பாலியல் புகாரில் சிக்கிய ஐஜியை மாற்ற வேண்டும் - கனிமொழி வேண்டுகோள்

பாலியல் புகாரில் சிக்கிய ஐ.ஜி முருகனை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என தி.மு.க எம்.பி கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். 

கனிமொழி

ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் பணியாற்றிய பெண் எஸ்.பி ஒருவர் அவரின் மேலதிகாரியான ஐ.ஜி முருகன் மீது பாலியல் புகார் தெரிவித்தார். இதையடுத்து கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் 5 நபர் கொண்ட விசாகா கமிட்டி அமைத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் விசாகா கமிட்டி பரிந்துரைத்துள்ளது. 

பாலியல் புகாரில் சிக்கிய ஐஜி முருகனை உடனடியாக பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என திமுக எம்.பி கனிமொழி தன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டில், “ காவல்துறையில் பாலியல் புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள குழு, பெண் எஸ்.பி ஒருவர் அளித்த புகாரை, சிபி சிஐடிக்கு அனுப்பி வழக்குப் பதிவு செய்யப் பரிந்துரை செய்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆளான ஐஜி முருகனை, இவ்வழக்கின் புலன் விசாரணை முறையாக நடக்க ஏதுவாக உடனடியாக லஞ்ச ஒழிப்புத் துறையை விட்டு மாற்ற வேண்டும். அவர் லஞ்ச ஒழிப்புத் துறையில் தொடர்வது, சாட்சிகளையும் தடயங்களையும் அவர் அழிக்க உதவும். தமிழக முதல்வர், இந்த விசாரணை நியாயமான முறையில் நடைபெறுவதற்கும், விசாரணையில் நம்பிக்கை ஏற்படுத்துவதற்கும் ஏதுவாக உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!