மோடியை கட்டி அணைத்தது என் கட்சியினருக்கே பிடிக்கவில்லை! - சொல்கிறார் ராகுல் காந்தி | rahul said When I hugged PM Modi in parliament some within my party did not like it

வெளியிடப்பட்ட நேரம்: 10:45 (23/08/2018)

கடைசி தொடர்பு:11:40 (23/08/2018)

மோடியை கட்டி அணைத்தது என் கட்சியினருக்கே பிடிக்கவில்லை! - சொல்கிறார் ராகுல் காந்தி

மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில், கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது, மோடியைக் கட்டி அணைத்தது எனது கட்சியினர் சிலருக்குப் பிடிக்கவில்லை என ராகுல் தெரிவித்துள்ளார். 

ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நான்கு நாள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து மற்றும் ஜெர்மனிக்குச் சென்றுள்ளார். அங்கு, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் ராகுல், முன்னதாக ஹாம்பர்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது, `கடந்த 70 ஆண்டுகளில் இந்தியாவின் முன்னேற்றப் பாதையைப் பற்றி பேசிய ராகுல், இந்தியாவில் வேலை பிரச்னை அதிகளவில் இருக்கின்றது. இதனைச் சரிசெய்ய பிரதமர் நரேந்திர மோடி முன்வர வேண்டும். ஆனால், அதனை ஏற்க மறுக்கிறார்' என்றார். 

இதைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமரும் அவரின் தந்தையுமான ராஜீவ் காந்தி பற்றியும் பேசினார். இலங்கை போரின்போது, என் தந்தையைக் கொலை செய்த நபரை சடலமாக கண்டபோது, அவரின் குழந்தைகள் அழுதுகொண்டிருந்தனர். அதைப் பார்க்க நான் விரும்பவில்லை' என்று பேசியவர், 

ராகுல்

மத்திய அரசுக்கு எதிராகக் கடந்த மாதம் (20-07-2018) மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது, யாரும் எதிர்பார்க்காத வகையில் மோடியை நான் கட்டி அணைத்தேன். இந்தச் செயல், என் கட்சியில் உள்ள சிலருக்கேப் பிடிக்கவில்லை' என ஆதங்கத்துடன் கூறினார்.