திருச்சி, மார்ச் 5,2011

காங்கிரஸ் நிபந்தனைகளுக்கு தி.மு.க. உடன்படக் கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். ##~~##
இதுகுறித்து திருச்சியில் நிருபர்களிடம் கூறுகையில், "கூட்டணிக்கு நெருக்கடி கொடுக்கும் காங்கிரஸுக்கு திமுக உடன்பட கூடாது.
திமுகவுக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதால் வெற்றி வாய்ப்பு மிகப் பெரும்பான்மையாக உள்ளது.
இன்று மாலை நடைபெறும் திமுக உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் காங்கிரஸை தவிர்ப்பது பற்றி முடிவெடுக்க வேண்டும்.
மற்ற கட்சிகளுடன் சட்டமன்ற தேர்தலை திமுக கூட்டணி சந்திக்க வேண்டும்," என்றார் கீ.வீரமணி.