Published:Updated:

எப்போதும் நிதானமில்லாதவர் விஜயகாந்த்: அன்புமணி சாடல்

எப்போதும் நிதானமில்லாதவர் விஜயகாந்த்: அன்புமணி சாடல்
எப்போதும் நிதானமில்லாதவர் விஜயகாந்த்: அன்புமணி சாடல்
எப்போதும் நிதானமில்லாதவர் விஜயகாந்த்: அன்புமணி சாடல்

திருவாரூர்: இப்போது கேப்டன் என்று ஒருவர் வந்திருக்கிறார், அவர் எப்போதும் நிதானத்திலேயே இருந்ததில்லை., இவர்களுக்கெல்லாம் தலைவர் கலைஞர் தான் என்று அன்புமணி ராமதாஸ் கடுமையாக சாடியுள்ளார்.

பா.ம.க. பொதுக்குழு கூட்டம் திருவாரூரில் நேற்று நடந்தது. இதில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். இதில் தான் உச்சபட்ச காமெடி நடந்திருக்கிறது.

கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஒன்றிய நகர நிர்வாகிகள் பலரும் வருங்கால முதல்வர் அன்புமணி ராமதாஸ் எனவும், வருங்கால ஜனாதிபதி மருத்துவர் அய்யா என்றும் பேசி அன்புமணியை ஐஸ் மழையில் நனைய வைத்தனர்.

இப்படி பேசும் போதெல்லாம் அன்புமணி முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பிரகாசம். இறுதியில் மைக் பிடித்த அன்புமணி ராமதாஸ், " 46 ஆண்டுகளாக இந்த தமிழகத்தை சினிமாத்துறையை சேர்ந்தவர்கள் தான் ஆண்டு வருகிறார்கள். வேறு எந்த மாநிலத்திலும் இந்த நிலை இல்லை. இப்போது கேப்டன் என்று ஒருவர் வந்திருக்கிறார். அவர் எப்போதும் நிதானத்திலேயே இருந்ததில்லை. இவர்களுக்கெல்லாம் தலைவர் கலைஞர் தான்.

##~~##
நாம் இனி எந்த கட்சியுடனும் கூட்டணி வைத்துக் கொள்ளப்போவதில்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு குறைந்தது 10 தொகுதிகளையாவது பிடிப்போம். அதோடு அடுத்து வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்று அடுத்த ஆட்சியை அமைப்போம்" என்றார்.
கூட்டம் முடிந்து வெளியில் வந்த சிலர் குடுத்த காசை விட கூடுதலா கூவுறாங்கப்பா நம்மாளுங்க என கமென்ட் அடித்தது தான் ஹைலைட்.
வீ.மாணிக்கவாசகம்