Published:Updated:

இலங்கையை ஆதரிக்கும் நாடுகளின் பொருட்களை புறக்கணிப்போம் - கோவை மாணவர் கூட்டமைப்பு

கோவை: தமிழீழத்துக்கு எதிரான அரசியல் கட்சிகளை புறக்கணிக்கப் போவதாகவும், ஜெனீவா தீர்மானத்தில் இலங்கைக்கு சாதகமாக இருந்த நாடுகளின் பொருட்களை புறக்கணிக்க போவதாகவும் இனப்படுகொலைக்கு எதிரான மாணவர் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இனப்படுகொலைக்கு எதிரான மாணவர் கூட்டமைப்பின் சார்பில் கோவையில் கருத்தரங்கம் நடைபெற்றது. கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இக்கருத்தரங்கில்  இலங்கையில் தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற சட்ட மன்ற தீர்மானதிற்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.

##~~##
மேலும், சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தனி தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு மற்றும் இலங்கை அரசுக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானங்களை நாடாளுமன்றத்தில் முன் மொழிந்து அவற்றை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து பேசிய மாணவர் கூட்டமைப்பினர், ''தனித்தமிழ் ஈழம் தேவையில்லை எனவும் ஒன்றுபட்ட இலங்கை மட்டுமே போதுமானது என கூறும் தமிழீழத்திற்கு எதிரான அரசியல் கட்சிகளை புறக்கணிக்க வேண்டும்.
தமிழீழம் மட்டுமே பிரச்னைக்கு தீர்வு. ஜெனீவா தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவாகவும், நடுநிலையுடனும் செயல்பட்ட நாடுகளின் உற்பத்தி பொருள்களை புறக்கணிப்போம். ராஜபக்சேவை போர்குற்றவாளியாக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தும் வரை இந்தப் போராட்டம் ஓயாது" என்றனர்.
 
ச.ஜெ.ரவி