கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மாநிலத் தலைவர் பதவி பறிப்பு! | Karnataka Chief Minister kumaraswamy has been removed from state party leader posting

வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (06/08/2018)

கடைசி தொடர்பு:14:20 (06/08/2018)

கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மாநிலத் தலைவர் பதவி பறிப்பு!

குமாரசாமி

டந்த மே மாதம், கர்நாடக மாநிலத்தில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதில் ஆட்சியமைப்பதற்குத் தேவையான மெஜாரிட்டி எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை. பா.ஜ.க 104 இடங்களையும், காங்கிரஸ் 78 இடங்களையும் கைப்பற்றியது. இந்த நிலையில், பா.ஜ.க-வை ஆட்சியமைக்க விடக்கூடாது என்ற முனைப்பில், கடந்த முறை ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ், 37 இடங்களை வென்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து, குமாரசாமியை முதல்வராக்கியது

குமாரசாமியின் தந்தையும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவராக இருந்து வருகிறார். குமாரசாமியின் பணிச்சுமையைக் குறைக்கவும், பொறுப்புகளைப் பகிர்ந்தளிக்கும் வகையிலும், அவரிடமிருந்த மாநிலத் தலைவர் பதவியை அந்தக் கட்சியின் குருபா இனத்தைச் சேர்ந்த விஷ்வநாத்துக்குக் கொடுத்திருக்கிறார் தேவகவுகடா. விஷ்வநாத் கடந்த மே மாதம்தான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


[X] Close

[X] Close