Published:Updated:

காஷ்மீரை பாகிஸ்தான் பிரித்து கேட்டால் என்னவாகும்: நாராயணசாமி கேள்வி

புதுச்சேரி: காஷ்மீரை தனியாகப் பிரித்துக் கொடுக்க பாகிஸ்தான் வலியுறுத்தினால் நிலைமை என்னவாகும் என்று மத்திய இணையமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பினார்.

புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கைக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து பிரதமர் தகுந்த முடிவெடுப்பார் என்றார்.

இலங்கைத் தூதர் கரியவாஸம், தனது அதிகாரத்துக்கு உட்பட்டு பேச வேண்டும் என்று நாராயணசாமி கூறினார்.

தமிழக மாணவர்களின் முக்கிய கோரிக்கையான தமிழ் ஈழம் தொடர்பாக இந்தியா வற்புறுத்தினால், காஷ்மீரை தனியாகப் பிரித்துக் கொடுக்க பாகிஸ்தான் வலியுறுத்தினால் நிலைமை என்னவாகும் என நாராயணசாமி கேள்வி எழுப்பினார்.

##~~##
காஷ்மீரில் மனித உரிமை மீறப்பட்டதாக ஐநா சபையில் தீர்மானம் கொண்டு வந்தால் இந்தியா ஏற்றுக்கொள்ளுமா? எனவும் நாராயணசாமி கூறினார்.