தி.மு.க-வில் டி.ஆர்.பாலுவுக்கு முக்கியப் பொறுப்பு! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தி.மு.க-வின் முதன்மைச் செயலாளராக இருந்த துரைமுருகன், தற்போது பொருளாளராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிய முதன்மைச் செயலாளராக டி.ஆர். பாலு நியமிக்கப்பட்டுள்ளார். 

டி.ஆர் பாலு

தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி உயிரிழந்த பிறகு, தி.மு.க-வின் புதிய தலைவராக ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, முன்னதாக ஸ்டாலின் வகித்துவந்த செயல் தலைவர் பதவி கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக பொதுச்செயலாளர் அன்பழன் அறிவித்தார். அதேபோல, துரைமுருகன் முன்னதாக வகித்துவந்த முதன்மைச் செயலாளர் பதவி காலியானதைத் தொடர்ந்து, தற்போது அந்தப் பொறுப்பு முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர் பாலுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ கழக சட்டவிதி 17-ன்படி, தி.மு.க முதன்மைச் செயலாளராக டி.ஆர். பாலு தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!