`ராமதாஸின் மனநிலை என்ன?' - ஆர்வத்துடன் விசாரித்த மோடி தம்பி | What is the status of ramadoss? - Asks modi brother Prahlad Modi    

வெளியிடப்பட்ட நேரம்: 17:37 (18/09/2018)

கடைசி தொடர்பு:17:46 (18/09/2018)

`ராமதாஸின் மனநிலை என்ன?' - ஆர்வத்துடன் விசாரித்த மோடி தம்பி

மத்திய அரசின் திட்டங்களுக்கு, 'டெல்டா மக்களின் மனநிலை எப்படியிருக்கிறது?' என்பதைப் பற்றி வெளிப்படையாகவே அவரிடம் எடுத்துக் கூறினேன்.

`ராமதாஸின் மனநிலை என்ன?' - ஆர்வத்துடன் விசாரித்த மோடி தம்பி

பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் மோடியைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் அண்ணா திராவிடர் கழகத்தின் இளைஞர் அணிச் செயலாளர் ஜெய் ஆனந்த். நாடாளுமன்றத் தேர்தல், தமிழக அரசியல் சூழல் எனப் பல விஷயங்கள், இந்த விவாதத்தில் இடம் பெற்றுள்ளது. 

'பிரகலாத்திடம் என்ன பேசினீர்கள்?' என ஜெய் ஆனந்திடம் கேட்டோம். 

"தமிழகத்தில் உள்ள ஒவ்வோர் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் குறித்துப் பேசினோம். டெல்டா மக்களின் பிரச்னைகள் குறித்து எடப்பாடி பழனிசாமிஅவரிடம் விவரித்தேன். மத்திய அரசின் திட்டங்களுக்கு, 'டெல்டா மக்களின் மனநிலை எப்படியிருக்கிறது?' என்பதைப் பற்றி வெளிப்படையாகவே அவரிடம் எடுத்துக் கூறினேன். நான் கூறிய அனைத்து விவரங்களையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டார். இப்படியொரு எளிமையான மனிதரைப் பார்க்க முடியாது. குஜராத்தி உணவுகளை அவரே எடுத்து வந்து சாப்பிடக் கொடுத்தார்."  

அவரைச் சந்திக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? 

"இருவருக்கும் இடையில் பொதுவான நண்பர் ஒருவர், 'நீங்கள் அவரைச் சந்திக்க வேண்டும்' எனக் கூறினார். ஆறு மாதமாகவே சந்திப்பது குறித்து பேசப்பட்டு வந்தது. இன்று நடந்த இந்தச் சந்திப்பில் தேர்தல் வியூகம் குறித்து எதுவும் பேசவில்லை. எங்களைப் பற்றி அவர் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார். நட்புரீதியான சந்திப்பு இது." 

அ.தி.மு.க குறித்து அவர் என்ன சொன்னார்? 

"அதைப் பற்றி பெரிதாக எதுவும் சொல்லவில்லை. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட இருக்கும் திட்டங்களைப் பற்றி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதைப் பற்றி எங்களிடம் தெரிவித்தார். 'விவசாயிகளின் தண்ணீர் பிரச்னையைத் தீர்க்கும் வகையில் தடுப்பணைகள் கட்டப் போகிறோம்' என முதல்வர் கூறியதாகத் தெரிவித்தார். இதையடுத்து, ஒவ்வோர் அரசியல் கட்சிகள் குறித்தும் அவருடைய கருத்தைத் தெரிவித்தார். பா.ம.க-வைப் பற்றித் தெரிந்துகொள்ள ரொம்பவே விருப்பப்பட்டார். 'அவர்களுடைய பிரசன்ட் ஸ்டேட்டஸ் என்ன?' எனக் கேட்டறிந்தார். தி.மு.க-வுக்கு வரக்கூடிய தேர்தல் எப்படியிருக்கும் என்பதைப் பற்றியும் அவருடன் வந்தவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். நல்ல சந்திப்பாக இது அமைந்தது."


[X] Close

[X] Close