`எங்கே எனது தாயார் படம்...?' -கோபித்துக் கொண்டு வெளியேறிய பாஜக அமைச்சர்!

மத்திய பிரதேச மாநிலத்தின் விளையாட்டுத் துறை  அமைச்சர் யஷோதரா ராஜே சிந்தியா பங்கேற்ற கூட்டத்தில் தனது தாயார் புகைப்படம் வைக்கவில்லை என்றுகூறி கோபித்துக் கொண்டு மேடையை விட்டு கீழே இறங்கிய விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

பாஜக அமைச்சர் யஷோதரா ராஜே சிந்தியா

பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடக்கும் மாநிலத்தில் மத்திய பிரதேசமும் ஒன்று. மாநில பா.ஜ.க தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளும் முக்கிய கூட்டம் நேற்று தலைநகர் போபாலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க-வின் மூத்த தலைவரும், அம்மாநிலத்தின் விளையாட்டுத் துறை அமைச்சருமான யஷோதரா ராஜே சிந்தியாவும் கலந்து கொள்வதற்காக வந்தார். அப்போது, நிகழ்ச்சி மேடையில் பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களான  அடல் பிகாரி வாஜ்பாய், தீன்தயாள் உபாத்யாய், குஷபாவ் தாக்ரே உள்ளிட்டோரின் படங்கள் வைக்கப்பட்டிருந்தது.

இதனைக் கண்ட அமைச்சர், தனது தாயார் விஜயா ராஜே சிந்தியாவின் புகைப்படம் இடம்பெறவில்லை என்பதை அறிந்து கேள்வி எழுப்பியுள்ளார். இதனால், கோபம் கொண்ட அமைச்சர் மேடையில் ஏற மறுத்துவிட்டார். இதனையடுத்து, அமைச்சரை சமாதானப்படுத்த முயன்றனர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், தவறு நடந்துவிட்டது என்றுக் கூறி மீண்டும் மேடையில் விஜயா ராஜே சிந்தியாவின் புகைப்படத்தை வைத்தனர். இருப்பினும், முயற்சி தோல்வியில் முடிந்தது அவர் கடைசிவரை மேடையில் ஏறவில்லை.அமைச்சரின் தாயார் விஜயா ராஜே சிந்தியா பா.ஜ.க-வில் முக்கிய அங்கம் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!