Published:Updated:

பேருந்துகளுக்கு டிக்கெட் வாங்கியதில் ஊழல்- தி.மு.க வெளிநடப்பு

பேருந்துகளுக்கு டிக்கெட் வாங்கியதில் ஊழல்- தி.மு.க வெளிநடப்பு
பேருந்துகளுக்கு டிக்கெட் வாங்கியதில் ஊழல்- தி.மு.க வெளிநடப்பு
பேருந்துகளுக்கு டிக்கெட் வாங்கியதில் ஊழல்- தி.மு.க வெளிநடப்பு

சென்னை: சென்னை மாநகர பேருந்துகளுக்கு டிக்கெட் வாங்கியதில் நடந்துள்ள முறைகேடு குறித்து விசாரிக்க அனுமதி அளிக்காததை கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடியதும், தி.மு.க சட்டப்பேரவை தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு ஊழல் குற்றச்சாட்டை எழுப்பினார்.

மாநகர போக்குவரத்து கழகங்களுக்கு டிக்கெட் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் கூறிய மு.க.ஸ்டாலின், இது குறித்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.

##~~##
ஆனால் இந்த புகார் குறித்து விசாரிக்க சபாநாயகர் தனபால் அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். இதனை கண்டித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.