Published:Updated:

இலங்கை தமிழர்களை காக்க மத்திய அரசு தவறிவிட்டது: பிரவீன் தொக்காடியா குற்றச்சாட்டு

இலங்கை தமிழர்களை காக்க மத்திய அரசு தவறிவிட்டது: பிரவீன் தொக்காடியா குற்றச்சாட்டு
இலங்கை தமிழர்களை காக்க மத்திய அரசு தவறிவிட்டது: பிரவீன் தொக்காடியா குற்றச்சாட்டு

கோவை: இலங்கை தமிழர்களை பாதுகாக்க மத்திய அரசு முற்றிலுமாக தவறிவிட்டது என விஸ்வ இந்து பரிஷத் செயல் தலைவர் பிரவீன் பாய் தொக்காடியா குற்றம்சாட்டினார்.

விஸ்வ இந்து பரிஷத் கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் செயல் தலைவர் பிரவீன் பாய் தொக்காடியா இன்று மதியம் கோவை வந்தார்.

##~~##
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் இந்து கோவில்களில் கட்டணம் வசூலிக்கப்படுவது இந்து மதத்திற்கு எதிரான எனவும், தமிழக அரசின் இச்செயல் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறினார்.
இலங்கை தமிழர்களை பாதுகாக்க மத்திய அரசு முற்றிலும் தவறிவிட்டது என்றும் இலங்கையில் இந்து தமிழர்களை மறுகுடியர்த்த இலங்கை அரசிற்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும் எனவும் தொக்காடியா தெரிவித்தார்.
அதேபோல், தாக்குதலுக்கு உள்ளாகி வரும் தமிழக மீனவர்களை பாதுகாக்க மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
கோவையில் இன்றைய நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நாளை காலை கேரளாவிற்கு பிரவீன் பாய் தொக்காடியா புறப்பட்டு செல்கிறார்.