Published:Updated:

இலங்கை பிரச்னையில் மத்திய அரசு ராஜதந்திரம்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

இலங்கை பிரச்னையில் மத்திய அரசு ராஜதந்திரம்:  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
இலங்கை பிரச்னையில் மத்திய அரசு ராஜதந்திரம்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
இலங்கை பிரச்னையில் மத்திய அரசு ராஜதந்திரம்:  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

ஈரோடு: இலங்கை பிரச்னையில் காங்கிரசின் அணுகுமுறை நூற்றுக்கு நூறு: சரியானதே என்றும், மத்திய அரசின் ராஜதந்திரம் இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு புரியவில்லை என்றும் காங்கிரஸ்  கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்," இலங்கை தமிழர்களின் நலனுக்காக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு எடுத்து வருகிறது.

இங்கு போராட்டம் நடத்தும் வைகோ, பழ. நெடுமாறன் போன்றவர்கள் ஈழத்தமிழர்களின் மறுவாழ்வுக்காக என்ன செய்தார்கள்? போராட்டம் நடத்தினால் மட்டும் போதுமா? ஆனால் மத்திய அரசு போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மறுவாழ்வுக்காக .1000 கோடி ரூபாயில் வீடு கட்டி தருகிறது.

அமெரிக்கா தீர்மானத்தினை இந்தியா ஆதரிப்பது என்பது 3 மாதங்களுக்கு முன்பே எடுத்த முடிவு. ஆனால் மற்ற நாடுகளையும் இந்த பிரச்னையில் இந்தியா திசை திருப்பியதால்தான் 26 நாடுகள் இன்று இலங்கையை தண்டிக்க முன் வந்தன. இது மத்திய அரசின் ராஜதந்திரம் என்பது இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு புரியாது. தெரியாது.

##~~##
ராஜீவ்காந்தி காலத்தில் இலங்கை தமிழர்களுக்காக இந்திய அமைதிப் படை சென்றபோது இலங்கை ராணுவத்துடன் கைகோர்த்து கொண்டு பிரபாகரனே எதிர்த்தார். இப்போது இந்தியா படையெடுத்து தனி ஈழம் அமைக்க வேண்டியது தானே என்று கேட்கிறார்கள். மன்னர் ஆட்சி போன்று இப்போது உள்ள போர்முறை கிடையாது. இப்போது போர்தொடுத்தால் உலகம் அழியுமே தவிர இலங்கை மக்களுக்கு நிவாரணம் கிடைக்காது.
இலங்கை மீது பன்னாட்டு குழு விசாரணை சிக்கலானது. அந்த கோரிக்கையை முன் வைத்தால் காஷ்மீர் போன்ற மாநில பிரச்சினைகளிலும் பன்னாட்டு குழு விசாரணை வேண்டும் என்பார்கள். இலங்கை பிரச்சனையில் காங்கிரசின் அணுகுமுறை 100-க்கு 100 சரி. இதனை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும்" என்றார்.