Published:Updated:

காரைக்கால் மீனவர்கள் 26 பேர் சிறைப்பிடிப்பு; இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

விகடன் விமர்சனக்குழு

காரைக்கால்: காரைக்கால் மீனவர்கள் 26 பேர்களை தாக்கி, அவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றுள்ளனர்.

காரைக்காலை அடுத்த பட்டினச்சேரியை சேர்ந்த 22 மீனவர்கள் 4 படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். நேற்று நள்ளிரவில் இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படை வீரர்கள், காரைக்கால் மீனவர்கள் மீன் பிடிப்பதை கண்டவுடன் ஆத்திரமடைந்தனர். 5 படகுகளையும் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். பிறகு அதில் இருந்த 26 மீனவர்களையும் கடுமையாக தாக்கினர். பிறகு 26 பேரையும் 5 படகுகளுடன் சிறைபிடித்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.

இலங்கை ராணுவத்தின் அட்டகாசத்தை கண்டு தூரத்தில் மீன் பிடித்து கொண்டிருந்த பிற மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி காரைக்காலில் உள்ள கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர்.

##~~##
இலங்கை கடற்படை வீரர்களால் காரைக்கால் பகுதி மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் காரைக்கால் மீனவ கிராம மக்களுக்கு தெரிய வந்தது. இதனால் அப்பகுதி மக்களிடையே பதட்டம் காணப்பட்டது.சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்க அரசு உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.