Published:Updated:

விதிமீறல்: மு.க.அழகிரிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

Vikatan Correspondent

சென்னை, மார்ச் 5,2011

தேர்தல் நடத்தை விதிமீறியாதாக, மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு தேர்தல் ஆணையம் இன்று நோட்டீஸ் அனுப்பியது. ##~~##

மு.க.அழகிரி கடந்த 2-ம் தேதி தேர்தல் நடத்தை விதிகளை மீறி சென்னைக்குப் பயணம் மேற்கொண்டார் என்றும், அதுதொடர்பாக முன்பே தகவல் தெரிவிக்காமல் மறுநாள் தான் (மார்ச் 3) தேர்தல் ஆணையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், சென்னைக்கு அதிகாரப்பூர்வ பயணம் செல்வதாகக் கூறிவிட்டு, மார்ச் 4-ம் தேதி (நேற்று) மதுரை சென்று அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், இந்த செயல்பாடுகளின் மூலம் அவர் தேர்தல் நடத்தை விதிகளை மீறிவிட்டதாகவும் தேர்தல் ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக, மு.க.அழகிரிக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

அதில், மார்ச் 7-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.