`நான் கொடுப்பது மட்டும்தான் சிக்னல்’ - திருநாவுக்கரசரின் கூட்டணி பேச்சுக்கு கமல்ஹாசன் பதில்

காங்கிரஸுடன் கமல்ஹாசன் கூட்டணி அமைக்க உள்ளார் என்ற திருநாவுக்கரசரின் கருத்தை கமல்ஹாசன் முற்றிலும் மறுத்துள்ளார். 

கமல்ஹாசன்

விஸ்வரூபம் -2 படத்தின் புரொமோஷனுக்காகச் சென்னையிலிருந்து டெல்லி புறப்படுவதற்கு முன், விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், “உள்ளாட்சித் தேர்தல் கண்டிப்பாக நடக்க வேண்டும். கிராம பஞ்சாயத்து முதல் ஒவ்வொன்றாகக் கூறிக்கொண்டு வருகிறோம். எங்களால் வேறு என்ன செய்ய முடியும். உள்ளாட்சித் தேர்தலை நடத்த மக்கள் நீதி மய்யமும் முயற்சி செய்யும். இதற்காக நாங்களும் நீதிமன்றம் செல்லலாம்” எனக் கூறினார். 

தொடர்ந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கமல்ஹாசன் கூட்டணி வைக்க சிக்னல் அளித்துள்ளதாகத் திருநாவுக்கரசர் கூறியிருப்பது உண்மையா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “நான் கொடுப்பதுதான் சிக்னல். நான் கூறியதாக திருநாவுக்கரசர் சொல்வது வெறும் செய்தி மட்டுமே. அது எப்படி நான் கூறியதாக ஆகும்” எனத் தெரிவித்துவிட்டுப் புறப்பட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!