Published:Updated:

ஏப்ரல் 23 ல் மீனாட்சி திருக்கல்யாணம்: சித்திரை திருவிழா ஏற்பாடுகள் தொடக்கம்!

ஏப்ரல் 23 ல் மீனாட்சி திருக்கல்யாணம்: சித்திரை திருவிழா ஏற்பாடுகள் தொடக்கம்!
ஏப்ரல் 23 ல் மீனாட்சி திருக்கல்யாணம்: சித்திரை திருவிழா ஏற்பாடுகள் தொடக்கம்!

மதுரை: பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

ஏப்ரல் 23 ல் மீனாட்சி திருக்கல்யாணம்: சித்திரை திருவிழா ஏற்பாடுகள் தொடக்கம்!

இந்த ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயில்  சித்திரை திருவிழா ஏப்ரல் 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் சித்திரைத் திருவிழாவில் 21-ம் தேதி பட்டாபிஷேகமும் 22 ஆம் தேதி திக் விஜயமும் நடக்கிறது.விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் 23 ஆம் தேதி நடைபெறுவதை ஒட்டி சுமார் முப்பதாயிரம் பேர் அமரத் தக்க வகையில் பந்தல் அமைக்கப் படுகிறது. கொடை வெப்பத்தை சமாளிக்கும் வகையில் விழா ப்ந்தலில் 150 டன் எடை கொண்ட ஏ.சி. மெஷின் பொருத்தப்படுகிறது.

திருக்கல்யாண வைபத்தை அடுத்து 24 ஆம் தேதி திருத்தேர் பவனி நடக்கிறது. 25 ஆம் தேதி மீனாட்சி சித்திரை திருவிழா நிறைவுக்கு வரும் அதே நேரம் அன்று காலையில் கள்ள‌ழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடக்கிறது.  அழகர் திருவிழா விற்காக ஏப்ரல் 10 ஆம் தேதி அழகர்கோயிலில் கொடியேற்றம் நடக்கிறது. இம்மாதம் 30 ஆம் தேதியுடன் கள்ளழகர் திருவிழாவும் நிறைவுக்கு வருகிறது.

சித்திரை திருவிழா தொடங்கவிருப்பதால் மீனாட்சியம்மன் கோயிலில் மூன்றடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

-குளஸ்