழக அரசு.

கர்நாடகா பிடதியில் ஆசிரமம் ஏற்படுத்தி, இன்று மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை வளர்த்திருக்கும் நித்தியானந்தாவுக்குச் சொந்த ஊர் திருவண்ணாமலை. இங்கு 1978- ல் பிறந்தவருக்கு வீட்டில் வைத்த பெயர் ராஜசேகர். நித்தியானந்தா, சிறுவயதில் பவளக்குன்று மலையில் விளையாடுவார். ‘அங்குதான் தியானம் செய்தார்; ஞானம் பெற்றார்’ என்றெல்லாம் அவரது சீடர்கள் சொல்லி வந்தார்கள். இப்போது அந்த இடத்தைச் சொந்தம் கொண்டாட நினைத்தார்கள். மலையில் ஆக்கிரமிப்பு செய்து ஆசிரமம் அமைக்க, நித்தியானந்தாவின் சீடர்கள் கடந்த வாரம் முயற்சி செய்தனர்.

இது தொடர்பாக, அந்தப் பகுதி மக்களிடம் பேசினோம். “சித்ரா பௌர்ணமியன்று, நித்தியானந்தாவின் ஆட்கள் இரவோடு இரவாக இங்கு வந்து பூஜைகள் செய்தனர். கடந்த பத்து நாள்களாக அதிகளவில் சீடர்கள் வரத்தொடங்கினர். பிறகு, அங்கேயே சமைத்துச் சாப்பிட்டனர். பின்னர், குடிசை அமைத்துத் தங்க ஆரம்பித்தனர். ‘இரவில் இங்கு தங்காதீர்கள்’ என்று அவர்களிடம் சொன்னோம். அதற்கு, அவர்கள் எங்களை மிரட்டினார்கள். ‘இனிமேல் இங்கேதான் தங்கப் போகிறோம்’ என்றார்கள். அதன்பிறகுதான் விஷயத்தை அதிகாரிகளுக்குச் சொன்னோம்” என்றனர்.

பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து, ஆர்.டி.ஓ உமாமகேஸ்வரி நேரில் சென்று, நித்தியானந்தாவின் சீடர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கூறினார். ஆனால், ‘முடியாது’ என அவர்கள் தகராறு செய்தனர். உடனே அரசு அதிகாரிகளையும் பொது மக்களையும் பெண் சீடர்கள் செல்போன்களில் வீடியோ எடுத்து, வாட்ஸ்அப்பில் நித்தியானந்தாவுக்கு அனுப்பிக்கொண்டிருந்தனர். ‘வெளியேற முடியாது’ எனப் பிடிவாதம் செய்ததால், அவர்களை போலீஸ் வலுக்கட்டாயமாக வெளியேற்றியது.

ஆக்கிரமிப்பு முயற்சியை எதிர்த்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் வீரபத்திரனிடம் பேசினோம். “எட்டு ஆண்டுகளுக்கு முன்பே பவளக்குன்றில் ஐந்து ஏக்கர் இடத்தை ஆக்கிரமித்து, மரங்களை வெட்டி, ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் சமப்படுத்தி கட்டடம் கட்ட முயற்சித்தனர். அப்போதே அரசு உதவியுடன் அதை மக்கள் தடுத்து நிறுத்தினர். தற்போது, மீண்டும் பவளக்குன்றில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டனர். பத்து நாட்களுக்கு முன்பு, பெண் சீடர்கள் உட்பட 15-க்கும் மேற்பட்டோர் பவளக்குன்றின் பெரிய பாறைக்கு மஞ்சள் பூசி, சூலம் நட்டு, சிவன் சிலை மற்றும் நித்தியானந்தாவின் உருவப் படங்களை வைத்து பூஜைகள் செய்துள்ளனர். பிறகு, அங்கேயே குடிசைப் போட்டு தங்க ஆரம்பித்தனர். அதோடு கட்டடம் கட்டும் திட்டத்துடன் இரும்பு வேலி அமைக்க ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். அதிர்ச்சியடைந்த பகுதி மக்கள், எங்கள் கட்சியிடம் தெரிவித்தனர். திருவண்ணாமலை தாசில்தார் ரவி, கலெக்டர் ஆகியோரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆர்.டி.ஓ அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவதற்குப் பொதுமக்களுடன் திரண்டோம். அதன் பிறகுதான், ஆர்.டி.ஓ உமாமகேஸ்வரி ஸ்பாட்டுக்கு வந்து, சீடர்களை அப்புறப்படுத்தினார்” என்றார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளர் கருப்பு கருணா, “மலையில் குடிசை அமைத்து, பூஜைகள் செய்து, இரும்பு வேலி போட்டு மலையை வளைக்கும் வரைக்கும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போராடுவதற்கு மக்கள் தயாரான பிறகே நடவடிக்கையில் இறங்கினர். அரசின் சொத்தை ஆக்கிரமிக்க முயற்சி செய்யும் நித்தியானந்தாவைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்” என்றார் ஆவேசத்துடன்.

நித்தியானந்தா சீடர்களிடமும் ஆசிரம நிர்வாகிகளிடமும் கருத்துக்கேட்க முயற்சித்தோம். அவர்கள் யாரும் பேச முன்வரவில்லை.

- கா.முரளி