Published:Updated:

ஆஸி. செல்ல முயன்று நடுக்கடலில் தவித்த இலங்கை அகதிகள் 120 பேர் மீட்பு!

ஆஸி. செல்ல முயன்று நடுக்கடலில் தவித்த இலங்கை அகதிகள் 120 பேர் மீட்பு!
ஆஸி. செல்ல முயன்று நடுக்கடலில் தவித்த இலங்கை அகதிகள் 120 பேர் மீட்பு!
ஆஸி. செல்ல முயன்று நடுக்கடலில் தவித்த இலங்கை அகதிகள் 120 பேர் மீட்பு!

சென்னை: ஆஸ்திரேலியா தப்பிச் செல்ல முயன்று, காரைக்கால் அருகே நடுக்கடலில் சிக்கி தவித்த இலங்கை அகதிகள் 120 பேரை கடலோர காவல்படையினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர்.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அகதிகள் முகாம்களில் இருந்த பெண்கள், குழந்தைகள் என 120 இலங்கை தமிழர்கள், படகு ஒன்றில் அனுமதி இன்றி ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் சென்ற படகு இன்று காலை வேளாங்கண்ணி - காரைக்கால் இடையே சென்றபோது, படகின் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டது. இதனால் படகு மூழ்கும் நிலை ஏற்பட்டது. இது குறித்து அவர்கள் கடலோர காவல்படையினருக்கு செல்பேசி மூலம் தகவல் தெரிவித்தனர்.

இதனிடையே இது தொடர்பாக தகவல் அறிந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கடலில் மூழ்கும் நிலையில் இருக்கின்ற 120 ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுமாறு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி ஆகியோருக்கு அவசர வேண்டுகோள் விடுத்து கடிதம் அனுப்பி இருந்தார்.

##~~##
இந்நிலையில் வேளாங்கண்ணி - காரைக்கால் இடையே கடலில் சிக்கி தவித்த இலங்கை தமிழர்கள் 120 பேரையும் கடலோர காவல்படையினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர்.அதனைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டு படகு மூலம் காரைக்கால் கொண்டு வரப்பட்டனர்.
அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.